மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்


பொன்விழா இலக்கியப் போட்டிகள்


(செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி, துணைச் செயலாளர்.)

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இலக்கியப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்து மலேசியர்களும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ளலாம்.

 

தமிழ் நேசன் இதழுடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி

 

சிறுகதைகள் மலேசியத் சூழலைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே வேறு எந்தப் போட்டிக்கும் அனுப்பப்பட்ட கதைகளாகவோ, பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளாகவோ இருக்கக்கூடாது. ஏ4 தாள் அளவில் கணினிப் பிரதியாக 6 முதல் 8 பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதை இருக்க வேண்டும். சிறுகதை இலக்கியத்திற்குரிய கலைத்தன்மையும், கட்டுக்கோப்பையும் சிறுகதைப் படைப்பு கொண்டிருத்தல் வேண்டும்.

 

முதற்பரிசு            : ரி.ம. 3,000.00

இரண்டாம் பரிசு        : ரி.ம. 2,000.00

மூன்றாம் பரிசு        : ரி.ம. 1,000.00

ஆறுதல் பரிசுகள் (5)     : ரி.ம. 500.00

 

அனுப்ப வேண்டிய முகவரி:

 

  • சிறுகதைப் போட்டி (தமிழ் நேசன்)

TAMIL NESAN,

23, JALAN SBC

TAMAN SRI BATU CAVES

68100 BATU CAVES, SELANGOR

மலேசிய நண்பன் நாளிதழுடன் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி

 

மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கருத்தின் அடிப்படையில் கட்டுரைகள் அமைய வேண்டும். (பொருளாதாரம், கல்வி, மொழி, கலை, பண்பாடு). கட்டுரை 6 முதல் 8 பக்கங்களுக்கு மேற்போகாமல் கணினிப் பிரதியாக ஏ4 தாள் அளவில் இருக்க வேண்டும். கட்டுரைகள் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கேற்ப கருத்துச் செறிவோடும் போதிய விளக்கங்களோடும் தக்க சான்றுகளோடும் இருத்தல் வேண்டும்.

முதற்பரிசு            : ரி.ம. 3,000.00

இரண்டாம் பரிசு        : ரி.ம. 2,000.00

மூன்றாம் பரிசு        : ரி.ம. 1,000.00

ஆறுதல் பரிசுகள் (5)     : ரி.ம. 500.00

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

  • கட்டுரைப்போட்டி (மலேசிய நண்பன்)

MALAYSIA NANBAN

544-3 BATU COMPLEX

51200 KUALA LUMPUR

 

தினக் குரல் நாளிதழுடன் இணைந்து நடத்தும் மரபுக்கவிதைப் போட்டி

 

மரபுக்கவிதை மொத்தம் 8 முதல் 10 கண்ணிகளுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும். பாடுபொருள் மலேசிய இந்தியர்களின் வாழ்வியலைப் பற்றியதாக இருக்க வேண்டும். கவிதை எந்தப் பாவினத்திலும் இருக்கலாம்.

 

முதல் பரிசு        : ரி.ம. 2,000.00

இரண்டாம் பரிசு     : ரி.ம. 1,000.00

மூன்றாம் பரிசு    : ரி.ம. 750.00

ஆறுதல் பரிசு (5)    : ரி.ம. 250.00

அனுப்பவேண்டிய முகவரி:

 

  • மரபுக்கவிதை (தினக்குரல்)

THINAKURAL

11 JALAN MURAI 2

BATU COMPLEX

51200 KUALA LUMPUR

மக்கள் ஓசை நாளிதழுடன் இணைந்து நடத்தும் புதுக்கவிதைப் போட்டி

 

புதுக்கவிதையில் பாடுபொருள் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். கணினிப் பிரதியாக 30 முதல் 50 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்துச் செறிவும் அடர்த்தியும் படைப்பில் இருத்தல் வேண்டும்.

 

முதல் பரிசு        : ரி.ம. 2,000.00

இரண்டாம் பரிசு     : ரி.ம. 1,000.00

மூன்றாம் பரிசு    : ரி.ம. 750.00

ஆறுதல் பரிசு (5)    : ரி.ம. 250.00

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

  • புதுக்கவிதை (மக்கள் ஓசை)

MAKKAL OSAI

NO 19, JALAN MURAI DUA,

BATU COMPLEX,

OFF JALAN IPOH

51200 KUALA LUMPUR

பொது விதிமுறைகள்

 

  1. சிறுகதை, கட்டுரை, புதுக்கவிதை ஆகிய போட்டிகளுக்கான படைப்புகள் கணினியில் எழுத்துரு 12 அளவில் (font 12) தட்டச்சு செய்திருக்க வேண்டும். மரபுக்கவிதை மட்டும் கையெழுத்திலும் எழுதப்படலாம்.

 

  1. படைப்பாளர் தனித்தாளில் தம் பெயர், முழு முகவரி (மலாய்), கைப்பேசி/தொலைபேசி எண்ணையும் எழுதி, அடையாள அட்டை நகலோடு இணைக்க வேண்டும்.

 

  1. முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைத் தவிர்த்து ஆறுதல் பரிசுக்குரிய படைப்புகள் நீதிபதிகள் நிர்ணயம் செய்யும் தரத்திற்கு இருந்தால் மட்டுமே வழங்கப்படும்.

 

  1. படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதித் தேதி: 10.09.2012. அதற்குப் பின்வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.

 

  1. போட்டிகளில் வெற்றி பெறும் படைப்புகள் பொன்விழா மலரில் இடம் பெறும்.

 

  1. பரிசளிப்பு விழா, பொன் விழா கொண்டாட்டத்தின் போது நடைபெறும்.

போட்டிகளில் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

 

Series Navigationதமிழ் ஸ்டுடியோவில் அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணல்