மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.

Spread the love

 

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையினரால் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்காணி ஆய்விருக்கை சார்பில், ஆண்டு தோறும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களுக்கு கரிகாலன் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்ன. 2010 மற்றும் 2011க்கான விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவுடன் தலை நகர் குவால லும்பூரில் நடைபெறவிருக்கிறது.  இவ்விழா வரும் மார்ச் 10ஆம் நாள் காலை 9.30 மணிக்கு கிராண்ட் பசிஃபிக் விடுதியில் நடைபெறும்.
2010ஆம் ஆண்டுக்கான கரிகாலன் விருதுகள் மலேசிய எழுத்தாளர் ந.மகேஸ்வரியின் “நினைவுகளைச் சுமந்தபடி” என்னும் நூலுக்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் கமலா தேவி அரவிந்தனின்  “நுவல்” என்னும் நூலுக்கும் வழங்கப்படுகின்றன.
2011ஆம் ஆண்டுக்கான கரிகாலன் விருதுகள் மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் “நீர்மேல் எழுத்து” என்னும் நூலுக்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் மா.இளங்கண்ணனின் “குருவிக்கோட்டம்” என்னும் நூலுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருமலை நேரில் வந்து வழங்குவார். முஸ்தபா அறக்கட்டளையின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்களும் பல்கலையின் அயலகத் தமிழ்க் கல்வித் துறையின் தலைவர் முனைவர் கார்த்திகேயன் அவர்களும் பேராசிரியர் உதயசூரியன் அவர்களும் முன்னிலை வகித்துச் சிறப்பிப்பார்கள்.
மலேசிய சிங்கப்பூர் இலக்கியங்களை தமிழ் உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்காகச் செய்யப்படும் தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூரின் இந்தக் கூட்டு முயற்சிக்கு தமிழ் ஆதரவாளர்கள் திரளாக வந்து ஆதரவு தரவேண்டுமென மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !