author

தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு

This entry is part 18 of 24 in the series 8 பெப்ருவரி 2015

  (முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.)     ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நானும் போயிருந்தேன். நம்ம நாட்டில் அதுவும் நான் வாழும் ஊரில் நடக்கிறது. எப்படிப் போகாமல் இருப்பது? அது மட்டும் அல்ல. முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நான் ஒரு ஊழியனாக இருந்து பணிபுரிந்துள்ளேன். தவத்திரு தனிநாயகம் அடிகளார் தலைவராக இருந்த மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வுத்துறையில் நான் ஒரு மாணவனாக இருந்தேன். […]

அண்ணன் வாங்கிய வீடு

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

ரெ.கார்த்திகேசு   ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வேலு ஒரு அட்டையைப் பரப்பிக் கீழே படுத்திருந்தான். நட்டுத் துருப்பிடித்துக் கிடந்தது. ஆண்டுக் கணக்கில் கிரீசைக் காணாத நட்டு. காரை சர்வீஸ் பண்ணி எத்தனை வருஷமோ தெரியவில்லை. அப்படிக் கார்கள்தான் இந்தப் பட்டறைக்கு வருகின்றன. ஓலைக்குடிசையின் கீழ் ‘ஓ’வென்று கிடக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பட்டறைக்கு வேறு என்ன மாதிரி கார்கள் வரும்? […]

பத்மா என்னும் பண்பின் சிகரம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

(மலேசியப் பொருளாதார வல்லுநர் மறைந்த டத்தோ கு.பத்மநாபன் அவர்களின் வரலாற்று நூலின் அறிமுக அத்தியாயம்: நூலாசிரியர் பெ.இராஜேந்திரன். இந்த நூல் ஜூன் 10ஆம் தேதி மலேசியத் தலைநகரில் வெளியீடு காண்கிறது.) மலேசிய இந்தியர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் டத்தோ கே. பத்மனாபன். மலேசியப் பொருளாதாரம் தனது காலனியக் கட்டுக்களை அறுத்துக்கொண்டு மிகத் தீவிரமாக வளர்ச்சியடைந்து வந்த ஆண்டுகள் 1970களில் தொடங்கின. துன் ரசாக், துன் ஹுசேன் ஓன், துன் மஹாதீர் […]

திண்ணையின் எழுத்துருக்கள்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

அன்புடை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையின் எழுத்துருக்கள் பழைய முறைக்கு மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்? பிற்போக்காக இருக்கிற்தே! இந்த மாற்றம்  பற்றிய அறிவிப்பு எதனையும் நீங்கள் வெளியிட்டிருந்தால் நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம். சுட்டிக் காட்டுங்கள். இல்லையானால் இது பற்றிய விளக்கம் ஒன்று திண்ணையில் வெளியிடுவது நல்லது. ரெ.கா.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.

This entry is part 25 of 26 in the series 24 பிப்ரவரி 2013

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திவரும் நாவல் போட்டியின் வரிசையில் மூன்றாம் போட்டி 2012இல் தொடங்கப்பட்டது. அப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கடந்த பெப்ரவரி 21அன்று மலேசியத் தலை நகர் குவால லும்பூரில் நடைபெற்றது. முதன்மைப் பரிசு ஆதி.குமணன் நினைவுப் பரிசான 10,000 ரிங்கிட்டையும் சென்னைக்குச் சென்றுவரும் விமான டிக்கட்டையும் வென்றவர் “துளசி” எனும் நாவலை எழுதிய ஓர் புதிய இளம் எழுத்தாளரான மாதுரி மனோகரன். முதல் பரிசான […]

மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.

This entry is part 21 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையினரால் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்காணி ஆய்விருக்கை சார்பில், ஆண்டு தோறும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களுக்கு கரிகாலன் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்ன. 2010 மற்றும் 2011க்கான விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவுடன் தலை நகர் குவால லும்பூரில் நடைபெறவிருக்கிறது.  இவ்விழா வரும் மார்ச் 10ஆம் நாள் காலை 9.30 மணிக்கு கிராண்ட் பசிஃபிக் விடுதியில் நடைபெறும். 2010ஆம் ஆண்டுக்கான […]

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012

This entry is part 11 of 34 in the series 28அக்டோபர் 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கிவரும் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012ஆம் ஆண்டுக்கான விழாவை கடந்த அக்டோபர் 7ஆம் நாள் பெந்தோங் நகரில் சிறப்பாக நடந்தேறியது. இவ்வாண்டுக்கான 7000 மலேசிய ரிங்கிட் பரிசு (1,19,000 இந்திய ரூபாய்) கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் “தேன் கூடு” என்னும் கவிதை நூலுக்கு அளிக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் நடுவர்கள் குழுத் தலைவரான முனைவர் ரெ.கார்த்திகேசு நிகழ்த்திய  உரை வருமாறு: இந்த ஆண்டு மரபுக் […]

2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.

This entry is part 5 of 44 in the series 22 ஏப்ரல் 2012

(2000ஆம் ஆண்டு மலர்ந்த போது எழுதிய கட்டுரை; மு.வ.நூற்றாண்டில் நினைவுகூரப்படுகிறது) முன்னுரை: தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து சிந்தித்த தீர்க்க தரிசன எழுத்துக்கள், இலக்கியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தை அடிக்கடி திரும்பிப்பார்த்து நெஞ்சம் விம்முவது தவிர்த்து, முறையாகச் சிந்தித்து இப்படி இருக்கும் என்றோ, இப்படி இருக்க வேண்டும் என்றோ நமக்குச் சொன்னவர்கள் அதிகம் இல்லை. ஜோசியர்கள் தனிப்பட்டவர்களுக்குச் சொல்லுகிறார்கள். சமுகத்திற்குச் சொல்லுவதில்லை. அரசு பட்ஜெட்டில் மட்டும் அடுத்த ஆண்டு என்றும் அடுத்த ஐந்தாண்டுகள் என்றும் எதிர்காலம் சிந்திக்கப் […]

சந்ததிகளும் ரப்பர் உறைகளும்

This entry is part 31 of 45 in the series 26 பிப்ரவரி 2012

  புதுக்கவிதை என்பது அதன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது என நான் அதனைப் படிக்க நேரும்போதெல்லாம் நினைப்பதுண்டு. அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் புதுக்கவிதைகள் மரபிலிருந்து புதிதாகப் பிரிந்தவை ஆதலாலும், அந்தக் குழுமக் கவிஞர்கள் மரபுக்கவிதையின் அழகியலையும் அதன் ஆன்மாவையும் சுவைத்திருந்ததாலும், அந்த “சுட்ட சட்டி சட்டுவத்தில்” கவிதையின் ஆன்மா கொஞ்சம் ஒட்டியிருந்தது.   ஆனால் நமது காலத்தில் புதுக் கவிதை என்றும் நவீன கவிதை என்றும் பின்நவீனத்துவக் கவிதை என்றும் […]

புதிதாய்ப் பிறத்தல்!

This entry is part 14 of 39 in the series 4 டிசம்பர் 2011

பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் யாத்தி! விடு!” என்று சோறு ஊட்டிக்கொண்டிருந்த பணிப்பெண்ணைத் தடுத்தேன். எப்போதும் என்னிடம் கதையளப்பவள் இன்று அமைதியாகவே இருந்தாள். கொஞ்ச நேரம் தன்னுடைய வர்ணம் தீட்டும் புத்தகத்தை எடுத்து கிரேயோன்களால் வர்ணம் தீட்ட முயன்று, சோர்ந்து அவள் உட்கார்ந்த இடத்திலேயே படுத்துவிட்டாள். நான் மல்லியைத் தூக்கி படுக்கையில் கிடத்தினேன். தூக்கியபோது […]