மழையின் பிழையில்லை

– சேயோன் யாழ்வேந்தன்

நன்றிகெட்டு மாமழை தூற்றுதும்
நாகரிகக் கோமாளிக் கூட்டம்.
நீர்த்தடங்களை மறித்து
மனைகளாக்கிய சுயநலம்,
வடிகால்களை பாலிதீனால்
நிரப்பிய கொடூரம் மறைத்து
மழைநீர் சேகரிப்புத்தொட்டிகள்
பழுதடைந்ததுதான் காரணமென
விதி எண் 110ன் கீழ் வெள்ளை அறிக்கை!
குடும்பத்துக்கு ஓர் இலவசப் படகு
அடுத்த தேர்தல் அறிக்கை!
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
இப்படித்தான் நிரம்பியிருக்கும் கடல்கள்.
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationசகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.தொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்