மாயச் சங்கிலி!

இல.பிரகாசம்
உன் மீதும்
என் மீதும் யாரோ ஒருவர்
விலங்கிடப்பட்ட மாயச் சங்கிலி போல்
உறவுமுறை கொண்டு
கட்டுப்படுத்திக் கொண்டே வருகின்றனர்.

உன் மீது நானும்
என் மீது நீயும் ஏதோ ஒருவேளையில்
ஒரு மாயசங்கிலி போல்
பொய்யான அல்லது பொய்த்துப் போகும்
கானல் நீர்க்கனவு போல்
ஏதேதோ ஒரு பெயர்களைச் சொல்லி
தற்காலிக
உறவுப்; பெயர்களை சூட்டிக் கொள்கிறோம்.

உதரத்திலிருந்து நீயும் நானும் பிறக்கின்ற போது
சக -உதரனாகி சகோதரனாகிறோம்.

உறவுமுறைகள் சதைகளுக்கு இடையில் மட்டுமா?
பெயரிடப்படாத உறவுமுறைகள் ஒரு குழு உண்டல்லவா?

தவறுகளை இயற்கை ஏற்றுக் கொண்ட
காலம் இது!
காலவழு
வழுவமைதியாகி
இலக்கணமாகி விட்டது.

உறவுகள் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு
உடன் வந்து கொண்டேயிருக்கின்றன.
சதைகள் கிழிந்து சீழ்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Series Navigationஇலங்கைப் பயணம் சில குறிப்புகள்தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா