மாலையின் கதை

Spread the love

மாலை ஒன்று வாங்கினேன்

வரிசை வரிசையாய் மல்லிகை

‘வணக்கம் வணக்கம்’ என்றது

ரோஜாக்கள் சுற்றி வந்து

‘ஆரத்தி’ என்றது

நாணில் கொத்துப் பூக்கள்

‘நலமா..நலமா..’ என்றது

அதன் மோகனப் புன்னகையில்

நான் மேகமென மிதந்தேன்

மாலையில் ஒரு விழா…

தலைவரின் கழுத்தில்

மாலையைத் தவழவிட்டு

‘வாழ்க தலைவர்’ என்றேன்

விழா முடிந்தது

வீடு திரும்பினேன்

யாரது கூப்பிட்டது?

திரும்பிப் பார்த்தேன்.

கோணிச் சாக்கில் பிதுங்கி

கழுத்து நீட்டி

கண்ணீர் விட்டது

என் மாலை

அமீதாம்மாள்

Series Navigationகவிதையும் ரசனையும் – 3சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்