மீப்புனைவாளன்

இல.பிரகாசம்

சிற்பி ஒருவன்
தனது கையில் சிற்பத்தை செதுக்கிய கல்லின் தோலை வைத்திருந்தான்
உளியெங்கே என்றேன்
கல்லுள் மறைந்திருந்த சிற்பம் கைப்பற்றிக் கொண்டது.
பின்,
மீதிருந்த இந்தக் கல்தோலை
நார் போல உரித்துக் கொடுத்ததாகச் சொன்னான்.

அவன் மீப்புனை வுலகைச் சேர்ந்தவனா?
இந்த இஸத்தில் இவன் எப்படி மாட்டிக் கொண்டிருப்பான்.
கவிதையென்று சொல்லி யாரைக் கொல்லப் போகிறாய் என
அச்சிறப்பம் ஓவென குரலெடுத்து ஓலமிட்டது.

            -இல.பிரகாசம்
Series Navigation5. பாசறைப் பத்துமாலை – குறும்கதை