முகம்


 

உயரத்தில் பருந்து

கண்கள் இரை மீது

புத்தகத்தில்

கிழிக்கப்பட்ட பக்கங்களில்

என்ன ஒளிந்திருக்கும்

நாட்கள் தான்

வேறு வேறு

மாற்றங்கள் எதுவுமில்லை

நீர்க்குமிழி வாழ்க்கை

இறைவன் வகுத்த

நியதிப்படி

விசேஷமான நாள்

பரிசாக ஒரு பனித்துளி

கோர முகம்

ஒற்றைக் கண்

பீதியூட்டுகிறது

நிலவு காய்கிறது

ஒரு குழந்தை

இரவை அள்ளிப் பருகுகிறது

பழைய புத்தகம்

நடுவே மயிலிறகு

விலைமதிப்பற்றதாய்.

 

 

Series NavigationNational Folklore Support Centre Newsletter September 2011வலியது