முதல் பயணி

Spread the love

 

 

நான் தான்

அந்த காட்டுப்பாதையின் முதல் பயணி.

 

பாதை நெடுகிலும் மண்டிக்கிடந்தன முட் புதர்கள்.

என் கால்களை முட்கள் கிழித்த போதும்

எனக்கு பின்னால் நடந்து வருபவர்களின்

கால்களை குத்திக் கிழிக்காமல் இருக்க

அவைகளை வெட்டிச் சாய்த்து நல்ல பாதை செய்தேன்

 

இப்போது என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்..

அவர்களின் பாத சுகத்திற்காக

அந்த பாதையில்

நான் மலர்களைத் தூவவில்லை என்று.

 

 

Series Navigationநானும் நீயும் பொய் சொன்னோம்..அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)