முன்னும் பின்னும்

எஸ் . அற்புதராஜ்

பின்னால் போனவன்
சுப்ரமணீ….! என்று
கூப்பிட்டான்.

முன்னால் போனவள்
திரும்பிப் பார்த்து
‘enna?’ என்றாள் கண்களால்.

‘நீயா சுப்பிரமணி?
நான் உன்னைக் கூப்பிடவில்லையே.

‘நான் சுப்பிரமணி இல்லை
உன்னைப் பார்க்கவும்இல்லை.
‘பிறகு?’
‘பிறகென்ன?’

“அதோ பார் சுப்பிரமணி
உனக்குப் பின்னால்.”

அவன் பின்னல் திரும்பினான்.

அவள் முன்னே வேகமாக நடந்தாள்.
அவன் பின்னே மெதுவாக நடந்தான்.

Series Navigationநெஞ்சுக்குள் உன்னை அடைப்பேன் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்