முள்வெளி அத்தியாயம் -17

This entry is part 14 of 32 in the series 15 ஜூலை 2012

சத்யானந்தன்

மதியம் மணி இரண்டு. கிருட்டினன் கவிதையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்திருந்த கவிஞனான அவனுக்குத் தன் படைப்புகளை யாரும் தன் எதிரில் படிப்பது வரவேற்கத் தக்கதல்ல. தனது அருகாமையின் கட்டாயத்தால் தான் அவர்கள் படிக்கிற மாதிரி ஒரு தோற்றம் வந்து விடுகிறது. கண்படாமல் மேம்போக்காகப் படித்து விட்டுப் பிறகு ‘நன்றாக இருக்கிறது’ என்னும் வெற்று இரு வார்த்தைகளால் உற்சாக கர்வத்தைத் தகர்ப்பதே தேவலாம்.

கிருட்டினன் தமது வீட்டு வரவேற்பறையில் நடத்தும் இலக்கிய அமர்வுகளில் கவனம் பெறுமளவு அவன் இன்னும் சோபிக்கவில்லை. கிருட்டினன் நடத்தும் சிறு பத்திரிக்கையில் அவன் கவிதை வெளி வந்த போது பஸ் பிடித்துப் போய் பார்த்து நன்றி தெரிவித்தான். ஆனால் அவனது அடுத்த மூன்று நான்கு கவிதைகளை அவர் பிரசுரிக்கவில்லை. அவர் விமர்சித்த விதம் ஓரளவு தன்னை சுய விமர்சனம் செய்து, தனது படைப்புகளை செம்மைப் படுத்த அவனுக்கு உதவியது.

கிருட்டினன் படித்து முடித்து விட்டு “அனேகமா இதையும் நான் வெளியிட மாட்டேன்” என்றார்.

“தேறலைங்களா?”

“இல்லே. நல்லா வந்திருக்கு கவிதை. கூர்மையானது. குறி தவறாம பாய வேண்டிய இடத்தில பாயும்”. பிறகு என்னவாம்? ஓரிரு நொடி இடைவெளிக்குப் பின் “களத்துல இறங்கற வலிமையும், உங்களுக்காகப் பேசற குழுவும் உருவாகற வரைக்கும் இந்தக் கவிதை வரக் கூடாது…”

“ஏன் ஸார்? இலக்கியத்துக்கு குழு இல்லாம முடியாதா? ”

“அமைப்புகளை ஒட்டு மொத்தமா விமர்சிச்சிருக்கீங்க.. என் சிறு பத்திரிக்கையும் அதோட ஆசிரியர் குழுவும் கூட ஒரு அமைப்புத் தானே?”

“அமைப்புக்குள்ளே இருக்கிற கட்டுப்பாடுகளையும் அதே சமயம் அமைப்புகளே காலத்தோட கட்டாயமான அவசியங்கள் அப்படிங்கிற மாதிரி இரு பொருளும் இணைந்து வர்ற மாதிரி தானே எளுதி இருக்கேன்”

“உங்க ஆளுமை இதைச் சொல்லுற அளவுக்கு அங்கீகரிக்கப் பட்டிருக்கணும். வளந்தவங்க சர்ச்சைகள் மூலமா மேலும் தன்னை ஸ்திரப்படுத்திக்கலாம். ஆனா வளரும் முன்னாலே சர்ச்சைகளில மாட்டிக்கக் கூடாது..”

“சிறு பத்திரிக்கையில கூட சுதந்திரமா எளுத முடியாதா ஸார்?

“சர்ச்சைகளைச் சுமக்கும் போது அந்தப் பத்திரிக்கைக்கும் எதிர் வினையத் தாங்கிக்கிற கட்டாயம் வரும். அதுக்கான த்ராணி என் பத்திரிக்கையையும் சேத்து பல சிறு பத்திரிக்கைகளுக்குக் கிடையாது”

அவர் சொன்ன பதில் அவ்வளவு சமாதானமாகப் படவில்லை. என்றாலும் தன் மீது அவர் இதுவரை நிறையவே மரியாதையும் அக்கறையும் காட்டி இருக்கிறார். மூத்த எழுத்தாளராயிருந்தாலும் இவனைக் கத்துக்குட்டி போல நடத்தியதே கிடையாது.

பேச்சு திசைமாறி ப்ரேம்-ரமேஷ் “பின் நவீனத்துவ எழுத்து என்று எதுவும் கிடையாது. பின் நவீனத்துவ வாசிப்பு என்னும் அணுகு முறை வேண்டும்” என்பாதாகத் தான் புரிந்து கொண்ட கருத்தை அவன் கூறியதும் அவர் தமது அபிப்ராயத்தை சொல்ல ஆரம்பித்தார்.

பசி வயிற்றைக் கிள்ளிய போதுதான் மணி இரண்டடித்து விட்டது தெரிந்தது.

கிருட்டினனைப் பார்த்தாலே உணவு அவருக்கு அவ்வளவு அக்கறைக்குரிய விஷயமில்லை என்பது தெரியும். ஞாயிறு பகலில் அவர் வீட்டில் யாரேனும் தூங்க விரும்பினாலும் ‘சளசள’வென்று பேச்சு சத்தம் தொல்லையாக முடியக் கூடாது. மனைவியுடன் எங்கேயோ வெளியே போக வேண்டும் என்று சொல்லிக் கிளம்பினான்.

பஸ்ஸில் ஏறியதும் பைக்குள் கை விட்டால் பத்து ரூபாயும் சில்லறைகளுமே தென்பட்டன. போனவுடன் அவள் “கைமாத்தா வாங்கி வாரேன்னீங்களே, கிடச்சிதா?” என்பாள்.

இவர் தனக்கு பதில் சொன்னது போல் துல்லியமாய் விளக்கி பதில் சொல்ல முடியாது. அவள் அதை எதிர்பார்க்கவும் மாட்டாள்.

**__
**__**
**
லதாவின் ‘மொபைல்’ ஒலித்தது. “மேடம்.லேடீஸ் மேகஸைன் இன்டர்வியூவுக்காக உங்களைப் பாக்க சுந்தரின்னு ஒரு மேடம் வந்திருக்காங்க..”

“டூ மினிட்ஸ்.. கீழே வரேன்.”

சுந்தரி தன் வயதை ஒட்டியவளாகத் தோன்றினாள். சற்றே பதட்டமாக இருந்தாள்.

“வணக்கம்”

“ஐ ஆம் சுந்தரி”

“நைஸ் மீட்டிங் யூ… ‘பற்றாக்குறை’ ன்னு ஒரு ஸ்டோரி. எடிட்டர் என் கிட்ட கொடுத்துப் படிக்கச் சொன்னாரு. படிச்சேன். “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ” ன்னு ஒரு ‘ஸாங்’ பாடறதுக்கு ஒருத்தரை சஜ்ஜெஸ்ட் பண்ணச் சொன்னீங்களாம். நான் ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். எனக்குப் பாட வரும்.’

“கொஞ்சம் மூச்சு விட்டுக்கறீங்களா? ” சூழலை சற்றே இளக்கும் விதமாகக் கேட்டாள் லதா.

“ஸாரி.. நீங்க ரொம்ப பிஸின்னு கேள்விப்பட்டிருக்கேன். அதான்.”

“நெவர் மைன்ட்.”

காபி வந்தது.

‘ப்ளிஸ்’ என்று அவளை அமர வைத்தாள் லதா.

“இன்டர்வ்யூவை ஆரம்பிக்கலாமா?”

“ப்ளீஸ்.. ப்ரொஸீட்..”

சுந்தரி தன் மொபைலில் ஒரு பொத்தானை அழுத்தினாள். ‘மொபைல்லேயே ரெகார்ட் பண்ணிக்கறேன் மேடம்’

‘ஓகே’

“நீங்க இந்த ப்ரொஃபெஷனுக்கு எப்படி வந்தீங்க?”

“நான் காலேஜ் முடிச்சி சும்மா இருந்தப்போ ஃபேமிலி ஃப்ரண்ட் ஒரு அங்கிள் என்னை ஒரு ‘எஃப் எம்’மில ரேடியோ ஜாக்கியா சேத்து விட்டாரு. ஒன்ஸ் மீடியா லைன்ல வந்தப்பறம் ஒவ்வொண்ணாக் கத்துக்கிட்டு இப்போ ஒரு ப்ரொட்யூஸரா இருக்கேன்”

“பர்ஸனலா ஒரு கேள்வி.. கேக்கலாமா..” தயங்கினாள் சுந்தரி.

“நோ ப்ராப்ஸ் .. கோ அஹெட்”

“நீங்க இப்போ ஸிங்கிளா இருக்கீங்க.. இது பத்தி உங்களுக்கு வருத்தம் ஏதும் உண்டா?”

“டூ யூ வான்ட் டு ஸெல் தி ஐடியா தட் பீயிங் ஸிங்க்ள் ஈஸ் பெயின் ஃபுல்?”

“நாட் எக்ஸாக்ட்லி…இந்த பாபுலர் வ்யூவை நீங்க ஏத்துக்கறீங்களா? அப்படி வேணுமின்னா மாத்திக்கிறேன்”

“நான் என்ன நினைக்கறேங்கறது லெட் இட் வெயிட். மேரீட் லயிஃப்ல பெயின் அதிகமா? ப்ளஷர் அதிகமா? சொல்லுங்க”

“இட் ஆல் டிபென்ட்ஸ்”

“யெஸ். இட் ஆல் டிபென்ட்ஸ் ஆன் வாட் யூ எக்ஸ்பெக்ட் ஃப்ரம் லைஃப். இன்னும் கரெக்டா சொல்லணுமின்னா ஒரு லேடி தனக்குன்னு ஒரு பர்ஸனல் லைஃப் இருக்கறதா நெனக்கறாளா அப்படிங்கறதைப் பொருத்தது.”

“மேடம் .. வாட் ஈஸ் பர்ஸனல் ஹாஸ் டிஃபரென்ட் மீனிங் இன் டிஃபரென்ட் பேக் க்ரவுண்ட்ஸ். இன் அர்பன் லைஃப் ஸ்டைல் ப்ரைவஸி ஹாஸ் அ ப்ளேஸ். இன் ரூரல் ஏரியாஸ் தேர் ஈஸ் நோ சான்ஸ் ஃபார் ப்ரைவஸி”

“சுந்தரி.. நான் சொல்றது நாட் ஒன்லி ப்ரைவஸி. ஐ மீன் அ மிஷன்… லைஃபுக்கான மிஷன் தன்னோட இம்மீடியட் ஃபேமிலி மட்டுந்தான்னு சொல்லிக்கிற ஜென்ட்ஸ் அன்ட் லேடீஸ் நைன்டி நைன் பர்ஸன்ட்.. பட் அந்த மாதிரி சொல்லிக்கிறவங்க தான் எலியும் பூனையுமா எதோ ஒரு காரணத்தினால ப்ரேக் ஆகாத மேரேஜ்ல டைய்டா இருக்காங்க. மிஷன் மட்டுமே மையமா ஒரு ஆணும் பெண்ணும் யுனைட் ஆக முடியும். ஃபார் ஆன் எக்ஸாம்பில் லெட் அஸ் டேக் க்யூரி கப்பிள்..”

“ரேடியம் கண்டுபிடிச்சாங்களே…”

“யா ஐ மீன் தெம் ஒன்லி. அவங்க ரெண்டு பேரோட பர்ஸனல் லைஃப் ஆர் மிஷ்ஷன் ஒண்ணா அமைஞ்சிது. அந்த மாதிரி அனேகமா யாருக்குமே இல்லை. அப்போ தன்னோட மிஷ்ஷனை விட்டுடுறது ஸெல்ஃப் இன்ஜஸ்டிஸ். ஐ ஆம் நாட் ஃபார் இட்”

“மேடம் இஃப் யூ டோன்ட் மிஸ்டேக். மதர்ஹுட்ங்கறது ரொம்ப உசத்தி இல்லியா?”

லதா சிரிக்கத் தொடங்கினாள். “சுந்தரி.. மதர்ஹுட் உசத்திதான். ஆனா அது வாழ்க்கையோட ஒரு ஸ்டேஜ். ஒரு பார்ட். அதுக்காக என் வாழ்க்கையையே பணயம் வெக்கறேன்னு சொல்ல முடியுமா?”

“மேடம்.. நீங்க சொல்ற மிஷ்ஷன் முடிஞ்சப்புறம்.. ஒரு வேகூம் வராதா?”

“மே பீ. பட் இப்போ ஃபேமிலி ஸொஸ்ஸையிட்டி.. எனி ரிலேஷன்ஷிப்.. அதுல வேகூம் இல்லாம இருக்கா? ”

“மேடம். ஐ ஆம் நாட் ஏபில் டு கெட் யூ”

“ஓகே. லெட் மீ புட் இட் டிஃப்ரென்ட்லி.. ஒருத்தர் தன் கிட்டேயிருந்து தானே எக்ஸ்பெக்ட் பண்ற அசீவ்மென்ட்ஸ் சிலது இருக்கு. மலைக்கி மேலே போகப் போக சிரமமா இருக்கும். முனைஞ்சி மேல போகறது ஒருத்தரோட நிச்சயமான அல்லது திடமான முடிவைப் பொறுத்தது. வேக்கூம் பத்தியெல்லாம் யோசிச்சித் தொடங்க முடியாது.”

“மேடம். ஸ்டில் மேன் ஆர் உமன் தேர் ஈஸ் டிபென்டன்ஸ் ஆன் ஈச் அதர். அப்படி இருக்கும் போது ஸிங்கிளா இருக்கறதில ஸ்டிரெஸ் இருக்காதா?”

“தேர் ஆர் டூ ஆஸ்பெக்ட்ஸ் இன் திஸ் டிபென்டன்ஸ். ஒன் ஈஸ் ஃபிஸிகல். அன்ட் அதர் எமோஷனல். இந்த ரெண்டுக்காகவும் லைஃபையே பணயம் வெக்கறது டூ மச்” . அதற்குள் லதாவின் மொபைல் போன் ஒலித்தது. ‘ஐ வில் கால் யூ இன் ஃபைவ் மினிட்ஸ்”.. சுந்தரியைப் பார்த்து “ஐ திங்க் வீ மே ஹேவ் டு வைன்ட் அப் அட் திஸ் ஸ்டேஜ்” என்றாள்.

“மேடம். ஆக்ச்டுவல்லி வீ வேர் ஜஸ்ட் கெட்டிங் வாமர்.’

“ட்ரூ. பட் இதெல்லாமே என்ட்லெஸ் டாபிக்ஸ். ஒரு ஐடியா தோணுது. ஃபர்தர் க்வெஸின்ஸ உங்க ரீடர்ஸ் கேக்கட்டுமே. ஐ வில் ரிப்ளை”

“குட் ஐடியா மேடம். நான் எடிட்டர் கிட்டே சொல்றேன். தேங்க்யூ வெரி மச்.”

“வெல்கம்”
**__
**__**
** காற்றில் ராஜேந்திரனின் வலது கை விரல்கள் இடைவெளிகளுடன் கர்நாடக சங்கீதத்தில் தாளம் போடுவர் விரல்கள் போல ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.

உறைவிடம் இலக்கா
இல்லை உறைவிடம் தேடல்
இலக்கா
ஊரும் எறும்புக்கு?

உலாவலை வெளிப்படையாய்
உறைவிடத்தை மறைவாய்
ஒழுங்கு செய்ய மட்டுமே
அது அறியும்

வரிசையாய்ச் சென்றவர்
யாரும்
நினைவு கூறத் தக்க
எதையும் எட்டவில்லை
என்று அறியாது

மண்புழுவுக்கு
தூண்டிலில் இரையாகத்
தொங்க நேர்வதில்லை
என்பதையும்

ஒளியிலும் இருளிலும்
ஊரும் ஆற்றலின்
பெருமிதத்தில்
எறும்புகள்
தவளையின் பெருமை
இதனிலும்
மிக்கது
என்று உணரா

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21கல்வியில் அரசியல் -1
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *