Posted in

மேலும் மேலும் நசுங்குது சொம்பு!

This entry is part 18 of 45 in the series 9 அக்டோபர் 2011


 

ஊரைவிட்டு

விலக்கி வைத்தனர் என்னை

நீரைவிட்டு

நிலத்தி லிட்டனர் மீனை

 

ஊரினம் யாவரும்

ஓரின மாயினர்

எனக் கெதிராய்

காரண மாயிரம்

தோரண மாயின

 

சீர்திருத்தம் சொன்னவரை

பெரியார் என்றனர்

சிறுதிருத்தம் சொன்ன எனை

பிரிந்துபோ என்றனர்

 

பஞ்சாயத்தில்

புலிவேஷத்துடன்

பத்தாயத்து

எலிகள்…

படிப்பறிவு இன்றியே

ஒரு

பிடி பிடித்தன

 

பிஞ்சுகள் இருவர்

பிழை செய்தனர்

விடியோ விளையாட்டென

வாழ்க்கயை எண்ணினர்

வாழத் தலைப்பட்டு

வீடுகள் துறந்தனர்

 

ஓடிப் போனவரைத்

தேடிப் பிடித்தனர்

ஊர்கூடி யமர்ந்து

ஓயாது பேசினர்

 

 

 

சட்டமோ

சுய அறிவோ

இன்றி

தீவட்டித் தீர்ப்பு ஒன்றை

சொல்லிவைத்தனர்

 

பஞ்சாயத்துக்குப்

பணம் கட்டி

பாவம் தீர்க்கச் சொன்னனர்

 

பிள்ளைகள் தவறுக்கு

பெற்றோருக்குத் தணடனை

 

ஒழுக்கக் கோட்பாடுகளில்

ஊருக்குப் பொருப்பில்லையா

ஓடிப்போகாமல் தடுக்க

ஊர் என்ன செய்தது

 

தவற்றை

நிகழாமல்

திருத்தி

தடுக்கத்

தவறிய

பஞ்சாயத்துக்கு

என்ன தண்டனை

 

சொல்லி முடித்ததும்

என்னை

தள்ளி வைத்தனர்

 

மசால் வடையும்

மலாய் சாயாவும்

மினெரல் வாட்டரைக்

குடித்தும் கொப்பளித்தும்

கலைந்துச் சென்றது பஞ்சாயத்து

 

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10நன்றி மறவா..!

4 thoughts on “மேலும் மேலும் நசுங்குது சொம்பு!

  1. ஒரு பாரதிராஜா படம் உன் கவிதை வழி [ அறுவாலும், முரட்டு மனிதர்களும் மிஸ்ஸிங்’]

  2. அட்டு பஞ்சாயத்துக்களை பற்றி
    அசலாக சொல்லி உள்ளீர்கள்

  3. இர்ஷாத் சொல்லியது போல்…அனுபவித்து படித்த கவிதை…அருமை அரும

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *