மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது வழங்கும் விழா

மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாணராமனுக்கு விளக்கு விருது

 

அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது – 2015’, எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என்.கல்யாணராமனுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை ரூ.75 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்யாணராமன், அசோகமித்திரன், பெருமாள் முருகன் உள்ளிட்ட பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலம் உலக அரங்கிற்கு தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பங்களிப்பை அறியச் செய்தவர். சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற இந்த விருது விழாவில் எழுத்தாளர் அசோகமித்திரன் இந்த விருதை வழங்கினார். நிகழ்ச்சியில் வெளி ரங்கராஜன் விளக்கு அமைப்பு குறித்தும், விருதாளர் குறித்தும் அறிமுகவுரை வழங்கினார். எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, க்ரியா ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன், தேவிபாரதி, ஸ்ரீநாத் பேரூர், ஜி.குப்புசாமி, பிரக்ஞை ரவிசங்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்யாணராமன் ஏற்புரை வழங்கினார். விளக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்.வாசுதேவன் நன்றியுரை வழங்கினார்.

 

நிகழ்ச்சி பற்றி ரவிஷங்கர் எழுதிய பதிவு :

விளக்கு அமைப்பின் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது -2015’

(படங்கள் உதவி – சுருதி டி வி)

images (14)

kalyanimage

 

vasu

kalyanimage2

kalyanimage3

kalyanimage4

kalyanimage5

 

Series Navigationபிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II கலையும் இலக்கியமும்