யானையைச் சுமந்த எறும்புகள்

Spread the love

சூர்யா நீலகண்டன்

நொண்டி வந்த

யானையை நோக்கி

அது விழுந்து விடும்

என்று இரங்கி

இரு பக்கமும்

பக்கபலமாக

ஓடின ஈரெறும்புகள்.

நொண்டி நடந்த

யானையின் வேகத்திற்கு

கூட ஓடமுடியாமல்

யானையைச் சுமந்தன

அந்த சிறு எறும்புகள்

அதன் சிறு மூளைக்குள்.

Series Navigationகாணாமல் போன உள்ளாடைஜென் ஒரு புரிதல் – பகுதி 21