author

யானையைச் சுமந்த எறும்புகள்

This entry is part 2 of 39 in the series 4 டிசம்பர் 2011

சூர்யா நீலகண்டன் நொண்டி வந்த யானையை நோக்கி அது விழுந்து விடும் என்று இரங்கி இரு பக்கமும் பக்கபலமாக ஓடின ஈரெறும்புகள். நொண்டி நடந்த யானையின் வேகத்திற்கு கூட ஓடமுடியாமல் யானையைச் சுமந்தன அந்த சிறு எறும்புகள் அதன் சிறு மூளைக்குள்.

சரவணனும் மீன் குஞ்சுகளும்

This entry is part 38 of 53 in the series 6 நவம்பர் 2011

“என்னடா உனக்கு காய்ச்சல் இப்படி வந்திருக்கிறது. என்ன தண்ணியிலே ஏதாவது விளையாடினாயா?” என்று சரவணனிடம் கேட்டார் அம்மா. “இல்லையே” என்று பதில் கூறினான் அவன். “இல்லை நீ ஓயாம வெயில்லேயும் தண்ணியிலேயும் விளையாடிக் கிட்டுதான் இருக்கிறே. எவ்வளவு தடவை சொல்லி இருப்பேன். கேட்க மாட்டேங்கிறே. இப்போ உனக்கு இப்படி காய்ச்சல் வந்திருக்கிறது” என்று கூறியபடியே அவனை மருத்துவரிடம் கூட்டிச் சென்றார் அம்மா. அவனுக்கு காய்ச்சலால் உடம்பு நன்கு கொதித்தது. மருத்துவமனை கொஞ்சம் தொலைவில் இருந்தது, அதனால் பேருந்து […]

மானும் கொம்பும்

This entry is part 38 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மண்ணுக்கு மேலே ஒரு மான் கொம்பு தெரிய மண்ணை தன் கூரியக் கொம்பால் தோண்டித் தோண்டி எறிந்தது இளமான். தோண்டித் தோண்டி மண்ணுள் புதைந்த மானைக் காப்பாற்றும் முயற்சியில் மானின் கொம்புகளே ஒடிந்து போக உள்ளே வாடி இலை உதிர்ந்த ஒரு சிறு மரத்தின் வேர்களேத் தெரிந்தன. தன் இழந்த கொம்புகளுக்காய் வருந்தாத மான் புதைந்த மானுக்காய் வருந்திச் சென்றது. சூர்யா நீலகண்டன்

பூனையின் தோரணை

This entry is part 21 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

சூர்யா நீலகண்டன் அந்த குழந்தை அப்பாவிடம் கூறியது அதற்கு ஏன் மீசை வளரவில்லை என்று. அப்பா அதனிடம் கேலியாக மூன்றில் எங்கு மீசை என்று. அப்பாவை கேட்ட அப்பாவிக் குழந்தை தன் செல்லப் பூனையிடம் கேள்வியாக இரண்டில் உனக்கு மட்டும் எப்படி மீசை என்றது. திடீரென பூனையின் மீசையிலேறிய கௌரவத்தில் அப்பாவின் தோரணை அதன் உறுமலில் உருவம் கொண்டது. சூர்யா நீலகண்டன்

சாலைக் குதிரைகள்

This entry is part 15 of 42 in the series 22 மே 2011

சூர்யா   சாலையில் சிங்கமாய் சீறி இயந்திரக் குதிரைகளில் பறந்தவர்களை காவல் துறை கேமிராக் கண்களில் பார்த்து கைகளில் விலங்கை மாட்டியது.   சிறையின் கம்பிகளுக்குள் இருந்து கண்ணயர்ந்தவர்களின் கனவில் ஒரு தேவதை வந்து சொன்னாள்..   போட்டிகளுக்கென்றே களங்கள் இருக்கின்றன.. திறன்களையெல்லாம் அங்கே கொட்டினால் கோப்பைகளெல்லாம் வீட்டில் குவியுமே என்று.