யாளி

 தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போதுதோன்றும் வட்டம்

மெதுவாகச் சுழற்றும் போது

காணாமல் போகும்

முதல் சுவாசம்

இழுக்கும் சிசு

தாயின் அரவணைப்பில்

சுகம் காணும்

நகராமல் அமர்ந்திருந்தாலும்

பூமியின் பயணத்தில்

நாமும் ஒரு பிரயாணியே

நாள்தோறும்

சந்திரனின் தோற்றம்

வளர்வதையும், குறைவதையும்

கண்டு வியக்கும் குழந்தைகள்

சிறிய அலைகள்

முத்தமிட்டுச் செல்லும்

பெரிய அலைகள்

மணல் வீட்டை இடித்து

சுவடில்லாமல்

செய்துவிட்டுத் திரும்பும்

இரவு, பகல்களாய் ஆனது

வாழ்க்கை

கனவுகள் மட்டும்

இளைப்பாறுதல்

தரவில்லை என்றால்

கைதிகளாகிப்போவோம்

புவியெனும் சிறைச்சாலையில்.

Series Navigationஒரு பூவும் சில பூக்களும்என்ன வாசிப்பது