ரகசியத்தின் நாக்குகள்!!!

Spread the love

நேற்கொழு தாசன்

இலை உதிர்த்திய காற்றில்
பரவிக்கொண்டிருந்தது
கிளையின் ஓலம்,

நுண்ணிய அந்த ஓசையால்
உருகி வழியதொடங்கியது உணர்வுகள்……
வர்ணிப்புகளை எல்லாம் தோற்கடிக்கும்
எரிமலைகுழம்பாய்.

அடங்காதவொரு பசியுடன்
உறங்கிய மனமிருகம் _அந்த
பேரிரைச்சலால் வெகுண்டு
உன்னத்தொடங்கியது மனச்சாட்சியை,

நாக்கின் வறட்சி மீது படிந்த
மனச்சாட்சியின் அதிர்வுகள்
ஓய்ந்துபோக மறுத்து
ஆரோகண சுதியடைந்தன……..

மௌன விரிதலொன்றினை
உருவாக்கி இடம்மாறிக்கொண்டது
ஓலம் ………….

எங்கோ தூசிஅடர்ந்த மூலையொன்றில்
வௌவால் சிறகடிக்கும்
ஓசை படரத்தொடங்கியது
————————–

ஆக்கம் நேற்கொழு தாசன்
வல்வை

Series Navigation‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2