ராசிப் பிரசவங்கள்

Spread the love

நாள் கிழமைப் பார்த்து

டாக்டருக்குச் சொல்லிவிட்டால்

கோள் ராசி பயமில்லை….டாக்டரின்

கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் …

மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில்

அற்புதமான நாளன்று – அறுவை முறை கலையோடு

அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம்

இயற்கையின் கை

விட்டு கத்திக்கும், காசுக்கும் கைமாறி

காலங்கள் ஆகிப் போச்சு..

என் குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல்

பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்..

டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்…

சோதிடமும் தெரிய வேண்டும்.. ராகு, கேது, குரு பெயற்சி

தவறாமல் சொல்ல வேண்டும்…

நல்ல நாள் பார்த்து, அறுத்தெடுத்து அத்தனை

சேய்களையும் நாடாளச் செய்ய வேண்டும்..

பிறப்பவை அத்தனையும் நாடாள வந்து விட்டால்

குடி மக்கள் என்றிங்கு எவர் தான் இருப்பாரோ?

-பத்மநாபபுரம் அரவிந்தன் –

Series Navigationதாலாட்டுநேர்மையின் காத்திருப்பு