’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. NO MEANS……?

’NO MEANS NO’ என்று ஒரு படம் சொல்கிறதென்கிறார்கள்
’NO MEANS YES’ என்று 
நீலம் பச்சை சிவப்பு மல்ட்டி கலர்களில் 
90 விழுக்காடு படங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன 
காலங்காலமாய்.
NO என்றும் YES என்றும்
விதவிதமாய்ப் பொருள்பெயர்த்தபடி 
NOக்கும் YESக்கும்
இடையில் வாழ்க்கையை சிக்கவைத்து சீரழித்து வேடிக்கை பார்க்கும்
விபரீத விளம்பரங்களும் 
வெட்கங்கெட்ட சீரியல்களும் சினிமாக்களும் ’சூப்பர்சிங்கர்’களும்….

  •  

2.விழுமியம் வெறும் வசனமாகமச்சினிச்சியை அக்கா புருஷனின் இச்சைப்பொருளாய்
காட்டும் பாட்டுகளும் படங்களும் விதவிதமாய்… 
பாதிக்கப்படும் அக்காளும் தங்கையும்
பாவம் ’உதிரிப்பூக்களா’ய்.

3.கடையில் KISSES கேட்கும் குழந்தைகள்

KISSES என்ற பெயரில் புது சாக்லெட்டுகள் விற்பனையில்
தொலைக்காட்சி விளம்பரத்தில் விதவிதமான ஜிகினாத்தாளில்
அந்த ஆங்கில வார்த்தை மின்னக்கண்டு
அதன்வழியான சின்ன பெரிய விளைவுகளை எண்ணி

தன்னையுமறியாமல் சின்னதாய் அதிர்கிறது மனம்.
’அந்த சிலருக்கு’த் தெரிந்துவிட்டால்

பின், செலவில்லாமல் கிட்டும்
’பிற்போக்கு’ பட்டம்!

4. இறுக்கமான சட்டைகளில் இடம்பெறும் வாசகங்கள்

• I AM ALL YOURS
• ENJOY ME AS NEVER BEFORE
• BE EXCITED FOREVER
• WHAT I HAVE IS THINE
• MY BODY IS DIVINE
• ALL IS FAIR IN LOVE AND WAR 
• RULES NO BAR
• I WANT MORE
• ENTER ME I AM WITHOUT A DOOR
• AM I EXCEEDING THE LIMIT? I DON’T CARE.

_ இத்தனை வாசகங்களும் மொத்தமாகவும்
தனித்தனியாகவும்
இடம்பெற்றிருக்கும் இறுக்கமான சட்டைகளை அணிந்துகொண்டு
சிறுவர் சிறுமியரும் இளைஞர்கள் யுவதிகளும்
இன்னும் பிறரும்
அந்தப் பூங்காவில்
வேகவேகமாக நடைப்பயிற்சி செய்துகொண்டிருக் கிறார்கள்.
அந்த வாசகங்களின் அர்த்தம் உள்ளர்த்தமெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா 
என்று தெரிந்தும் தெரியாமலுமாய் 
அந்த அந்திப்பொழுதும் கழிய
வழக்கம்போல் கவியத்தொடங்கும் இருள்.

Series Navigationபாரதம் பேசுதல்இலக்கிய நயம் : குறுந்தொகை