ருத்ராவின் குறும்பாக்கள்

((1)

அட‌!வான‌த்தின் அரைஞாண் க‌யிறு
அறுந்து விழுந்தாலும் அழ‌கு தான்.

“மின்ன‌ல்”

(2)

ஒலி தீண்டிய‌தில் சுருண்டு விழுந்தேன்.
க‌ண்ணாடி விரிய‌ன்களா அவை?

“க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள்”

(3)

விஞ்ஞானிக‌ள் கோமாளிகள்.
நீ குலுங்கிய‌தில் என் இத‌ய‌ம் அதிர்ந்த‌தை
பூக‌ம்ப‌ம் என்கிறார்க‌ள்.

“கொலுசுக‌ள்”

(4)

காதலின் வெற்றி என்றாலே
காதலின் தோல்வியும் அது தான்.

“ரோஜாவின் முள்”

(5)

காதலில் தோல்வியுற்ற தண்ணீர்த்துளி
கீழே விழுந்து சிதறி.. ஏழுவர்ண ரத்தம்.

“குற்றாலம்

Series Navigationருத்ராவின் குறும்பாக்கள்மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29