ரூபம்

Spread the love

தோட்டத்துப் பூக்கள்
பிணம், கடவுள், மணமக்கள்
அலங்கரிப்பது எதை என்று
தெரிந்து கொண்டா மலர்கிறது
முலைப் பாலின் போதை
மது புட்டியில் முடியும்
நடுநிசி
தூக்கம் இல்லை
கனவுத் தொல்லை
கை
கதவைத் தட்ட
உள்ளேயிருந்து பதிலில்லை
படுக்கைவிரிப்பில்
அவள் வந்து சென்ற
சுவடுகள்
நாய் காலை
நக்குவது தெரிகிறது
எனக்கு குவார்ட்டர் பத்தாது
சுயத்தை இழக்கவே
ஏதோ ஒரு போதை
இரவில்
நான் சாப்பிட்ட பாத்திரத்தை
நக்கிக் கொண்டிருக்கும் பூனை
போதையில் தெரியவில்லை
நேற்றிரவு பெய்த மழை
விடியல் கூட இரவையே நாடுகிறது
மேகத்தில் மிதப்பது
தேகத்தை நனைப்பது
சகலத்தை மறப்பது
கனவில் கூட
கோடியில் மிதக்கவில்லை
என்றாலும்
தெருக்கோடியை
நான் நன்றாகவே அறிவேன்.

Series Navigationவாயுள்ள கன்றும் பிழைக்கும்…!வருவேன் பிறகு!