லாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு

Spread the love

லாகூரில் பதாமி பாக் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் எரித்துள்ளார்கள். இதற்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்துவர் இஸ்லாம் மதத்தை அவதூறு செய்துவிட்டார் என்ற புரளியே.

518262-MG_-1362828699-549-640x480 518262-MG_-1362828724-607-640x480 518262-MG_-1362828743-942-640x480 518262-MG_-1362828755-263-640x480 (1) 518262-MG_-1362828774-207-640x480 518262-MG_-1362828790-925-640x480 518262-MG_-1362828808-642-640x480 518262-MG_-1362828821-203-640x480 518262-MG_-1362828838-772-640x480 518262-MG_-1362828852-864-640x480 518262-MG_-1362828878-842-640x480 518262-MG_-1362828865-259-640x480 518262-MG_-1362828895-740-640x480 518262-IMG_-1362828908-982-640x480 518262-IMG_-1362828921-226-640x480 518262-IMG_-1362828942-296-640x480 518262-MG_cover-1362828967-798-640x480 christian-blasphemy-lahore-pakistan-mob-fire-1 (1) christian-blasphemy-lahore-pakistan-mob-fire-6 christian-blasphemy-lahore-pakistan-mob-fire-5 christian-blasphemy-lahore-pakistan-mob-fire-4 christian-blasphemy-lahore-pakistan-mob-fire-3 christian-blasphemy-lahore-pakistan-mob-fire-2 christian-blasphemy-lahore-pakistan-mob-fire-1 mob-blasphemy-afp-670இந்த முஸ்லீம்கள் கிறிஸ்துவர் வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அபகரித்து மீதமுள்ள பொருள்களை தெருவில் போட்டு எரித்துள்ளார்கள்.

சோஹைல் சுகேரா என்ற எஸ்.எஸ்.பியும் இந்த முஸ்லீம்களால் பலத்தகாயமடைந்துள்ளார். இந்த போலீஸாரை முஸ்லீம்கள் கல்லாலடித்துள்ளனர்.

ஏற்கெனவே அந்த அவதூறு செய்தவரை வெள்ளிக்கிழமையன்று கைது செய்துவிட்ட பின்னால், இந்த வன்முறைக்கு தேவை ஏதும் இல்லை என்று பஞ்சாப் சட்ட அமைச்சர் ரானா சனாவுல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்வாறு மற்றவர்களது பொருட்களை தேவையில்லாமல் உடைத்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஷாஹி இம்ரான் என்பவர் இந்த அவதூறு வழக்கு சம்பந்தமாக முதல் அறிக்கையை போலீஸில் தெரிவித்திருந்தார். முஸ்லீம் கும்பல் அந்த இடத்துக்குள் வந்து அழிவு வேலையை ஆரம்பிக்கும்முன்னரே தான் அந்த இடத்திலிருந்து போய்விட்டதாகவும், தனக்கும் இந்த அழிவு வேலைக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார். இஸ்லாமை அவதூறு செய்த கிறிஸ்துவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும், இவரை தவிர்த்த மற்ற கிறிஸ்துவர்களை அடிக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

எஸ்.எஸ்.பி சுகேராவை தொடர்பு கொண்டபோது வீடுகள் எரிக்கப்பட்டதாக கூறுவது உண்மையல்ல என்றும், போலிஸார் அங்கே இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.

பஞ்சாப் முதலமைச்சார் ஷபாஸ் ஷரிப் இந்த நிகழ்ச்சியை விசாரணை செய்ய ஐந்து நபர் கமிஷனை ஏற்படுத்தியுள்ளார். வீட்டு பொருட்களை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக இருபது லட்சம் ரூபாய் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை சுமார் 3000 பேர்கள் கூடி கிறிஸ்துவ பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த கிரிஸ்துவர்களை துரத்தியுள்ளர்கள்.

பிறகு இந்த கும்பல் நூர் ரோடில் உள்ள ஜோஸப் காலனிக்குள் நுழைந்து சவன் என்ற ஒருவரை தெடியுள்ளார்கள். பிறகு சவனின் வீட்டைதாக்கி அதனை தீவைத்து கொளுத்தியுள்ளார்கள். அந்த வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சுமார் 150 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளிலிருந்த பலர் உயிர் தப்பிக்க ஓடிவிட்டார்கள்.

சவன் கைது செய்யப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்

 

நன்றி மூலம்

 
இதே நாளில் பெஷாவரில் உள்ள மசூதியும் தற்கொலைப்படை தாக்குதலுக்கு உள்ளானது. அதில் 4 பேர் இறந்தார்கள் 28 பேர் படுகாயமடைந்தார்கள்
இரண்டு செய்திகளும் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் செய்தி

Series Navigationஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.“நான் மரணிக்க விரும்பவில்லை”- ஹுயூகோ ஷாவேஸ் உச்சரித்த கடைசி வரி