லேசான வலிமை

Spread the love

கொடுங்கனவில்
விழித்தது முதன்முறையல்ல
படுக்கையில் முளைத்தன
பதாகைகள்

தமிழில் பிற மொழியில்
கோஷம் கோரிக்கை
விளம்பரம்
அறிவுரை எச்சரிக்கை
அறைகூவல்
வியர்த்து விழித்தேன் பல இரவுகள்

காற்றில் அசைந்து பறந்தும்
போகும் லேசான
அவை
மானுடத்தின்
பரிமாற்றங்கள்
உரையாடல்கள்
தோழமைகள் வாளுரசல்கள்
வாணிகம் தியாகம்
உறவுகள் சுரண்டல்கள்
எதையும் நிர்ணயிக்கும்
மாவல்லமை கொண்டவை

பதாகைகள் ஒரு
அமைப்பின்
கொடுங்கனவாகா

அமைப்பின் நிறுவனத்தின்
அதிகார அடுக்குகள்
வளாகத்து அறைகளின்’
கதவுகள் மீது
பெயர்ப் பலகைகளாய்
பதாகையை
எதிர்கொள்ளும்

பதாகைகளைப் பயன்படுத்த
நீர்க்கடிக்க
விளிம்புக்குள் அடைக்க
பெயர்ப் பலகைகள்
மாட்சிமை கொண்டவை

அப்படி ஒரு பலகையும்
புழுதிமண்டிக் கிடந்ததைக்
கண்டேன்
பழையன சேகரித்து
விற்கும் கடையில்

Series Navigationவரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்