வதம்

Spread the love

கனவிலாவது
பெருங்கனவானாக
இருக்கக் கூடாதா
சுற்றம் இவனிடம்
பவிசாக நடந்து கொள்ளக்
கூடாதா
நடப்பவை தெரியவந்தால்
அசுவாரஸ்யம் ஏற்படாதா
மாரிக்காலத்தில் ஒளிந்து
கொள்ளத் தெரியாதவன்
பகலவனா
தேவதாசிகளின்
அழகு அத்தனையும்
முருகனுக்கா
காடு,மலை,கடல்
நவகிரகங்கள்
ஒன்றுக்கொன்று
பார்த்துக் கொள்வதில்லையா
அன்னாபிஷேகத்துக்கு
பசியோடு வரலாமா
வரம் கொடுப்பவன் சிவனென்றால்
வதம் செய்வது விஷ்ணுவா
பாழடைந்த கோவிலில் இருப்பது
அம்பாளுக்கு விருப்பமென்றால்
நான் என்ன செய்வது
தேர் நிலையை அடைய
வடம் பிடித்தால் மட்டும்
போதுமா
மூலவர்
பேச ஆரம்பித்ததால் தான்
நான் ஊமையானேன்
தெரியுமா?

—————

Series Navigationஅக்னிப்பிரவேசம் -10கவிதைகள்