வம்பளிப்புகள்

Spread the love

-தினேசுவரி, மலேசியா

‘அழிப்பு’க்கும்

‘அளிப்பு’க்கும்

இடைவெளி

அதிகம் இருப்பினும்..

அளித்து அழிப்பதற்கு

இங்கு அழைப்பவர்களே

அதிகம்…..

 

அன்பளிப்புகளில்

மூழ்கிப்போக

எப்படியோ

கண்டுப்பிடித்து விடுகின்றனர்

சில ‘வம்பளிப்புகளை’…

வம்பாகி போகும் போது

தெளிகிறது

அளிப்புகளின்

இறுதி வாசல்

அழிப்பே என்று………

 

இருந்தும்

‘அளிப்பு’க்கும்

‘அழிப்பு’க்கும்

இடைவெளி என்பது

அதிகம் தான்…

Series Navigationவேறு ஒரு தளத்தில்…பச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லை