வாடிக்கை

அருணா சுப்ரமணியன்

அரைமணி நேரம்

தாமதமாய்

வந்து சேர்ந்தவன்

சாதாரணமாக

போக்குவரத்து

நெரிசல் என்கிறான்..

குறித்த நேரம்

கடந்தும் வராதவள்

அழைத்து பேசும்

பொழுதே சொல்கிறாள்

வர இயலவில்லை என…

நேரத்திற்கு சென்று

காத்திருக்கும் பொழுதுகளில்

இவ்வாறாக இவர்கள்

கிணற்றில் விழுவதையே

நாளும் காண

நேரிடுகிறது…

-அருணா சுப்ரமணியன்

Series Navigationஅன்பின் ’காந்த’ ஈர்ப்புகண்ணீர் அஞ்சலி !