வால்ட் விட்மன் வசனக் கவிதை – 30 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) உன்னத நிலை அடையும் காலம்

This entry is part 21 of 27 in the series 30 ஜூன் 2013

 

 

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

  

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

  

 

படுக்கையில் மூச்சிழுத்துக்

கிடக்கும் நோயா ளிக்கு

உதவி செய்ய முன்வருவேன் நான்.

உறுதி யாக

நிமிர்ந்து நிற்கும் மனிதருக்குத்

தேவை யான

பேருதவி செய்ய வருவோன் நான் !

பிரபஞ்ச விளக்கம் பற்றி

பிறர் உரைத்ததைக்  

கேள்விப் பட்டேன்;  ஆம்,

கேட்டேன் அதை, கேட்டேன் அதை

பல்லாயிரம் ஆண்டுகளாய் !

பார்க்கப் போனால்

நடுத்தரப் பொதுக் கருத்து !

ஆனால் அது அவ்வளவு தானா ?

பெரிதாக்கிப்

பயன் படுத்திப் பார்க்க

நான் முயன்றால்

வாணிபக் கழுகுகள்

ஏல விற்பனையில்

விலையை ஏற்றி விட்டு

பழைய வர்த்தகர்

தலை குனியச் செய்கிறார் !

 

 

பிரம்மா, புத்தர், ஜெகோவா,

கிரேக்கர மற்றும்

பெரோவின் ஓசிரிஸ், ஐசிஸ்

தெய்வங்கள் போல்

கடவுளை ஒத்த பரிமாணத்தில்  

படைக்கப் பட்டவ னாய்க்

கருதிக் கொள்கிறேன் என்னை.

உயிருடன் இருந்து, அவரது

கடமைகள் செய்வதில்

உடன்பாடு உள்ளது !

ஒவ்வொரு வடிவத் தெய்வங்கள்

மதிப்பீட்டை  

ஒப்புக் கொள்ளலாம் !

முகவரி ஒன்றில்லை

மகா சக்திக்கு !

உன்னத நிலை அடையும் என்

காலத் துவக்கத் துக்கு   

காத்திருக் கிறேன் !

 

 

அந்த நாள் எனக்குத்

தயார் ஆகுது !

அதற்குள்  

செய்ய வேண்டிய வற்றைச்

சிறப்பாய்

செய்து முடிப்பேன்

என்னால்

இயன்ற மட்டும் !

என் மண்டை வடிவைக் கண்டு

ஏற்கனவே நானோர்

படைப்பாளி யென

உடன்பாடு ஆகி விட்டது !

பதுக்கி வைத்த கருவுக்குள்

என்னை

பதித்துக் கொண்டேன்

இப்போது.

 

+++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (June 25, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -8

2 Comments

  1. வால்ட் விட்மனின் கவிதையை அழகுபட எழுதியுள்ளீகள் நண்பரே .உங்கள் கவிதை நடை படிக்க இனிமையாகவும் சுவை!படவும் உள்ளது. வாழ்த்துகள், தொடர்க தங்களின் கவிதைகள்!அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *