வால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)

This entry is part 9 of 27 in the series 29 செப்டம்பர் 2013

Walt Whitman

 (1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

 

வையகப் பூங்காவுக்கு மறுபடியும்

வழிபார்த்துச் செல்வோம்.

வலுவான துணைவர்,  

புதல்வர், புதல்வியர் இருப்பதை

முன்னறிப்பாய்.

அவரது காதல் தாகம்,

உடலுறவு வாழ்க்கை,

அவர் வாழ்வதின் அர்த்தம்,

என்ன ?

வசித்து வருவது,

எதற்கு ?

புதிராக உள்ளது

உயிர்ப்பித்து வருவேன் நான்  

மரித்த பிறகு !

பிறப்பு இறப்பு சுழற்சியில் தான்

திரும்பவும் 

பிறந்திருக்கிறேன் நான்.

காதலுக் குரிய மனப் பக்குவம்,

கவின் மிக்கதாய்

அனைத்தும் இருப்பது

தெரியு தெனக்கு.

விந்தையாய்த் தோன்றுது

எல்லாம்.

என்னுடல் உறுப்புகள் ஊடே

ஓடி விளையாடும்

ஒரு நடுக்கம் !

ஏனென்று புரியாத

காரணங்கள்.

கூர்ந்து நோக்கி

ஊடுருவிச் செல்லும் !

எனக்குக்

கடந்த வாழ்வில் திருப்தி

நிகழும் வாழ்வில்

திருப்தி !

பக்கத்தில், பின்னால்

நின்று ஏவாள்

என்னைப்

பின் தொடர்வாள்.

அல்லது என்

முன்னோடி வருவாள்.

அப்படி நானும் செல்வேன்

அவளைப் பின்பற்றி !

++++++++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

6.      http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (September 26, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationகடல் என் குழந்தைபடிக்கலாம் வாங்க..
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *