வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

 

 (Children of Adam)

 (As Adam Early in the Morning)

(In Paths Untrodden)

(1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

1. காலை வேளையில்

பொழுது புலர்ந்த வேளையில்

எழுந்த ஆதாம் போல்

உறக்கம் கலைந்து

புதுப்பித்த மலர்ச்சியுடன்

புறப்பட்டேன் மாளிகை யிலிருந்து.

எங்கு போகிறேன் என்று

என்னைப் பார் !

என் குரலைக் கேள் !

என்னை அண்டித் தழுவு !

கடக்கும் போது

என்னைத் தொடலாம்

உன் உள்ளங் கையால் !

அஞ்சாதே

என் தோற்றம் கண்டு !

 

++++++++++++++++

 

2.  நடக்காத பாதையில் நான் !

 

 

நடக்காத பாதையில் நான்,

தடம் வைத்தேன்,

நீர் நிரம்பிய

ஏரிக்கரை ம்புயர  !

தானாய்க் காட்டிக் கொள்ளும்

வாழ்வி லிருந்து

தப்பிக் கொண்டேன்.

வெளிப்பட்டு

நிலையான நெறிகளி லிருந்து

இன்ப சுகத்தைத் துறந்து,

ஆதாய மற்று,

ஒத்துப் போனேன் !

நீண்ட காலமாய் நானிவற்றை

ஊட்டி வந்தேன்

என் ஆத்மாவுக்கு !

 

 

இப்போ தெனக்குத்

தெளிவானது

வெளிவராத நெறி நிலைகள்;

தெளிவான தெனக்கு

என் ஆத்மா ! நான்

உரையாடி வரும் மனிதனின் ஆத்மா

உவப்பளிக்கும் தோழமையில் !

உலகச் சந்தடிக்கு அப்பால்

இங்கு நான் மட்டும்

தனித்துள்ளேன்

பல்சுவை நாக்குடை யோரிடம்

உரையாடிக் கொண்டு

கணக்குப் பார்த்துக் கொண்டு !

 

 

எவருக்கும் தலைகுனிய வேண்டாம்

இந்த ஒதுக்குப் புறத்தில்;

இட்டமுடன் பதில் அளிக்கலாம்

இப்படித் துணிவு வாரா தெனக்கு

வேறு எங்கணும் !

தானே தன்னைக் காட்டிக் கொள்ளாத

வாழ்க்கை பளுவாய்க்

கனத்தது எனக்கு !

ஆயினும் மற்றவை கிடைத்தன.

மனிதப் பிணைப்பைத் தவிர

எந்தப் பாடலும் பாடுவ தில்லை

இன்றைய தினம் என்று

தீர்மானித்தேன்.

மெய்வாழ்வு நோக்கிப் பாடல்களை

மேலுயர்த்தி,

உடற்பயிற்சி வேட்கையில்

பொறுப்பேற்பேன்,

இவ்வினிய நாற்பத்தி ஒரு வயதில் !

எல்லா வாலிபருக்கும்  

எடுத்துக் காட்டாய் இருப்பேன்

ன் இரவு, பகல்

இரகசியத்தை சொல்லவும்,

தோழர்களின்

தேவையைக் கொண்டாடவும் !

 

 

++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman  [March 5, 2014]

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *