விடுதலையை வரைதல்

Spread the love
க. சோதிதாசன்

அவள் ஓவியம் வரைபவள்
கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள்

தனிமையை தீட்டி இருக்கிறாள்
அடக்கு முறையை சித்தரிக்க முடிந்திருக்கிறதுதுன்பத்தையும் சோர்வையும்
சொல்பவை பல ஓவியங்கள்

பலவீனத்தை படமாக்கி இருக்கிறாள்
வீடும் பணிச்செயல்களும்
உயிர்ப்பானவையாக இருக்கும்

இருளை இணைக்க முடிந்திருக்கிறது

ஆனால்
விடுதலையையும் ஒளியையும்
இறுதி வரை அவளால் வரைய
முடிந்திருக்கவில்லை..


க. சோதிதாசன்
யாழ்ப்பாணம்
இலங்கை.
drsothithas@gmail.com
Series Navigationதங்கம்மூர்த்தி கவிதைகேட்பினும் பெரிது கேள்! – புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்..