விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 20 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

…வழக்கறிஞர் கோ. மன்றவாணன்…

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இ;ந்தியா முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை அரசு அலுவலகங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த விழா உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறதா? தாய்நாட்டுப் பற்றோடு நடத்தப்படுகிறதா?
அரசு அலுவலகங்களில் நடைபெறும் சுதந்திர நாள் விழாக்களில் மேலதிகாரி கொடியேற்றுவார். அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்களா? இல்;;;லை என்பதுதான் சரியான பதில். காலை எட்டு மணிக்கு நடைபெறும் சுதந்திர நாள் விழாவில் அனைத்துப் பணியாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்படும். ஆனால் அந்த விழாக்களில் அரசு ஊழியர்கள் ஒருசிலர்தான் கலந்துகொள்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் கலந்துகொள்வதில்லை. அரசு சம்பளம் வாங்கும் அவர்களே சுதந்திரதின விழாவில் பங்கேற்க விரும்புவதில்லை. காரணம், விடுதலைநாள் என்பது அவர்களைப் பொறுத்தவரை விடுமுறைநாள் என்று நினைப்பதுதான்.
பள்ளிகள், கல்லூரிகளிலும் இதே நிலைமைதான். தலைமை ஆசிரியர்கள்;, முதல்வாகள்; பங்கேற்றுக் கொடியேற்றுவார்கள். ஒருசில தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தங்களுக்கு அடுத்துள்ள ஆசிரியர்களைக் கொடியேற்றச் சொல்லிவிட்டு தங்கள் வீட்டிலேயே இருந்துவிடுவார்கள். ஆசிரியப் பெருமக்கள் ஒருசிலர்தான் கலந்துகொள்வார்கள். மற்றவர்கள் சுதந்திர தினத்தைப் பற்றி சுத்தமாகக் கவலைப்படுவதில்லை.
ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சுதந்திர தினம் வந்துவிட்டால் ஒருநாள் விடுமுறை வீணாகப் போய்விட்டதே என்று கவலைப்படுவார்கள்.
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் சுதந்திரதின விழாக்கள் ‘கடமைக்கு’ நடத்தப்படுகிறதே தவிர, கடமையுணர்வோடு நடத்தப்படுவதில்லை. அந்த விழாக்களும் ஏதோ சடங்காக சம்பிரதாயமாக நடத்தப்படுகிறதே தவிர, சமூகப் பொறுப்புணர்வோடு, சரித்திரப் பெருமையோடு நடத்தப்படுவதில்லை.
நம் மக்களுக்கு வீட்டுப் பற்று இருக்கிறதே தவிர, நாட்டுப் பற்று அவ்வளவாக இல்லை. இவர்களுடைய நாட்டுப் பற்;றெல்லாம் நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிகெட் போட்டிகளில் இந்தியா கலந்துகொள்ளும் போதுதான் தெரியுமே தவிர வேறெந்த நிலையிலும் நாட்டுப் பற்று இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே ஒவ்வொருவருக்கும் நாட்டுப்பற்று உள்ளதாக யாராவது சொன்னால், ஊழல் செய்து நாட்டுப் பணத்தைச் சுரண்டுவார்களா? கனிம வளங்களைக் கொள்ளை அடிப்பார்களா? நம் நாட்டுக் குடிமக்களை நாமே ஏமாற்றுவோமா? அரசு சொத்துகளை- அடுத்தவர்களின் உடைமைகளை ஆக்ரமிப்பு செய்வார்களா?
இந்தியா என்தாய் நாடு. என் தாய்நாட்டை நேசிக்கிறேன் என்று எவராவது சொன்னால், அவர் அரசு ஊழியராக இருந்தால் முதலில் அவர் இலஞ்சம் வாங்காதவராக இருக்க வேண்டும். தனக்கிட்ட வேலையைக் கடமையுணர்வோடு செய்ய வேண்டும். பொதுமக்களின் தேவைக்காகத்தான் அரசு ஊழியர்கள் என்பதை உணர்ந்து பொதுமக்களிடத்தில் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். எந்த இடத்திலும் எந்த நிலையிலும் முறைகேட்டுக்கு வழிவிடக் கூடாது. அப்படி கடமையாற்றுவோர்கள்தான் நாட்டுப்பற்று உள்ளவர்கள் ஆவார்கள். நாட்டுக்குத் துரோகம் செய்பவர்கள் நாட்டு மக்களுக்கு அநீதி இழைப்பவர்கள் நாட்டுப் பற்றாளர்களாக இருக்க முடியாது.
சுதந்திர தினக் கொடியேற்று விழாக்களில் அனைவரும் கலந்துகொள்ளவில்லையே என்ற மனக்குறை ஒருபக்கம் இருக்கட்டும். கொடியேற்றுவதோடு, மேல்சட்டையில் கொடியைக் குத்திக்கொள்வதோடு நம் நாட்டுப்பற்று முடிந்துவிடுகிறதா? சிந்தித்துப் பாருங்கள். அதையும் தாண்டி- நாட்டை ஏமாற்றாத, நாட்டு மக்களை நேசிக்கிற, தம் கடமைகளைச் சரியாகச் செய்கிற, நல்ல குடிமக்களாகத் திகழ்பவர்கள்தான் நாட்டுப்பற்றாளர்கள்.
உண்மையிலேயே நமக்கெல்லாம் நாட்டுப்பற்று இருக்கிறது என்றால் நம் வீட்டுக் குப்பையை, பக்கத்து வீட்டுப் பக்கம் போடுவோமா? (பக்கத்து வீட்டுக்காரர் பார்க்காத நேரம் பார்த்து)
நாட்டு மக்கள் அனைவருக்கும் நாட்டுப்பற்று
வர வேண்டும்.
வளர வேண்டும்.

Series Navigationவேர் மறந்த தளிர்கள் – 29கருத்தரங்க அழைப்பு
author

Similar Posts

Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரி லிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத் தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற குறைபாடுகளே !

    தாய் நாட்டுப் பற்றுள்ள ஜப்பானிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்.

    பாராட்டுகள் நண்பர் மன்றவாணன்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *