விடுமுறை நாள்

Spread the love

வயிற்றை முட்டிக்கொண்டு
விழிப்பு வந்தது
விடிந்தும் மேத்துடன்
போட்டியிட்டு தோற்ற கதிர்கள்
சாம்பல் பூசிய  காலை
நிலவை தொலைத்து விட்ட
வானம்  மெல்லிய விசும்பலாய்
வெயிலே அழுது கொண்டிருக்கிறது
மணி 7 யை  தாண்டிவிட்டது
காப்பி குடிக்க ஒரு தவிப்பு
வீட்டு நிலவும் இன்னும் போர்வைக்குள்
பால் சூட வைக்கும் பொழுதெல்லாம்
பொங்கி  வழிந்து
மனைவியிடம் வழிசலாக போனதால்
அடுப்படி செல்ல ஆயாசமாக இருந்தது
விடிந்து விட்டதை அறிவிக்க
தொலைகாட்சியில்  செய்தியை சத்தமாக வைக்க
விடுமுறை நாள் தானே கொஞ்சம் தூங்கவிடுங்க
எதிர்வினையானது
காலையிலேயே  சண்டையை  ஆரம்பித்து விட்டீர்களா
பெண் வாரிசு
வெளியே இடியுடன்  மழை வலுத்தது
இப்படியாக நாள் தொடங்கியது

Series Navigationபூனை மகாத்மியம்கண்காணிப்பு