விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

konangi
2013ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கியை தேர்வு
செய்துள்ளோம்.
கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள்
செய்து வருபவர்.கல்குதிரை என்ற சிற்றிதழை தொடர்ந்து நடத்தி புதிய ஆக்கங்களை தமிழுக்கு
கொண்டு வந்தவர்.செறிவான உலக இலக்கியப் பார்வைகளை அறிமுகப்படுத்தியவர்.புதிய
கதை சொல்லும் முறை மூலமும்,தொன்மை கலாச்சாரத் தொடர்புகளின் ஊடாட்டங்களை
நவீன வாழ்வில் பொருத்திப் பார்ப்பதின் மூலமும் புதிர்த்தன்மை கொண்ட  ஒரு தனித்த
வாழ்க்கைநிலையை கட்டமைப்பவர்.வணிக விழுமியங்களுக்கு எதிரான எழுத்தும்,வாழ்க்கை
முறையும் கொண்டு தீவிரமான கலைச் சூழல் குறித்த உணர்வை உருவாக்குபவர்.
மதினிமார்கள் கதை,கொல்லனின் ஆறு பெண் மக்கள்,பொம்மைகள் உடைபடும் நகரம்,பட்டுப்
பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்,உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை ஆகிய சிறுகதைத்
தொகுப்புகளும் பாழி,பிதிரா ஆகிய நாவல்களும் நகுலன்,தாஸ்தாவ்ஸ்கி,மார்க்வெஸ் ஆகியோர்
குறித்த கல்குதிரை தொகுப்புகளும் இவருடைய முக்கிய படைப்புகள்.
நா கோபால்சாமி
அமைப்பாளர், விளக்கு
Series Navigation