வில்லவன் கோதை
செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புதைந்து புல்மண்டிக்கிடந்த ஒரு சமூகத்தின் கல்லரையை கண்களுக்குப் புலப்பட வழி செய்திருக்கிறது .
மதராசப்பட்டின வரலாற்றுச் சுவடுகளில் எழுதமறந்த தலித்துகளுக்கான இடத்தை தொட்டுக் காட்டியிருக்கிறது ஜெயமோகனின் வெள்ளையானை.
அழுத்தமான தரவுகளற்ற புனைவு என்றாலும் இந்த வரலாறு இப்படித்தான் இருந்திருக்கக்கூடுமென்ற உணர்வை ஒரு கோட்டுச்சித்திரமாக இன்றைய தலைமுறைக்கு வெள்ளையானை விதைத்திருக்கிறது.
சென்னை கடற்கரைச்சாலையில் விவேகாநந்தர் இல்ல நிறுத்தத்தில் இறங்க பேரூந்துகளில் இன்னும் ஐஸ் அவுஸ் என்று பயணச்சீட்டு கேட்பவர்களை பார்த்திருக்கிறேன்
அன்றைக்கு கிழக்கிந்தியக்கம்பெனி கட்டுப்பாட்டில் இருந்த மதராசப்பட்டினம் ஐம்பத்தேழுகளில் சிப்பாய் கலகம் அரங்கேறியபோது விக்டோரியா அரசியாரின் நேரடி நிர்வாகத்துக்கு கைமாறியது. அந்தக்காலங்களிலேயே இந்த ஐஸ் அவுசில் குளிர் பனிக்கட்டி வர்த்தகம் செய்தவர்கள் அமெரிக்கர்கள்.
பூமியின் குளிர்ந்த பிரதேச ஏரிகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அறுவடை செய்து இந்த ஐஸ் அவுசில்தான் இந்தியாமுழுமைக்கும் சில்லரை வர்த்தகம் நடத்தினார்கள். அந்த வர்த்தகத்துக்கு அடித்தளமாக இருந்தவர்கள் அத்தனை பேரும் தலித்துகளே.
இந்த நிறுவனத்தில் வயிற்று பசிக்கு விலங்கினும் கீழாக பணியாற்றியவர்கள் நகரத்திலேயே ஒதுக்கப்பெற்ற தலித்துகள்தானாம்.
பதினெட்டாம் நூற்றாண்டுக்கிடைப்பட்ட காலத்தில் இந்த நிறுவனத்தில் எதிர்பாராமல் வெடித்த ஊழியர் முற்றுகையொன்று முழுக்க முழுக்க தலித்துகளால் நிகழ்த்தபடுகிறது. வர்த்தக நிர்வாகத்தை எதிர்த்து நிகழ்ந்த அந்த முதற்தொழிலாளர் போராட்டம் பிரிட்டீஷ் அடக்கு முறையாலும் அடுத்தடுத்த அடுக்கு சாதியிராலும் தோற்க்கடிக்கப்படுகிறது
இந்த போராட்டமே இந்த தேசத்தின் அடுத்தடுத்த ஊழியர் உரிமைக்குரலுக்கு முதற்ப்படி என்று பேசுகிறது வெள்ளையானை.
தலித் இலக்கியங்கள் தங்களோடு சேர்த்துக்கொள்ளத்தக்க இந்த புத்தகத்தை ஏறக்குறைய நானூறு பக்கங்களில் நேர்த்தியாக அச்சிட்டு தந்திருக்கிறது எழுத்து பதிப்பகம்.
இந்த எழுத்தோவியம் ஏரக்குறைய பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில் நிகழ்வதாக கொள்ளலாம். கதையின் மையக்கருத்தாக கொள்ளப்பட்ட ஐஸ் அவுஸ் முற்றுகை அப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டுகளில் கனவுகளிலேயே வாழ்ந்து அற்ப ஆயுளில் மறைந்துபோனவன் பிரிட்டீஷ் கவிஞன் ஷெள்ளி. அவனுடைய நாத்தீக இழையோடும் வார்த்தைகளில் ஊறிக்கிடந்த ஒர் ஐரீஷ் இளைஞன் சென்னப்பட்டணத்தின் பிரிட்டீஷ் காவல் பாதுகாப்புப் படையின் மேலாளராக பொறுப்பேற்கிறான்.
இயல்பாகவே இளகிய மனதையும் நேர்மை நெஞ்சத்தையும் பெற்றிருந்த இளைஞன் ஏய்டன் பர்னை இந்த மண்ணில் நிலவிய விசித்ரமான போக்குகள் அலைக்கழிக்கிறது.விலங்கினும் கீழாக இந்த மண்ணுக் குறியவர்கள் நடத்தப்படுவது அவனுக்கு பெரிதும் வேதனையை அளிக்கிறது. தான் அவர்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டு மென்ற உள்ளுணர்வு அவனிடையே துளிற்கிறது.
அப்போது ஐஸ் அவுஸ் நிறுவனத்தில் நிகழ்ந்த ஒரு கொலை சற்றும் எதிர்பாராமல் வெளிப்பட்டு குற்றவாளிகளை கூண்டுகளில் ஏற்ற புலனாய்வில் இறங்குகிறான் ஏய்டன்.
மதராசப்பட்டினம் வெள்ளை நகராகவும் கருப்பு நகராகவும் எதிர் எதிராக நின்றிருந்த காலம்.
வெள்ளைநகர சொகுசு வாழ்க்கையும் கருப்ப நகர நரக வாழ்க்கையும் ஏய்டனின் கண்களுக்குப் புலப்படுகிறது.
ஏய்டனின் இந்த பயணத்தில் அந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய பஞ்சமும் மையம் கொள்கிறது.
தன் பணியில் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பெற்று கனவுகளோடு வந்த அந்த ஐரீஷ் இளைஞனை அதிகாரவர்கம் தன்னில் கரைத்துக் கொள்கிறது.
துயரத்திலும் தோல்வியிலும் முடிவுக்குவரும் இந்த நிகழ்வுகளை நீட்டி ஒரு சொல்லோவியமாக்கியிருக்கிறார் ஜெயமொகன்.
பகுத்தறிவு எண்ணங்கள் நிறைந்தவர்களும் படித்த இளைஞர்களும் இயல்பாக அறிந்த கருத்துகள்தாம் இந்த புத்தகம் முழுதும் பேசப்படுகிறது.
இந்த நூலில் நான்கய்ந்து பாத்திரங்களை ஏற்படுத்தி தலித்துகளுக்கெதிராக இந்த சமூகம் கையாண்ட அறத்தை நூலாசிரியர் தொடர்ந்து பேசுகிறார். இணையதளத்தில் அன்றாடம் அவர் நிகழ்த்தும் ஓயாத விவாதங்கள் இந்த சொல்லோவியத்துக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
காத்தவராயன்
கருப்பன்
வண்டியோட்டி ஜோசப்
கிருத்துவ பாதிரியார் பிரண்ணன்
ஒரு மாறுதலுக்காக வரும் மரிசா
எல்லாருமே மாறிமாறி நம் முகங்களில் அறைகிறார்கள்
இந்த தலித் பாத்திரங்கள் இழிநிலையில் இருந்தாலும் நிலைகுலையாமல் நிமிர்ந்து பேசுகிற அறிவு ஜீவிகளாகவே நெஞ்சில் நிற்கிறார்கள். இந்த சமூகத்துக்கெதிரான கூற்றுகளை எள்ளி நகையாடியும் உரத்தகுரலிலும் இந்த பாத்திரங்கள் நூலின் பக்கங்களை நகர்த்துகிறது. இந்த நூலின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கும் புரவிகளின் பாச்சலைப்போல நூலின் முற்பகுதி இலக்கினை நோக்கி விருவிருப்பாக பயணிக்கிறது. இலக்கு தோற்கடிக்கப் பெற்றபோது நூலின் பிற்பகுதி சோர்வுற்று நகருகிறது.
ஆசிரியர்க்கு மதராசபட்டணத்தின் மொழி பரிச்சிய மில்லாததால் நூலின் உரையாடல்கள் முழுதும் ஆங்கில – தமிழ் ஆக்கமாகவே எழுதப்பட்டிருக்கிறது. உரையாடலில் உயிரின்றி காணப்பட்டாலும் நூல் எல்லாரும் படிக்கத் தக்கதாய் இருப்பது நல்ல விஷயம். பிராந்திய வழக்கால் மொழிக்கேற்படும் இடையூறு தவிற்க்கப்பட்டு ஒரு முழுமையான சொல்லோவியமாக மிளிருகிறது வெள்ளை யானை.
இந்த நூலின் மையப்புள்ளியாக நிற்கும் பிரமாண்டமான குளிர் பனிக்கட்டியையே வெள்ளையானையாக உருவகப்படுத்துகிறார் ஆசிரியர்.
‘ யானையை சிறிய குச்சியால் பழக்கி ஆட்டிவைக்கிறான் இந்த சிறிய மனிதன் . அதன் கால்கள் , அதன் தந்தங்கள் , அதன் துதிக்கை, அதன் செவிகள் எல்லாமே அவனுக்கு கட்டுப்பட்டுவிட்டன. ஆனால் இன்னும் இந்த கண்கள் அவனை ஏற்கவில்லை. யானையின் கண்களை மனிதர்கள் புரிந்து கொள்ளவே முடியாது. இருளுக்குள் உறையும் நெருப்புபோல ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது.
யானை வஞ்சகங்களை மறப்பதே இல்லை என்கிறார்கள் .அது ஏன் மனிதனுக்கு பணிந்து போகிறது என்ற தீராத வியப்பு.’
யானையை இந்தியாவுக்கு உவமையாக ஆசிரியர் பேசும்போது நம்மையும் சிந்திக்க வைக்கிறது.
இந்த நூலின் தொடக்கமே அற்புதமாக நிகழ்கிறது. அயர்லாந்தில் ஏய்டன் பர்ன் தாயையும் தந்தையையும் பிரியும் நிழ்வு நெஞ்சில் நிற்பவை.
இந்த நூலை மெச்சிப்பேச பல்வேறு பக்கங்கள் இருக்கின்றன. நெஞ்சை நெகிழச்செய்யும் இடங்களும் முகத்தில் மாறிமாறி அறையும் வரிகளும் அடுத்தடுத்து வருகின்றன.
அந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தை ஆசிரியர் விவரிக்கும்போது நெஞ்சம் நடுங்குகிறது.
இன்றைய இளைஞர்களுக்கு பசியின் கொடூரம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்கள் வேண்டுமானால் எளிதாக இந்த பக்கங்களைத் தாண்டலாம்.
பிரிட்டீஷ் அதிகாரிகள் இந்த தேசத்தை எத்தனை துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை புத்தகத்தின் பல்வேறு பக்கங்களில் ஆசிரியர் தெளிவாக பேசுகிறார்.
இந்த தேசத்தில் பிராமணர்களது நிலையை அவர் விளக்குவது அழகானது.
புனையப்பட்ட கதையென்றாலும் இடையிடையே நிஜமான மனிதர்களும் நிஜமான அபூர்வ பொருள்களும் இடம் பெறத்தவறவில்லை.
கனவாய் முடிந்து மந்தையோடு மந்தையாக ஏய்டன் பர்ன் இணைகின்ற அந்த கடைசி அத்யாயம் யதார்த்தமானது.
வாசிக்கும் பழக்கம் மங்கிப்போன ஒரு சராசரி வாசகனான என் பார்வையில் ஏற்பட்ட நூலுக்கு எதிர் மறையான எண்ணங்கள் என்னவாக இருக்கும் ?
தோல்வியிலும் துயரத்திலும் முடியும் எந்த படைப்பும் மனித மனங்களில் வெருமையையே நிரப்புகிறது.
உரையாடலில் பிராந்திய மொழிகளில் பழகிப்போன வாசிப்பு நூலை அன்னியமாக்குகிறது.
அழுத்தமான தரவுகளற்றபோது வரலாற்றிலிருந்து விலகி படைப்பின் திடம் குன்றிவிடுகிறது.
படைப்பு முழுதும் ஆசிரியன் குரலே பல்வேறு பாத்திரங்களாக ஒலிக்கிறது.
இவையெல்லாம் இந்த புதினத்தின் இனிய மொழியை நேசிக்கும்போது சொர்பமானது.
வெள்ளையானை இன்றைய எழுத்துகளில் ஒரு முதன்மையான புத்தகம் ! அதற்கான அங்கீகாரம் தானே கிடைக்கும்!
____________________________________________________
வெள்ளையானை ஜெயமோகன் எழுத்து பதிப்பகம் 2013 மதுரை 625 004 விலை ரூ 400
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி
வரலாற்றில் வாழ்க்கையில் அடிபட்டு நைந்த ஒரு அப்பாவி மக்களைக் கதாமாந்தர்களாக வைத்து புனையப்பட்ட ஒரு நாவலில் விலை 400 உருபா. :-( பணக்காரகள் இலக்கிய இன்பம் நுகர உதவுபவர்கள் தலித்துகள் :-)
நானூறு பக்கம் கொண்டது வெள்ளை யானை.பக்கத்துக்கு ஒரு ரூபாய்.தலித்துக்கள் சமூக பொருளாதார நிலையில் என்றும் தாழ்த்தப் பட்ட மக்களே! ஆனால் இவர்களை வைத்துப் பிழைத்த வர்களை அன்றும் இன்றும் இவர்கள் உயர்த்த தவறவில்லை.
(வெள்ளை)யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!!
பைபில் போல இலவசமாக கொடுக்கலாம் (பின்புலம் மகா பயஙகரமானாதாக இருந்தாலும்..) , அப்படியே கொடுத்தாலும் , அது இங்கு வந்தாலும். அவர்களை இலவசம் கொடுத்து அசிங்கப்படுத்துவதை விட வேறு ஒன்றும் இல்லை என்று ஒரு கருத்து போடலாம். கருத்து போடுவது மாதிரி ஈசியியான ஒன்று வேறு இருக்கின்றதா இந்த உலகில்?
நல்ல நகைச்சுவையைத் தந்தாலும் ஒரு பேருண்மையை பாண்டியன் பகிர்ந்து கொள்கிறார் என்றே சொல்லவேண்டும். முன்பு ஜனநாயகம் என்ற பெயர்தானே ஒழிய ஒரு பாமரன் ஒரு பொதுவிடயத்தில் தன் மனதில் பட்டதைச்சொல்ல வழியே இல்லை. இன்று இணையதளம் அதைச்சாத்தியாமாக்கிவிட்டது. இணையதளத்தைப் பார்த்து எழுத்து ஊடகங்களும் பாமரமக்களுக்கு வாய்ப்பளிக்கிறது. ஐரோப்பிய ஊடகங்களைப்பார்த்து தி ஹின்டு ரீடர்ஸ் எடிட்டர் என்று ஒருவரைப்போட்டிருக்கிறது. ஓபன் பேஜ் என்ற பக்கத்தை வாரத்துக்கு ஒருமுறை வைத்து எவரும் தங்கள் கட்டுரைகள எத்தலைப்பிலும் எழுதி இங்கே போட வாய்ப்புண்டு என்று சொல்கிறது. என் கட்டுரைகள் பல ஆங்கு வெளிவந்ததுண்டு.
தில்லித்தமிழ்ச்சங்கத்தில் அடிக்கடி ஒரு நிகழ்ச்சி நடாத்துவார்கள்; அதன் பெயர்: எவரும் பேச்சாளர் இங்கே. அதன்படி எவரும் மேடையேறி எக்கருத்தைப்பற்றியும் பேசலாம். எல்லோரு பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டேயிருந்தோம். தம் மனங்களில் எழும் கருத்துக்களை எவர் கேட்பார் என்ற உணர்வுக்கு வடிகாலே தில்லித்தமிழ்ச்சங்கம் வழங்கும் பொதுமேடை.
திண்ணையின் பின்னூட்டக்களம் திண்ணை வாசகர்களின் கருத்துக்களை இடுவதற்காகவே. கருத்துப்போடுவது இலகு என்ற பேச்சுக்கே இடமில்லை. கருத்து எழுகிறது. போட வாய்ப்பிருக்கிறது அதுதான் சிறப்பு.
பாண்டியனின் கருத்துக்களும் போடப்படுகிறது என்பதே உண்மையான ஜனநாயகத்தின் சிறப்பு.
ஷாலி & கணபதி அவர்களே, இவர்கள் ஹரிஜனங்களை வைத்து பி்ழைப்பதாகவே இருக்கட்டும். ஹரிஜன மக்களுக்கு உண்மையில் எதுவும் செய்யாமல், வீட்டுக்கு ”அடங்க மறுத்து”, நாகரீக எல்லையை ”அத்து மீறி” தலையே… உலையே… என கண்றாவி வெத்து பேனர்களை வைத்து ஆயிரமாயிரம் வீண் செலவு செய்கிறவர்களிடம், ”ஐயா இந்த செலவுகளை தங்கள் சக ஹரிஜன சகோதர சகோதரிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தந்து உதவுங்களேன்” என்று சொல்லி அதை செய்தும்காட்டினால் நல்லாயிருக்கும்.
எந்தெந்த சாதிக்காரனெல்லாமோ தனக்குன்னு ஒரு பல்கலைக் கழகம் கட்டி வச்சிருக்கான். ஆனா இந்த ஹரிஜன சமுதாயத்தலைவர்கள் குறிப்பாக பணம் குவித்திருக்கும் சிலர் ஒரு கல்லூரியாவது நடத்தி அவர்கள் வாழ்வை ஏற்றம் செய்ய வைக்க கூடாதா ?
இதற்கு எதிர்கருத்தை வைத்தால் அது எங்கோ இழுத்துச் செல்லும். So, better to be precise.
ஒன்றைக்கவனித்தீர்களா? ஜயமோஹனின் நாவல் கடைகளில் கூட இன்னும் வரவில்லை. திண்ணையில் விமர்சனம் வந்துவிட்டது. இதற்குமுன், தலித்திய நாவல்கள் தலித்து எழுத்த்தாளர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுள் – எவ்வளவுதான் சிறப்பானதாக இருந்திருந்தாலும் – ஒன்றின் விமர்சனத்தைக்கூட இதுவரை யான் திண்ணையில் கண்டதேயில்லை.
எனவே வில்லவன் கோதைபோன்றோர் ‘பிராண்ட் நேம் காம்ப்ளெகஸ்’ க்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். அஃதென்ன? எழுத்தாளர் பிரபலமா? எடு. படி, விமர்சனம் போடு. As Pandian has just said, Thinnai is free. Tom, Dick and Harry can strut on this stage! அட்டைப்படத்தைப் பார்த்தும் எழுத்தாளரின் பெயரைப்பார்த்தும் நாம் நூலக்ளை வாங்கிப் படித்துவிடுவதால், பல சிறந்த எழுத்தாளர்கள் காணாமல் போய் விட்டார்கள்.
அண்மையில் மறைந்த புஷபா தங்கத்துரையின் இரங்கல் கட்டுரையை எழுதிய ஒருவர் (அமுதவன்) இதைக்குறிப்பிட்டார். பு. தவுக்கு கிடைக்கவேண்டிய வாசகர்கள் சுஜாதாவிடம் போய்விட்டார்கள். காரணம்: பிராண்ட் நேம் காம்ப்ளெக்ஸ்.
பெரிய மீன் சிறிய மீன்களை விழுங்குவது போல பிரபல எழுத்தாளர்கள் நம் சிந்தையை ஆக்கிரமித்து மற்றவர்களை விழுங்கி விடுகிறார்கள்.
இதில் ஒரு வேதனையென்னவென்றால், பிரபலங்களைப்பற்றி எவரும் குறைத்துப்பேசிவிட முடியாது. வெளியிடப்படாது. Thinnai has recently blocked my comments on a famous Tamil poet.
Nobody should say: EMPEROR HAS NO CLOTHES ON!
//எந்தெந்த சாதிக்காரனெல்லாமோ தனக்குன்னு ஒரு பல்கலைக் கழகம் கட்டி வச்சிருக்கான். ஆனா இந்த ஹரிஜன சமுதாயத்தலைவர்கள் குறிப்பாக பணம் குவித்திருக்கும் சிலர் ஒரு கல்லூரியாவது நடத்தி அவர்கள் வாழ்வை ஏற்றம் செய்ய வைக்க கூடாதா ?//
Shocking to read this.
எங்கேடா போற? டிக்கட் எடு.
அம்பேத்கர் காலனி.
இறங்கு கீழே. அடுத்தபஸ்லே போ.
(பொள்ளாச்சி அருகில் உண்மையில் நடக்கும் சம்பவம்)
அதாவது மிஸ்டர் கருப்பசாமி! அம்பேதகர் காலனி என்றாலே தலித்துகள் என்று ஊர்ஜனத்துக்குத் தெரிந்து மறைமுக தீண்டாமையை எல்லாரும் அனுசரிக்கிறார்கள். அரசு பட்டா போட்டு ஊருக்கு வெளியில்தால் நிலம் கொடுக்க, அது அம்பேத்கர் காலனி ஆகி, அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று அரசே உடந்தை தன்னையறியாமலே ஆகிவிடுகிறது. ஊருக்கு உள்ளேயா கொடுக்க முடியும்? கொடுத்தாலும் கூட தெரியும். கருப்பசாமி சார், ஊருக்கு உள்ளே வந்தால், வன்னியப்பெண்ணைப் பார்த்து … அப்புறம்…காதலா..காதலா என்றாகி, பின்னர் ஒரு தலித்திய நாவல்தான் எழுதவேண்டும்.
காம்பஸ் ப்ளேஸ்மெண்ட்ல் தலித்து மாணவன் என்று தெரிந்தால் வேலைக்கு எடுக்கமாட்டார்கள். பொதுக்கல்லூரியில் கூட்டத்தோடு சேர்ந்து தன்னை மறைத்துக்கொள்ள வாய்ப்புண்டு.
அவர்களுக்கென தனிக்கல்லூரி வைத்துவிட்டால், மிஸடர் கருப்பசாமி, அஃது ஊருக்கெல்லாம் தெரியும். கம்பெனிகளுக்கெல்லாம் தெரியும். கடைசியில் அரசே வேலை கொடுக்கவேண்டியது வரும்போது அது தேவர்களையும் பிள்ளைகளையும் பார்ப்பனர்களையும் வன்னியர்களையும் உசுப்பேத்திவிட, பார்ப்ப்னர்கள் இணையதள்த்தில் கொதிக்க (அய்யோ ஏழுமலையானே, மெரிட் போச்சு…மெரிட் போச்சு. கலிகாலம் முத்திப்போச்சு!!); மற்றவர்களோ குடிசைகளைக்கொழுத்துவார்கள்.
எப்படி தலித்துக்களை உயிரோடு கொழுத்துவது என்று மிஸ்டர் கருப்பசாமி ஒரு நூலைபோட்டால் அது 400 உருபாவுக்கு மேலாக இருந்தால் யான் வாங்கத்தயார்!
தனியே கல்லூரி வேண்டாம்; தனியே பள்ளி வேண்டாம்; தனியே காலனிகள் வேண்டா. Because the more you segregate them from general society, the more you create places for the Caste Hindus to practice untouchability!
\ கருத்து போடுவது மாதிரி ஈசியியான ஒன்று வேறு இருக்கின்றதா இந்த உலகில்? \
அன்பர் அய் என்ற திருவாழ்மார்பன் என்ற *ஜோ* அவர்கள் ஸ்ரீமான் ஜெயமோகன் அவர்களது அருமையான படைப்பினைப் பற்றி ஏதும் பேசாது ஜெயமோகனை ஏன் இகழ்கிறார் என்று புரிந்து கொள்வதற்கு என்ன ராக்கெட் சயின்ஸ் படித்திருக்கணுமோ?
//அவர்களது அருமையான படைப்பினைப் பற்றி ஏதும் பேசாது //
விமர்சனத்தைப் படித்து அருமையான படைப்பு என்று எப்படி சொல்கிறீர்கள்? இதைத்தான் நான் பிராண்ட் நேம் காம்ப்ளெக்ஸ் என்கிறேன். நூலை வாங்கிப் படித்துவிட்டுத்தானே சொல்லவியலும்? சிறந்த படைப்புக்கு அடிமையாகலாம். அதாவது படித்து மகிழலாம். படைப்பாளிக்கு அடிமையாகக்கூடாது. ஏனென்றால், ஒரு சினிமா இரசிகன் அவன் நாயகனுக்கு அடிமையான பின் அந்த நாயகன் நடித்த அனைத்துப்படங்கள் கட அவுட்டுக்களுக்கோ; ப்ளெக்ஸ் பேனருக்கோ பாலாபிசேகம் செய்வான். அதைப்போல நம் நாயக எழுத்தாளர் எழுதிய அனைத்து படைப்புக்களையும் நாம் பாராட்டியே தீரவேண்டும். அதுதான் அடிமைத்தனம். சினிமா இரசிகனும் இலக்கியம் வாசிப்பவனும் ஒன்றா?
மேலும் –
என்னைப்பொறுத்தவரை, நூலை வெளியிட்ட மதுரைப்பதிப்பகத்தார் சமூஹ சேவைக்காக, தலித்துகளைப்பற்றி விழிப்புணர்வுக்காகவே பதிப்பிடவில்லை. இலாபத்திற்குத்தான். ராயலடி எழுத்தாளருக்குப்போகும். இல்லையா?
இவர்களிருவரும் தங்களுக்குக் கிடைப்பதில் ஒரு சிறிய பங்கை மதுரை வாழ் சேரிமககள் பகுதியிலிருக்கும் மருத்துவமனைக்கோ, அல்லது பள்ளிக்கோ செலவிடுவேன் என்று சொன்னால் நூலை 400 உருபா கொடுத்துவாங்கிப்படிக்கலாம். ஏனென்றால், நாம் கொடுக்கும் பணத்திலிருந்தும் அவர்களுக்குப்போகிறது என்றால் தெரிந்தால், நமக்கு ஒரு ஆதம திருப்தி வரும்.
கிருட்டிணக்குமாருக்கு வரும்.
//ஒரு சிறிய பங்கை மதுரை வாழ் சேரிமககள் பகுதியிலிருக்கும் மருத்துவமனைக்கோ, அல்லது பள்ளிக்கோ செலவிடுவேன் என்று சொன்னால் //
உங்கள் பாணியில் ராயல்டி கொடுக்கின்றீன் என்று சொல்லி சரோஜோ தேவி புக்கை கூட விற்ரால் நீங்கள் வாங்க ரெடி? என்ன ஒரு சமூக அக்கரை
கோயில் உண்டியல்களிலோ அல்லது உபயதாரர்கள் அளிக்கும் நேரடிக்கொடைகளிலோ, அதன் மூலத்தைத் தேடி நிராகரிக்கிறார்களா? நிராகரித்தால் ஏதாவ்து தேருமா? கொள்ளையடித்தோன், கொலைசெய்தோன் (கொள்ளையடிக்கும்போது), போலி மருந்தை விற்று உயிர்களைக்கொலை செய்தோன், போலி பாலபவுடரை விற்று குழந்தைகள் உயிர்களைக்குடித்தோன், அரசு ஊழிய்த்தில் லட்சங்கள் கையூட்டாகப்பெற்று அனுமதிகளை தவறாக வழங்கியோன் – இவர்களைப்போல பலரும் – திருப்பதி, பழனி என்று கோயில் உண்டியலகளில் கொட்டவில்லை என்று பாண்டியன் அடித்துச்சொல்வாரா? நேர்மையான பணத்தைத்தான் உண்டியலில் போடவேண்டுமென்று நியதி இருந்தால், திருப்பதி வெங்கடாசலபதியும் பழநியாண்டியும் ஓட்டாண்டிகள் ஆய்விடுவர்.
எனவே உங்கள் அறச்சீற்றத்தை காட்டவேண்டிய இடத்திலும் காட்டிவிட்டு, தத்தனேரி குழந்தைகளுக்கு வாழ்வளிக்க உதவலாம். (தததனேரி – மதுரையில்)
வாழ்க்கையில் அடிபட்டோரை வைத்து வியாபராம் செய்வோர் அதில் ஒரு சிறுபங்கையாவது அவ்வேழைகளுக்குக் கொடுக்க வேண்டுமென்பதற்கு இஃதா எதிர்பதில் பாண்டியன்?
நம்ம க்ருஷ்ணகுமார் “விஷ்ணுபுரம்” அக்கிரகாரத்திலே குடியிருக்கிறவரு.ஜெய மோகன் எதை எழுதினாலும் இவரு ஜெய ஜெய சங்கரா! என்று கன்னத்தில் போட்டுக்கொள்வார். கணபதி இராமன் அவர்களே! இதுகளேயெல்லாம் கண்டுக்காமே போங்கள்
ஆமாம் சர்ச்சில் அப்பம் வாங்கி தின்பவன் அதி புத்திசாலி
அன்றைய தென்னிந்தியா பெரும்பஞ்சத்தை(1876-78) பின்னணியாக வைத்து வெள்ளை யானையை திரு.ஜெய மோகன் எழுதியதுபோல் அன்றே தமிழ் புலவர்கள் பஞ்சங்கள் பற்றிய பாடல்களை படைத்துள்ளனர்.
பாண்டிய நாட்டில் சங்ககாலத்தை அடுத்து மிகப்பெரிய பஞ்சம் தாக்கியதாக இறையனார் களவியல் குறிப்பிடுகிறது (“பன்னீரியாண்டு வற்கடம் சென்றது. செல்லப்பசி கடுகியது’).
கி.பி.1709-இல் மதுரை, ராமநாதபுரம், நெல்லைப் பகுதிகளில் நிலவிய பஞ்சம் பற்றி கத்தோலிக்கப் பாதிரியார்கள் ரோமாபுரியில் உள்ள வத்திகானுக்கு எழுதிய கடிதத்தில், “கொடும் பஞ்சத்தில் பெற்றெடுத்த குழந்தையை தாய் விற்பதும், கணவர்கள் கட்டிய மனைவிமார்களை அடகுவைப்பதும் நடைபெறுகின்றன. பாதையோரத்தில் பட்டினிச் சாவால் செத்து விழுந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்யவோ, சவ அடக்கம் செய்யவோகூட வழியில்லை என்று எழுதிய குறிப்பு கிடைத்திருக்கிறது.
பஞ்சம், போன்ற இயற்கையின் சீற்றங்களை நேரில் கண்ட புலவர்கள் மக்கள் அடைந்த சொல்லொணா துயர்களைப் பாடலாகப் பாடியிருக்கிறார்கள். ஒருவகையில் அவை வரலாற்று ஆவணம் எனலாம். பஞ்சம் பற்றிய செய்திகளையும், கும்மிகளையும், இலக்கியங்களையும் தொகுத்து புலவர் செ.இராசு “பஞ்சக் கும்மிகள்’ என்கிற நூலைப் படைத்திருக்கிறார்.
அரசர்குளம் சாமிநாதன், கள்ளப்புலியூர் மலைமருந்தன், வெண்ணந்தூர் குருசாமி ஆகியோர் தனித்தனியே படைத்திருக்கும் “தாது வருடப் பஞ்சக் கும்மி’, வெண்ணந்தூர் அருணாசலம் எழுதிய “கர வருடப் பஞ்சக் கும்மி’ மற்றும் “பரிதாபி வருடப் பஞ்சக் கும்மி’ வெங்கம்பூர் சாமிநாதன் எழுதிய “காத்து நொண்டிச் சிந்து’, ஜம்பை காசிம் புலவரின் படைப்பான “பெருவெள்ளச் சிந்து’ ஆகியவை புலவர்கள் நேரில் அறிந்த, அனுபவித்த காட்சிகளைப் பதிவுசெய்திருக்கும் வரலாற்று ஆவணங்கள்.
பஞ்ச காலத்தில் கூட இலக்கியமா என்று ஆச்சரியப்படாதீர்கள். வறுமையிலும், வேதனையிலும்தான் அற்புதமான இதயத்தைத் தொடும் படைப்புகள் உருவாகி இருக்கின்றன. கள்ளப்புலியூர் மலைமருந்தன் இயற்றிய “தாது வருடப் பஞ்சக் கும்மி’யில் இருந்து சில வரிகளைப் படியுங்கள் புரியும்.
“”வீட்டினில் தான்யமும் இல்லாமல் ஒன்றை
விற்கவும் கையில்இல் லாமல் கடன்
கேட்ட இடத்தில் கிடைக்கா மல்சிலர்
கெஞ்சி இரக்கிறார் பாருங்கடி
எறும்பு வலைகளை வெட்டி அதனில்
இருக்கும் தானியம்தான் எடுத்து
முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து
உண்ணுகி றார்சிலர் பாருங்கடி
குடிக்கத் தண்ணீரும் இல்லா மல்பணம்
கொண்டு திரிந்தாலும் கிட்டாமல்
இடிக்குப் பயந்த பாம்புகள் போலே
ஏங்குகி றார்சிலர் கேளுங்கடி”.
முதலமைச்சர் பக்தவத்சலம் காலத்து பஞ்சத்தை காரணம் காட்டியே கருணாநிதி கழகம் ஆட்சியை பிடித்தது.அப்பொழுது அவர்கள் எழுப்பிய தேர்தல் கோஷம்.
“பையிலே பணம்!
கையிலே அரிசி!!”
.
பெரும் பஞ்ச கதைசொல்லி ஜெயமோகனின் வெள்ளை யானையில் ரூபாய் நானூறு கொடுத்து ஏற முடியாத ஏழைகளுக்காக ஒரு இணைய தளம் உள்ளது.1876-78 ல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தையும் அதில் பங்கெடுத்துக்கொண்ட மனிதநேய ஆங்கில எழுத்தாளர்.வில்லியம் டிக்பை மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
https://archive.org/stream/faminecampaignin01digbuoft#page/n9/mode/2up
இம் மனித நேய எழுத்தாளர் இறந்தபோது மகாத்மா காந்தி அவர்கள் விடுத்த இரங்கல் செய்தியில் (Indian Opinion-29 Oct.1904) இவரை புகழ்ந்துரைக்கின்றார்.
“ By the death of William Digby CIE, India has lost a champion,whom it will be difficult to replac.his advocacy of the Indian cause strenuous and well-informed…By his voluminous writings, the late Mr.Digby ever kept the different Indian questions before the public.’
http://en.wikipedia.org/wiki/William_Digby_(writer)
ஷாலி என்ற பெயரில் எழுதும் மத போதகர் தரும் கிரிஸ்துவ போதையில் மயக்கத்தில் தலித் எல்லாம் இருங்கள். அதுதான் அவர்கள் விரும்பும் மத போதை. வேறு எதையும் படித்து விடாதீர்கள். இலவசங்களில் தான் உண்மயும் நேர்மயீயூம் இருக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையை பாழாக்காதீர்கள்.
வங்காள பஞ்சமும் ஒரு ‘நேர்மையான’ கிரிஸ்துவன் வருவான் தீடீர் என்று ஒரு ப்ளோகில் . வைட் பண்ணுங்கள்.
\ “விஷ்ணுபுரம்” அக்கிரகார \
தலைப்பை மட்டும் வாசித்து படைப்பை வாசித்தது போன்ற வாசிப்பனுபவம் பகரும் கருத்து. ம்……..பொலிக பொலிக.
ஸ்ரீ பாண்டியன் அவர்களுடைய கருத்தான
\ கருத்து போடுவது மாதிரி ஈசியியான ஒன்று வேறு இருக்கின்றதா இந்த உலகில்? \
வழிமொழிகிறேன்.
வ்யாசத்தின் பொருள் சார்ந்தும் கூட விவாதம் இருக்கலாம் என எதிர்பார்க்கலாமா?
” வெள்ளை யானை ” என்ற உருவகத் தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள நாவலை விமர்சனம் / அறிமுகம் செய்துள்ள வில்லவன் கோதை அதை தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் என்று அடையாளம் காட்டியுள்ளார். பின்னூட்டம் எழுதும் அன்பர்கள் அந்த நூல் ஆசிரியர், பதிப்பகத்தார், அதன் 400 பக்கங்கள் , அதன் விலை பற்றியும் நையாண்டி செய்வது போல் எழுதுவது வேடிக்கையானது. ஒருவேளை இது தலித் மக்களைப் பற்றியது என்பதால் இத்தனை கேவலமா? படித்த ” பண்புள்ளவர்கள் ” செய்யும் செயலா இது? நீங்கள் கூறும் கூற்றுதான் என்ன? தலித் பற்றிய நூல் விலை 400 ரூபாய் என்று கூறி நீங்களே இதை வாங்கி படிக்கக் கூடாது என்கிறீர்களா? புதிதாக வரும் ஒரு நூலை யாரும் அறிமுகமோ அல்லது விமர்சனமோ செய்யக்கூடாதோ ? நூல் வெளிவந்து எல்லாரும் படித்த பின்புதான் அதுபற்றி விமர்சனமும் கருத்தும் கூறவேண்டுமோ? அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
இங்கு பேசப்படவேண்டியது பண்பன்று; மனிதாபமானமே. மனிதாபாமனுமுடையோர் பண்புடையோர்தானே?
விமர்சனம் எவரும் படித்திராத கேள்விப்படாத நாவலைப் பற்றியது. அதை வில்லவன் கோதை மட்டும் படித்து நமக்குச் சொல்கிறார். நாம் அவர் சொல்வதைக் கேட்கத்தான் முடியுமே தவிர எதிர்பதில் விமர்சனத்தை ஒட்டிப்போட முடியாது. ஏதோ பழைய நூல ஒன்றைப்பற்றியென்றால் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் செய்யலாம். நாமும் படித்திருப்போமல்லவா? இங்கு முடியாது. That too, is not possible in Thinnai. Its policy seems to be this: ஒரு பிரபல எழுத்தாளர் படைப்பு ஒட்டுமொத்தமாக ஓஹோவென்று தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நெடுங்காலமாக நிற்கிறது. ஒருவர் படித்து வேறுமாதிரியாக விமர்சனம் ப்ண்ணுகிறாரென்றால் அஃது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பது என் அனுபவம். ஒரு சமயம் சுந்தர ராமசாமியின் முன்னுரையைப்பற்றிய என் பின்னூட்டம் தடைசெய்யப்பட்டது. இங்கே. It Galileo says that the earth revolves around the Sun, he should be burnt at stake for heresy. Recently, Thinnai banned my views on Subramania Bharati. Because, how dare I am to view him differently! The poet and the writer are sacred cows! They are holy beyond criticism. இதுதான் உலக நியதி. Swim with the current!.
புதிய நூலைப்பற்றித்தான் விமர்சனமே வரும். விமர்சனம் ஒரு தனிநபரின் கருத்துக்கள் மட்டுமே. ஒரு நூலை ஓஹோ என்று அன்னார் தூக்கிப்பிடித்தாலோ, தொப்பென்று கீழே போட்டாலோ, நாமொன்றும் செய்யவியலாது. அதே வேளையில் அவ்விமர்சனத்தில் வரலாற்றுப்பிழைகள்; அல்லது கருத்துப்பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டலாம். அதில் உள்ளோக்கமிருந்தால் செய்யலாம். Comments are free but facts are sacred. எ.கா. திண்ணையில் ஒருவர் அவர் நண்பரின் நூலுக்கு ஓஹோ என்று புகழ்ந்து எழுதினால் அதில் உள்ளோக்கம் இருக்கத்தானே செய்யும்? அதைச் சுட்டிக்காட்டலாம். இவையெல்லாம் பொதுக்கருத்துக்கள். Not applicable here.
எனவே பின்னூட்டங்கள் விமர்சனத்தையோ அந்நூலையோப்பற்றியிராமல் வேறுவிடயம் பற்றித்தான் இருக்க முடியும். பின்னூட்டமே போடக்கூடாதென்றால் மட்டுமே உங்கள் உணர்வுகள் சரி. கோபமும் நியாயமாகும். அப்படி உண்டா?
கட்டுரையில் போடப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். அம்மனிதர்களைப்பார்தத பின் எழுந்த உணர்வுதான் என் முதற்பின்னூட்டம். அம்மனிதர்களின் வரலாற்றைப்புதினமாக்கி சந்தையில் விற்று பதிப்பாளர் இலாபம் பார்க்க, எழுத்தாளர் புகழைத் தேடுகிறார். அவர் சிஷ்ய கோடிகள் இணையத்தில் பரப்புகிறார்கள். தவறொன்றுமில்லை. எங்கும் நடப்பதுதான். அதில் ஒரு சிறுபங்கை அம்மனிதர்களின் நலனுக்காக கொடுக்கக்கூடாதா? அப்படிப்பட்டவர்கள் கோடிக்கணக்கில் நம் தமிழகத்தில் வாழத்தானே செய்கிறார்களே? என்று கேட்பது பண்பு கெட்டச்செயலா ? If it is really bad as you say, then, you and I have different moral values.
Dear Doctor!
தமிழ்.ஹிந்து.காமில் அரவிந்தன் நீலகண்டர் என்பவர் இந்த நாவலுக்கு எழுதியிருக்கும் விமர்சனத்தைப் படியுங்கள். அவ்விமர்சனத்திற்கு போடப்படும் பின்னூட்டங்களையும் படியுங்கள்.
Thanks Shalli to copy the above portal link in Jayamohan site itself.
http://www.jeyamohan.in/?p=42467
ஜெயமோகனின் 400 ரூபாய் பற்றிக் கேள்வி கேட்பவர்கள், தியாக சீலர் திருமாவளன் கோஷ்டியின் ஸ்கார்ப்பியோவின் மதிப்பையும், மாயாவதியின் கறுப்பு யானை சிலைகளின் மதிப்பையும் அறிவது நல்லது. உள்ளூரில் ராஜ்பாக்ஷேயை அரக்கன் என்று சொல்லி விட்டு அவர் என்ன திருமாவளவன் மாதிரி ராஜ்பாக்ஷேயை பார்த்தவுடன் பல்லா இளித்து பிரியாணி தின்றார்.? அந்த வெள்ளையானை தான் நம்மை பஞ்சப் பரதேசிகள் ஆக்கியது. அவர்கள் கொள்ளையடித்ததை கொண்டு போக தண்டவாளம் போட்டால் , அவர்கள் தான் முன்னேற்றினர் என்று ஒரு கூட்டமே ஒப்பாரி வைக்கிறது. இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றதை தான் தேம்ஸ் நதி குறுக்கே பள பள பாலமாக கொட்டிக் கிடக்கிறது. அங்கு அருங்காட்சியகத்தில் உலகம் முழுதும் கொள்ளையடித்ததை டிக்கெட் போட்டு காட்டுகிறான் மதம் பிடித்த வெள்ளையானைக் கும்பி. அவர்களுக்கு முதுகு சொறிகிற கூட்டத்திற்கு ஜெயமோகன் பற்றி புரியாதது ஆச்சரியமில்லை…
திருமாவளவன் அரசியல்வாதி. அவர் ஒரு எம்.பி. அவர் கட்சி தேர்தல் கூட்டணியில் இருக்கிறது. ஜயமோஹன் இலக்கியவாதி. இருவரையும் இணத்துப் பேசமுடியாது.
வெட்டி கருத்து போடும் உங்களுக்கு இந்த அளவு அதிகாரமா? பயமாக இருக்கின்றது!
இணைக்கமுடியாது ஒட்டமுடியாது என்று சொல்லுவதுர்க்கு நீங்கள் யாரு இங்கு?
ஆப்பிளையும் ஆரஞ்சையும் இணைத்துப்பேசவியலாது என்றால் அதிகாரமா? அஃதொரு கருத்து என்று மட்டுமே எடுக்க முடியும். இலக்கியவாதிகள் வேறு; அரசியல்வாதிகள் வேறு. அதாவது ப்யூர் இலக்கிய, அரசியல் வாதிகள். என்பது ஒரு கருத்து.
கருநாநிதி இரண்டும். ஜயமோஹன் இன்றுவரை ப்யூர் இலக்கியவாதி. இந்துத்வா கொள்கை பிடிப்பாளர் என்றறியப்பட்டாலும் அவர் இன்னும் பிஜேபியில் முறையாகச்சேரவில்லை.
என்று அவர் சேருகிறாரோ அன்றிலிருந்து அவரை – திருமாவளவன், கருநாநிதி, மு.க அழகிரி, ஸ்டாலின், கனிமொழி -போன்ற அரசியல்வாதிகளோடு ஒப்பீடு செய்து அவர்களையெல்லாம் போட்டுத்தாக்கி இவரை ஊண்க்கால் ஆசை தீருமட்டும் தூக்கிவைத்துக்கொண்டு இறும்பூதெயதலாம். இப்போது வேண்டாமே!
சரியா?
(All my views are impersonal when it comes to societal issues. Take it that way, even if you don’t agree to them. Further, they are temporary only as my learning to correct or endorse, will never stop. So, I don’t know whether I shall hold them for ever. That’s why I write under different pseudonyms. I don’t want get identified with my own views currently written. I don’t want to even become slave to my name. I may change to disown my current views !)
திருமாவளவனார் தான் தன்னை இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள புத்தகம் போட்டுக் கொள்கிறார். மீசையை முறுக்கி கொண்டு, தன்னை “சே” குவாரா என்கிறார் இவர் கும்பலோ, “சே.. சே…” குவாட்டரத்தான் குவாரா என்று சொல்கிறாரோ என்று கன்பூயூச் ஆகிறார்கள். புத்தகம் போடுபவன் எல்லாம் இலக்கியவாதி என்றால், திருவள்ளுவரை விட பெரிய இலக்கியவாதி, கோனார் தமிழ் உரை போட்டவர் தான். ஜெயமோகன் ஒரு பார்வையாளன், விழியில் விழுந்து இதயம் நுழைந்ததை வீதிக்கு புத்தக வடிவில் கொண்டு வருபவன். கட்டப்பஞ்சாயத்துக் கும்பல், மிரட்டி மனைகளை பிடுங்குவதை விட மிரட்டி இந்த புத்தகத்தை மேட்டுக்குடி ஜாதிய அரசியல் தலைவர்கள் படிக்கச் சொல்லலாமே… என்னத் புரியப்போவது. நமக்குத் தான் டாப் புல்லா இருக்க பாப்பானை ஜெயிக்க எதையாவாது கொழித்துப் போடுவதற்கே நேரம் இல்லையே… 1000 வருடமாக வந்தேறிகளுக்கு வால் பிடித்துப் பார்த்தும் இந்த இந்து மதம் அனைவரையும் மிரட்டாமலே யோகா, தியானம் என்று மூச்சை இழுத்து விடச் சொல்கிறதே… என்னத்தச் செய்வது… புரியலை…
Two wrongs do not make a right :-)
Pl delete this. It should be relevant to his other mge. I have riposted it there.
Sorry for spamming. It can be retained please
//எனவே உங்கள் அறச்சீற்றத்தை காட்டவேண்டிய இடத்திலும் காட்டிவிட்டு, தத்தனேரி குழந்தைகளுக்கு வாழ்வளிக்க உதவலாம். (தததனேரி – மதுரையில்)//
நீங்களும் உங்கள் அறச்சீற்றத்தை காட்டவேண்டிய இடத்திலும் காட்டலாம் . அதே இடத்தில் மின்சார ட்ரான்ஸ்போர்மெர் ஊழலில் தப்பிக்க தப்பு தப்பு தலித் பெண்ணை மணந்து புரட்சி பண்ணியவரின் இன்றைய சொத்து மதிப்பு எப்படி ? மலையை முழுங்கிய மகாதேவன் அங்கு இல்லையா . அஞ்சும் நெஞ்சு இல்லாமல், புரட்சி பண்ணுங்கள். எழுத்த்தாலினடம் உங்கள் வீர்த்தை காண்பிக்க வேண்டாம். அங்குதான் கக்கணும் இருந்தார் அவர் மகனும் இருந்தார். அவர்கள் எப்படி என்று பாருங்கள். இன்றைய போஸ்டரில் மீசை முறுக்கும் பேர்களிடம் , வேண்டாம் அது — தததனேரி – மதுரையில் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.
//அதன் விலை பற்றியும் நையாண்டி செய்வது போல் எழுதுவது வேடிக்கையானது. ஒருவேளை இது தலித் மக்களைப் பற்றியது என்பதால் இத்தனை கேவலமா? படித்த ” பண்புள்ளவர்கள் ” செய்யும் செயலா இது? //
நன்கு படித்த பண்பாளர் திரு.ஜான்சன் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பெரிய பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியிருப்பதை கண்டு நமக்கு கோபம் வரவில்லை.ஒரு அப்பாவி மனிதனாக இருக்கிறாரே என்று அனுதாபம் தான் வருகிறது.ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப் பட்டதும் இந்துத்வத்தின் இலக்கிய பிம்பம் ஜெயமோகன் தலித் கவலையும் ஒன்றுதான்.புனைபெயரில் பாண்டியனார் வழியில் வெள்ளை யானை வெள்ளையர்களை இலக்கிய கழுவேற்றும் வேலைக்கு தலித்துக்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
வெள்ளை மிசினரியில் படித்து வளர்ந்த மருத்துவருக்கு இவர்களின் ஆபிரகாமிய துவேச வியாதியை இனம்காண முடியவில்லை.இன்னும் துலாம்பரமாக,தெள்ளத்தெளிவாக கூறும் அன்பர் புனல்பெயரின் கருத்து படித்தும் மருத்துவருக்கு புரியவில்லையென்றால்……..
புனைப்பெயரில் says:
December 11, 2013 at 12:48 pm
அந்த வெள்ளையானை தான் நம்மை பஞ்சப் பரதேசிகள் ஆக்கியது. அவர்கள் கொள்ளையடித்ததை கொண்டு போக தண்டவாளம் போட்டால் , அவர்கள் தான் முன்னேற்றினர் என்று ஒரு கூட்டமே ஒப்பாரி வைக்கிறது. இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றதை தான் தேம்ஸ் நதி குறுக்கே பள பள பாலமாக கொட்டிக் கிடக்கிறது. அங்கு அருங்காட்சியகத்தில் உலகம் முழுதும் கொள்ளையடித்ததை டிக்கெட் போட்டு காட்டுகிறான் மதம் பிடித்த வெள்ளையானைக் கும்பி. அவர்களுக்கு முதுகு சொறிகிற கூட்டத்திற்கு ஜெயமோகன் பற்றி புரியாதது ஆச்சரியமில்லை…
நன்கு படித்த பண்பாளர் டாக்டர்.ஜி.ஜான்சன் அவர்களின் மேலான கவனத்திற்கு, கலை இலக்கிய விமரிசகர்.திரு.யமுனா ராஜேந்திரன் அவர்களின் கருத்தை தயவுசெய்து பாருங்கள்.
“வெங்கட் சாமிநாதன்….. ஜெயமோகன்….. எழுத்துக்களையும் நாம் இத்தகைய புரிதலுடன்தான் அணுக வேண்டியிருக்கிறது. அவர்களது எழுத்துக்களில் பொதிந்திருக்கும் இந்துத்துவத்தையும், பார்ப்பனீயத்தையும் நாம் சுட்டிக்காட்டுவதன் வழி அவர்களது கலையையும் நாம் அதனது மனித விரோதத்திலிருந்து விடுவிக்க முயல்கிறோம். இந்த நிலைபாட்டையும் கூட நேரடியிலாக அரசியல் செயல்பாடுகளையும் விமர்சனங்களையும் தமது அன்றாட நடவடிக்கைகளில் மேற்கொள்ளாத வெங்கட் சாமிநாதனிடமும் ஜெயமோகனிடமும் மட்டுமே நாம் கைக்கொள்ள முடியும். துருதிருஷ்டவசமாக வெங்கட்சாமிநாதனும் சரி, ஜெயமோகனும் சரி தமக்குச் சமயம் வாய்க்கும்போதெல்லாம் தமது இந்துத்துவச் சார்பையும் பார்ப்பனீய சார்புகளையும் தமது புனைவல்லா எழுத்துக்களில், விமர்சனங்களில் உரையிடையிட்ட கருத்துக்களாக முன்வைக்கிறார்கள்.
வெங்கட் சாமிநாதன் ஒரு போதும் ஒரு அரசியல்வாதியின் புண்புகளுடன் செயல்களை மேற்கொண்டவரில்லை. அவரது இயக்கம் ஒரு தனிநபர் இலட்சியவாதியினுடையது. அவரது கலைத்தேடல் குறித்த மரியாதையுடனேயே அவரது சார்புகளை நாம் கருத்தளவில் எதிர்கொள்ள முடியும். ஜெயமோகனது செயல்பாடுகள் ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் திட்டமிட்ட பண்புகள் கொண்டது. ஜெயமோகன் தனது சமூக அரசியல் தத்துவக் கருத்துக்களின் தொடர்ச்சியாகவே தனது படைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார்.
ஜெயமோகனுக்கென இலட்சிய சமூகம் இருக்கிறது. ஒரு வகையில் இலக்கியச் செயல்பாட்டின் வழி தமது உருவக சமூகத்தை அவர் தமது படைப்புக்களில் முன்வைக்கிறார். அவருடைய படைப்புக்களில் பிரக்ஞைபூர்வமாக அவரது உருவக சமூகத்திற்கும் அவரது படைப்புக்களுக்கும் உறவு இருக்கிறது. பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் போன்றன இந்த உருவக சமூகம் நோக்கிய செயல்பாடுகள்தான்.”
: உயிர்மை – பிப்ரவரி 2011
// வரலாற்றில் வாழ்க்கையில் அடிபட்டு நைந்த ஒரு அப்பாவி மக்களைக் கதாமாந்தர்களாக வைத்து புனையப்பட்ட ஒரு நாவலில் விலை 400 உருபா. :-( பணக்காரகள் இலக்கிய இன்பம் நுகர உதவுபவர்கள் தலித்துகள் :-) //
// நானூறு பக்கம் கொண்டது வெள்ளை யானை.பக்கத்துக்கு ஒரு ரூபாய்.தலித்துக்கள் சமூக பொருளாதார நிலையில் என்றும் தாழ்த்தப் பட்ட மக்களே! ஆனால் இவர்களை வைத்துப் பிழைத்த வர்களை அன்றும் இன்றும் இவர்கள் உயர்த்த தவறவில்லை.
(வெள்ளை)யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!! //
இலக்கிய வாசகர்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம். ஜொலிக்கிறீர்கள். பொறாமையாக இருக்கிறது.
உயிர்மை நடத்துபவரின் யோக்கியதை (யோக்கியதை என்றால் பெண் , பொன் , பணம் இன்னும்..) புட்டு புட்டு சவுக்கு இல் வந்ததே . அப்படி இருந்தும் அதன் நம்பகத்தன்மை மற்ரும் அதன் தரத்தை இங்கு கொண்டு வருகின்றீர்கள்?? அப்படி இருப்பவர்கள் மீதுதான் உங்களுக்கு மரியாதையோ?
கலை இலக்கிய விமரிசகர் ? யமுனா ராஜேந்திரன் அவர்களின் கருத்தை எல்லாம் தததனேரி சுடுகாட்டில் வைது எரிக்க பட வேண்டியவை
//நீங்களும் உங்கள் அறச்சீற்றத்தை காட்டவேண்டிய இடத்திலும் காட்டலாம் . அதே இடத்தில் மின்சார ட்ரான்ஸ்போர்மெர் ஊழலில் தப்பிக்க தப்பு தப்பு தலித் பெண்ணை மணந்து புரட்சி பண்ணியவரின் இன்றைய சொத்து மதிப்பு எப்படி ? மலையை முழுங்கிய மகாதேவன் அங்கு இல்லையா . அஞ்சும் நெஞ்சு இல்லாமல், புரட்சி பண்ணுங்கள். எழுத்த்தாலினடம் உங்கள் வீர்த்தை காண்பிக்க வேண்டாம். அங்குதான் கக்கணும் இருந்தார் அவர் மகனும் இருந்தார். அவர்கள் எப்படி என்று பாருங்கள். இன்றைய போஸ்டரில் மீசை முறுக்கும் பேர்களிடம் , வேண்டாம் அது — தததனேரி – மதுரையில் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.//
பாண்டியன், மு க அழகிரியைப்பற்றியும் திருமாவளவனைப்பற்றியும் எழதுவது இங்கே பொருந்தா. இவர்கள் அரசியல்வாதிகள். ஜயமோஹன் இலக்கியவாதி. இலக்கியத்தையும் அஃதை எப்படி வியாபாரமாக்கப்ப்டுகிறது என்பதையும் அவ்வியாபாரத்திலும் கொஞ்சமாவது சமூக நலன் இருக்கக்கூடாதா என்பதைப்பற்றியும் பேசுங்கள்.
தில்லி அரசு ஒரு திட்டத்தைக்கொண்டுவந்தது: அதாவது பெரிய பப்ளிக் ஸ்கூல்களில் 25 விகித ஏழை மாணவர்களூக்கு ஒதுக்கீடு செய்து இலவசக்கல்வி வழங்க வேண்டுமென்று. அது தற்போது தில்லியில் செயல்படுத்தப்படுகிறது. அரசு சொன்ன் காரணம்: இலவச இடம்; இலவச மின்சாரம்; வரிவிலக்கு என்றெல்லாம் பெறும் இப்பள்ளிகள் ஏன் கொஞ்சமாவது நலிந்தோருக்கு உதவக்கூடாது என்றுதான். The schools initially resisted: but the Delhi govt warned them: If you don’t, we will withdraw your licence and other exemptions! அப்போலோ ஆசுபத்திரியைக்கேட்க அவர்களும் இலவச ஓபிடியை அறிமுகப்படுத்திவிட்டார்கள் தில்லியில். இக்கேள்வியையே மத்திய அரசு பெரும் கார்ப்ரோட்ட் நிறுவனங்களிடமும் கேட்க, அவர்களும் சமூஹ உதவிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்: கிராமங்களைத் தத்தெடுத்தல் போன்றவை.
சமூஹத்தில் பலரும் தாம் சமூஹத்தை வைத்துப்பெற்ற பணப்பெருக்கத்தை ஒரு சிறிய அளவாவது சமூஹத்துக்குத் திருப்பிக்கொடுக்க, இந்த எழுத்தாளர்கள் – பிரபலங்களைத்தான் சொல்கிறேன் – என்ன திரும்பிக்கொடுத்தார்கள்? அமெரிக்க, ஆஸ்திரேலியா என விமானத்தில் பறக்கும் எழுத்தாளர்கள் என்ன திரும்பிக் கொடுத்தார்கள்? குறைந்தது தலித்துகளை வைத்து எழுதப்பட்ட இந்த நாவலில் பணத்தில் கொஞ்சமாவது கொடுத்தால் குறைந்துவிடுவாரா ஜயமோஹன்?
மார்வாடிகள் கூட தண்ணீர்ப்பந்தல் வைத்து மக்களின் தாகத்துக்காவது உதவுகிறார்கள். தமிழ் மொழியால், தமிழர்களால் பிழைக்கும் இத்தமிழ் எழுத்தாளர்கள் எப்படி தம் பணத்தைப்பெருக்கலாமென்றுதான் இருக்கிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள் இவர்கள்.
Please have some little bit of concern for the society, dear writers!
அப்படி பெரும் ஆராய்ட்சி செய்து அந்த புக் போனியாகவில்லை என்றால் உங்கள் சொத்தை நீங்கள் நஷ்ட ஈடாக கொடுக்க ரெடியா? ஊருக்கு உபதேசம் அப்ரோம் பன்னலாம்.. தலித்தை பர்ரிய புக் என்றால் அவர்களுக்கு உதவி என்ற உங்கள் கொள்கை புல்லரிகின்றது. நாளை செட்டியார் பற்ரி யாராவது எழுதும் முன் அவர்களில் யாருக்கு உதவி என்று பாருங்கள் ?
தனக்குக் கிடைப்பதில் எவரை வைத்துப் பிழைத்தீர்களோ அவர்களுக்குச் சிறிய பங்கையாவது கொடுங்கள் என்பது ஒரு வேண்டுகோளே. கட்டாயமன்று. ஏதோ கட்டாயப்படுத்தியதாக எழுதக்கூடாது.
// வெள்ளை யானை வெள்ளையர்களை இலக்கிய கழுவேற்றும் வேலைக்கு தலித்துக்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.// ஷாலி எழுதியது.
இதுதான் என் பயமும் கூட. ஆனால் நாவலைப் படிக்காமல் அதை என்னால் உறுதி செய்யவியலாது. But in arriving at a conclusion, the learned judges, in the absence of clear cut evidences, may rely on the history of the accused. அதன்படி, ஜயமோஹன் தலித்துக்களைப்பற்றி ஒரு நாவல் எழுதினால், அது தலித்துக்களை வைத்து ஏதோ சொல்கிறார் என்று வரலாம்.
இங்கே ஒன்றைச்சொல்லியாக வேண்டும். வில்லவன் கோதையின் sub title ஐப்பாருங்கள்: தலித் இலக்கியம்.
தலித் இலக்கியமென்றால் என்ன பொருள்? தலித்தால் எழுதப்பட்டதா? இல்லை தலித்துக்களைப்பற்றி எழுதப்பட்டதா?
இன்னொரு சொல் இருக்கிறது: தலித்திய இலக்கியம். இது தலித்துகளால் எழுதப்பட்ட ஒன்றைத்தான் குறிக்கும். இதுவே இன்று பல்கலைக்கழகங்களில் ஒரு ஜான்ராவாக (genre) எடுத்துப்படிக்கப்படுகிறது. இன்றைய தமிழகத்து தலித்திய இலக்கியத்தின்க்கிழ் வருபவை: சோ தர்மன், சிவகாமி, சிரிதர கணேசன், இமயம், பாமா – மற்றும் பலர் எழுதியவை. இவர்கள் அனைவரும் தலித்துகள். தலித்திய வாழ்க்கையை இன்று வரை வாழ்ந்துவருபவர்கள். இவர்கள் எழுத்துக்கள் direct experiences. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாதிக்கொடுமையையும் தீண்டாமையை இவர்கள் கற்பனை பண்ணி எழுதும்போதும்கூட உணர்ச்சிகள் கரைபுரண்டோடும். தலித்தல்லாதவர் எழதும்போது அவை ஒரு intellectual experiences போலத்தான் வரும். எ-கா: திக்கற்ற பார்வதி. பார்வதி ஒரு தலித்துப்பெண். நாவலாசிரியர் ஒரு ஃபேமஸ் ஐயங்கார். பார்வதிபடும் கொடுமைகள் நிறைந்த வாழ்க்கையைப்பற்றிய நாவலது. A fine classical novel in Tamil. ஆசிரியர் பார்வதியைப் பெண்ணாக மட்டுமே பார்க்கிறார். அக்கொடுமைகளை எழுத ஜோதிர்லதா கிரிஜா போதுமே. ஒரு பிராமணப்பெண்ணை நாயகியாக வைத்தும் எழுதலாமே? அதற்கேன் இராஜாஜிக்கு ஒரு தலித்துப்பெண் வேண்டும்? எழுதக்கூடாதென்று சொல்லவில்லை. எழுத்து வேறு ஒரு இலக்கிய உணர்வைத்தான் தரும் எனபதுவே .
எனவேதான், ஒரு படைப்பாளியின் பின்புலமும் சேர்த்துவைத்து அவன் படைப்புக்கள் ஆராயப்படுவதுமுண்டு. ஒரு பிராமணானாலோ, ஒரு உயர்ஜாதி எழுத்தாளராலோ, ஒரு தலித்திய வாழ்க்கையை உணர்ச்சிகரமாக எழுதவியலாது.
Therefore, I fear to touch a novel on dalit experiences produced by a non-dalit. He looks down upon them. சிலவேளைகளில் பரிகாச உணர்வுடன் அவர்களின் வாழ்க்கையை எழுதுவார்கள். எ.கா: சினிமாவுக்குப்போன சித்தாளு. பரிதாபமான வாழ்க்கை வாழும் ஒரு தலித்து இளம்தம்பதிகளை நாவல் முழுவதும் பரிகாசம் பண்ணுகிறார். அப்பரிகாசம் அவர் எதைக்காட்ட நாவல் படைத்தாரோ அதை நிறைவேற்ற: எம்.ஜி.ஆரை தமிழர்களை ஏமாற்றுகிறார் என்பதே.
A dalit writer doesn’t look at them, or down upon them, but look with them. Integration. A non-dalit can sympathise. Never can he empathise.
இருப்பினும் ஒரு மாபெரும் எழுத்தாளன் இத்தடைகளை அவனுக்கு extraodinary empathy இருந்தால் மட்டுமே கடக்க முடியும். All of us can have degrees of empathy. But a writer needs it to an extraordinary degree.
அப்படிப்பட்ட தலித்தல்லா மாபெரும் எழுத்தாளனை தமிழகம் ஒருநாள் உருவாக்கும் எனபது என் நம்பிக்கை.
(Sorry for this long feedback. Meet you after five days)
\ வெள்ளை மிசினரியில் படித்து வளர்ந்த மருத்துவருக்கு இவர்களின் ஆபிரகாமிய துவேச வியாதியை இனம்காண முடியவில்லை. \
வைத்யர் ஸ்ரீ ஜான்சன்,
ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களது சமீபத்திய வ்யாசம் வாசித்திருப்பீர்கள். அதில் அவர் முஸல்மாணியரை விதந்தோதியுள்ளார்.
நான் உங்களுடைய ஐடா ஸ்கடர் வ்யாசத்தில் அந்த அம்மையின் மதம் சாரா பணியை விதந்தோதியுள்ளேன். புனித ரெவரெண்டு தெரசாள் அவர்களின் பணியைக்கூட விதந்தோதியுள்ளேன். நான் கேழ்விக்கு உட்படுத்தியது அவர் தவறான நபர்களிடம் இருந்து தனம் சேகரித்தமை. நோயாளிகளுக்கு சிகித்சைக்கான ஔஷதம் தராது ப்ரார்த்தனை செய்தல். அன்னாரது பதக்கம் புற்று நோயை குணப்படுத்தும் போன்ற செய்திகளை.
க்றைஸ்தவ செயல்பாடுகளை விமர்சிப்பதை ஆப்ரஹாமிய த்வேஷ வ்யாதி என்றால் ஆப்ரஹாமியரின் ஏற்கப்படும் செயல்பாடுகளை விதந்தோதுவதை என்னவென்று விமர்சனம் செய்யப்படும்.
இணக்கமான சமூஹத்திற்கு ஒளிவு மறைவற்ற ஆரோக்யமான நேர்மையான கருத்துப் பரிமாறல் அவசியம்.
இந்த வ்யாசத்தில் அப்படி ஒரு உத்தரத்தை தாங்கள் பகிர்ந்தது ச்லாக்யமானது.
ஆப்ரஹாமியர் தங்கள் மதத்தை அதன் படி ஒழுகுவது போற்றத் தகுந்தது. ஒரு விதத்தில் ஒளிவு மறைவின்றி மதம் பிடிக்கா ஹிந்து என்று சொல்லிக்கொண்டே ஸ்ரீமான் ஜெயபாரதன் அல்லேலூயா பாடுவது கூட பரவாயில்லை தான்.
ஆனால் முகமூடி சுவிசேஷிகளின் சேவை ஒரிஜனலையெல்லாம் ஓரங்கட்டிவிடும் போல் இருக்கிறதே.
\ ஜயமோஹன் இலக்கியவாதி. இலக்கியத்தையும் அஃதை எப்படி வியாபாரமாக்கப்ப்டுகிறது என்பதையும் அவ்வியாபாரத்திலும் கொஞ்சமாவது சமூக நலன் இருக்கக்கூடாதா என்பதைப்பற்றியும் பேசுங்கள். \
ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களே, நீங்கள் பல பெயரில் தளம் தளமாக கருத்துப்பகிரும் விஷயத்தை ஏதோ ஒரு சம்வத்சரம் முன்பு ஜெயமோகன் பகடி செய்துவிட்டார் என்பதற்காக அவரது படைப்பைப் பற்றி தாங்களும் பேச மாட்டீர்கள் மற்றவரையும் பேச விடாது விவாதத்தை தடம் புரளச் செய்வது நேர்மையான செயலா?
//விவாதத்தை தடம் புரளச் செய்வது நேர்மையான செயலா?//
விவாதமே இங்கில்லை. ஒரு நூலில் விமர்சனத்தில் விவாதம் இருக்க முடியாது. அவ்விமர்சந்ததில் வரலாற்று அல்லது கருத்த்ப்பிழைகள் இருந்தால் மட்டுமே சுட்டிக்காட்டலாம் என்று ஏறகன்வே எழுதிவிட்டேன். விமர்சனம் விமர்ச்கரின் சொந்த அனுபவம். அதைப்பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? ஒருவன் எனக்கு அண்ணாதுரையின் நூல்கள் பிடிக்குமேன நீண்ட விமர்சனம் எழுத இன்னொருவன் பிடிக்காது என இன்னொரு விமர்சனம் இருநபர்களின் தனிப்பட்ட பார்வைகள் என்றுதானே விட முடியும்? எனவே விவாதம் வில்லவன் கோதையின் சுய பார்வை அதாவது விமர்சந்த்தில் இருக்காது.
என் முதற்கருத்து தலித்துகளைப் பற்றி நூலுக்கு இவ்வளவு விலையா? பணக்கார இலக்கிய இன்பம் நுகர தலித்துக்களை வைத்தா? இதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை கிருஸ்ணகுமார்?
ஜயமோஹன் ஏதாவது எங்காவது பகடி பண்ணுவதைவிட இங்கு வந்து எழுதச்சொல்லுங்கள்.
அன்பார்ந்த் வில்லவன் கோதை,
தாங்கள் செய்த நூலறிமுகம் இந்த நூலை வாசிக்கத் தூண்டுகிறது.
ஸ்ரீ ஜெயமோகன் அவர்கள் மிகவும் நேர்மையாக பஞ்ச காலத்தில் ஜாதிஹிந்துக்கள், க்றைஸ்தவர்கள் போன்றோரை பக்ஷபாதமின்றி தன் படைப்பில் காட்டியமை ச்லாகிக்கத் தக்கது. பரங்கியர் அனைவரையும் கொடியவர்கள் எனக்காட்டாது அவர்களிலும் மனித ஹ்ருதயத்துடன் இருந்தவர்களை அவர் சித்தரித்தமை அன்னாரின் கருத்துச் சமநிலையை சுட்டுகிறது.
பஞ்ச காலத்தில் ஜாதிவித்யாசமின்றி மேல்ஜாதி ஹிந்துக்கள் எப்படி சுயநலமுடன் நடந்துகொண்டார்கள் என்பது எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டிய விஷயம். அப்படி அனைவரையும் இந்த படைப்பு சிந்திக்க வைத்தால் அது படைப்பின் வெற்றி.
அத்துடன் நிற்காது சமூஹ நல்லிணக்கத்திற்குப் பாடுபட விழைவதற்கு ஒரு நபருக்கு இது போன்ற படைப்புகள் அடிகோலுமானால் இன்னமும் நன்று.
ஹிந்துஸ்தானத்தில் தலித் சஹோதரர்கள் பல இடங்களில் இன்னமும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பது விசனம் தரும் விஷயம். வால்மீகி ராமாயணத்தின் அருமையை எனக்குச் சுவை மிக பகிர்ந்தவர்கள் உத்தரபாரதத்து தலித் சஹோதரர்கள் என்பதனை என் ஜன்மமுழுதும் நினைவில் கொள்வேன்.
ஆனாலும் ஐயன்மீர், தங்கள் அறிமுகம் நிறைகளை மட்டிலும் பேசுகிறது.
தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீமான் ஜடாயு மஹாசயர் அவர்களது நூலறிமுக வ்யாசம் ஓரிரு குறைகளையும் பட்டியலிடுகிறது. சாம்பிளுக்கு ஒன்று
\ அதே நேரத்தில், சமநிலை கொண்ட வரலாற்றுப் பார்வை என்பது எல்லாத் தரவுகளையும் உற்று நோக்கி பதிவு செய்வதும், பொதுப் படுத்தல்களைத் தவிர்ப்பதும் தான். எனவே, 1870களில் ஒரு இந்தியக் குரல் கூட எழவில்லை என்பது வரலாற்று ரீதியாக சரியல்ல; இந்த நாவல் கவனிக்கத் தவறி விட்ட விஷயங்கள் உள்ளன என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
அ) நாவலிலேயே “மதராஸ் மெயில் நிருபர்” என்று ஒரு இடத்தில் வருகிறது. சென்னையில் அப்போதைய பஞ்சத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய செய்திகளை முழுமையாக வெளியிட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது சாதி இந்துக்கள் நடத்திய இந்தப் பத்திரிகை தான். \
ஜெயமோகன் அவர்களது நூலைப் பற்றியோ தங்களது அறிமுகம் பற்றியோ விவாதிக்காது முப்பதுக்கு மேற்பட்ட உத்தரங்கள் இந்த இழையின் கீழ் பதிவானது திண்ணை தளத்தின் விவாதங்கள் எப்படித் தடம் புரளுகின்றன என்பதைக் காட்டுகின்றது என்றால் மிகையாகாது. அதுவும் விஷயத்தைப் பற்றி விவாதியுங்கள் என்று மன்றாடலுக்குப் பிறகும்.
ஒரு நூலை வாசிக்க ஊக்குவிக்கும்படிக்கான இந்த வ்யாசம் சமர்ப்பித்தமைக்கு நன்றி ஐயன்மீர். ஆனால் ஒரு விக்ஞாபனம். மேற்கொண்டு தாங்கள் இது போன்று அறிமுக வ்யாசங்கள் சமர்ப்பிக்கும் போது நிறைவுகளுடன் குறைகள் ஏதாகிலும் காணக்கிட்டினாலும் அதைப் பற்றியும் கருத்துக்கள் பகிருங்கள்.
அதென்னமோ தெரியலே! மதுரை, பாண்டியன் என்றாலே எரிக்கணும்,கொளுத்தணும் என்றே அண்ணே எழுதுகிறார்..அன்று கண்ணகி உட்ட சாபம் இன்னக்கியும் வெளங்குது. பாண்டியன் என்ற மன்னர் பெயரை வைத்துக்கொண்டு வெட்டியான் வேலை பார்ப்பது நல்லாவா இருக்கு.இதுவும் நல்லாத்தான் இருக்கு அரிச்சந்திர மகாராஜா பார்த்த வேலையாச்சே!தத்தன் எரி சுடுகாட்டிலே யமுனா ராஜேந்திரன் கருத்தை எரிக்க பாண்டியன் ஆசைப்படுகிறார்.இது ரொம்ப புதிய கருத்தா இருக்கு.பொதுவா ஜாதீயால் தலித்துகளை உயிரோடு எரிக்கிறதும் குடிசையை கொளுத்துறது தான் வழக்கம்.அன்று கீழ் வெண்மணி இன்று தருமபுரி இடையில் குஜராத்,பெஸ்ட் பேக்கரி,ஸ்தாநிலஸ் பாதிரி.என்னமோ போங்க! மாற்றுக் கருத்துக்களை தத்தநேரியில் தகனம் பண்ணும் பாண்டியனாரே!உங்கள் ஜெயமோகன் கூட எரியும் பனிக்காடு (Red Tea) எழுதி ஏழை தலித் மக்களுக்காக பாடுபட்ட டாக்டர் டேனியலை குடிகார மதமாற்றியாக பாலா பரதேசியில் மாற்றிப் பார்த்து மகிழ்ந்தவர் தான்.ஆகவே தாங்கள் தத்தனேரி சுடுக்காட்டு சுடலைப் பாண்டியாக மாறவேண்டாம்.உங்கள் ஜெய மோகன் வழியை ஏன் நீங்களும் பின்பற்றக்கூடாது? இதோ உங்கள் இலக்கிய இமயம் ஜெயமோகன் பேசுகிறார்..
“ எந்த மானுட உணர்ச்சிகளையும் உச்சங்களையும் உணர முடியாத, சதிகளை தவிர வேறெதையுமே சிந்திக்க முடியாத, ஒருவகையில் பரிதாபத்திற்குரிய மனம். இத்தகைய மனங்கள் எந்த ஒரு கருத்தியல் சூழலிலும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால் தமிழில் இந்தக்குரல்கள் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கின்றன. எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், யமுனா ராஜேந்திரன் எல்லாமே இந்தவகையானவர்கள்.
யமுனா ராஜேந்திரன் என்னைப்பற்றிச் சொன்னதை விடுங்கள். அவர் மற்ற எந்த எழுத்தாளர்களைப்பற்றி சாதகமாக ஏதாவது சொல்லியிருக்கிறார்? எஸ்.ராமகிருஷ்ணனைப்பற்றி அவர் எழுதியதை வாசித்திருக்கிறீர்களா? அ.மார்க்ஸ் எந்த ஒரு நல்ல எழுத்தாளரைப்பற்றியாவது நல்லவிதமாக ஏதாவது சொல்லி கேட்டிருக்கிறீர்களா?
ராஜேந்திரனினின் அந்த உளறலை வாசித்துப்பார்க்கும் கௌரவத்தைக்கூட அவருக்கு நான் அளிக்கப்போவதில்லை. இவற்றுக்கு அப்பால் நான் எப்போதோ சென்றுவிட்டேன்.”
http://www.jeyamohan.in/?p=12421
//ஜெயமோகன் கூட எரியும் பனிக்காடு (Red Tea) எழுதி ஏழை தலித் மக்களுக்காக பாடுபட்ட டாக்டர் டேனியலை குடிகார மதமாற்றியாக பாலா பரதேசியில் மாற்றிப் பார்த்து மகிழ்ந்தவர் தான்
//
அடேடே அப்படியா? அடேடே அப்படியா? அடேடே அப்படியா? அடேடே அப்படியா? (கவுண்டமணி பாணியில் ரிபீட் செய்த்துகொள்ளவும் வாசிக்கும்போது)
கிரித்துவர்களுக்கு ஏன் இங்கு கோவம் என்று தேடியதில் கிடைத்தது விடை என்க்கு. இதோ உங்களுக்கும்.
http://www.tamilpaper.net/?p=661
லிட்டனின் அலட்சியப் போக்குக்கு தென்னிந்தியா கொடுத்த விலை ஒரு கோடி உயிர்கள். சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையே அப்போது மூன்று கோடி தான்.
இவ்வளவு உயிர்ச்சேதமிருந்தும் ஏன் லிட்டன் இப்படி நடந்து கொண்டார்? அவரது கொள்கைப் பிடிப்பு ஒரு காரணம். அவர் கொண்டிருந்த லேசே ஃபேர் (laissez-faire) பொருளாதாரக் கொள்கைகளின் படி சந்தைதான் முதன்மையானது, அதில் அரசின் தலையீடு கூடவே கூடாது. பஞ்சம் வருவதும் மக்கள் சாவதும் சகஜம் தான், மக்கள் தொகை இப்படியாவது குறையட்டுமென்ற அலட்சியமும் லிட்டனுக்கு இருந்தது. இந்திய மக்களுக்காக பிரிட்டன் ஒரு பைசா செலவு செய்யக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தார் லிட்டன். ஆனால் அதே சமயம் பஞ்ச நிவாரணத்துக்காகச் சேர்க்கப்பட்ட நிதியை ஆஃப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நிறுவுவதற்காக தண்ணீராகச் செலவு செய்தார். பஞ்ச காலத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அவரது அரசியல் வாழ்க்கையைக் கொஞ்சம் கூட பாதிக்கவில்லை.
ஆனால் எந்த ஆஃப்கானிஸ்தான் போருக்காக, பஞ்சப் பணத்தை செலவு செய்தாரோ அந்த போரில் ஏற்பட்ட தோல்வியே 1880ல் அவரது பதவிக்கு உலை வைத்தது. 1876-78 க்குப் பின்னர் இந்தியாவில் பல கடுமையான பஞ்சங்கள் வந்துள்ளன. ஆனால் 1876 பஞ்சமும் லிட்டனின் நடத்தையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அலட்சியத்தியத்தையும், சந்தை பொருளாதாரத்தின் கொடிய முகத்தையும் இன்றுவரை உலகிற்கு பறை சாற்றுகின்றன.
திருமாவளவனார் இங்கு என் கொண்டாடப்படுகின்றார் , பாதிரி கூட அந்த பெயரை கேட்டாலா பணம் கொடுபவர்கள் ஆயிர்றே. கிரிஸ்துவ பாசம் எப்பூடி
அவர் இசுலாமியரோடுதான் இணக்கமாக இருக்கிறார். போன மாதம் மதுரை முனிச்சாலையில் பெரிய மாநாடு. த.மு.மு.க நடாத்திய முசுலிம் உரிமைகள் பற்றியது. இவர்தான் சிறப்புப் பேச்சாளர். சுவரொட்டிகளில் இசுலாமிய உடைகளோடுதான் காணப்பட்டார். மதுரையெங்கும் சுவரொட்டிகளும் பேனர்களும். எந்த கிருத்துவக்கூட்டத்திலும் அவர் கிடையாது. மதுரையில் கிருத்துவ ஜனத்தொகை அதிகம். எல்லாவற்றையுமே தலை கீழாக எழுதுகிறீர்கள்.
IIM Ganapathi Raman
அவர் பெயரை சொல்லி பாதரி பணம் கொடுத்தது எல்லாம் கடந்தகாலம். என்னுடிய பினூட்டம் வழ வழ கொழ கொழ இல்லை. தேவை என்றால் நீங்கள் கூகிலே போயி தேடலாம். தவறு என்றால் நான் ஆதாரம் கொண்டு வருகின்றேன் பின்பு
இங்கு உத்தரங்கள் ஸ்ரீமான் ஜெயமோகன் அவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்வதை மட்டிலும் கர்ம ச்ரத்தையாக செய்து வருகையில் ,
தமிழ் ஹிந்து தளத்தில் இரண்டு வ்யாசங்கள் ஸ்ரீமான் ஜடாயு மற்றும் ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன
http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2b/#comment-117946
http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2a/
http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai/
அருமையான அலசல்கள். வரலாற்றுத் தரவுகள்.
உத்தரங்கள் வெறும் வசவுகளாக காழ்ப்புகளாக இல்லாது — அறிவு பூர்வமான விவாதங்களாக– கறாராக கருத்துக்கள் சார்ந்தவையாக — திண்ணை தளத்தில் — அதன் பாரம்பர்யம் சார்ந்து தொடர கருத்துப்பகிரும் அன்பர்கள் ஒத்துழைக்க விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
//தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீமான் ஜடாயு மஹாசயர் அவர்களது நூலறிமுக வ்யாசம் ஓரிரு குறைகளையும் பட்டியலிடுகிறது. //
கிருஸ்ணகுமாருக்கு நன்றிகள் இந்நூல் தற்போது இந்துத்த்வாவினரிடையே பிரபலமாகிக்கொண்டு வருகிறது என்பதை எடுத்தியம்பியதற்கு.
அரவிந்தன் நீலகண்டன் இந்த நாவலைப்பற்றி ஓஹோவென்று எழுதியிருக்கிற விமர்சனத்தைத் தற்போது தமிழ் ஹிந்து. காமின் படிக்கலாம். இன்னாவலில் ஜயமோஹன் தலித்துக்களைப்பயன்படுத்தி ஒரு இந்துத்வா கொள்கையைப் பிரச்சாரம் பண்ணியிருக்கிறார் என்றால் நம்பலாம். இல்லாவிட்டால் ஏன் தமிழ்.ஹிந்து.காம் இந்த நாவலை மட்டும் கொண்டாடுகிறது?
கிருத்துவர்களுக்கு இந்நாவல் ஒருவேப்பங்காயாக இருக்கும். இந்துத்வாவினருக்கு தேனாக இருக்கும்.
ஆக மொத்தம் இஃதொரு பிரச்சாரம்.
ஏன் கிருஸ்ணகுமார் இந்த நாவலைப்படிக்காமலே ‘அருமையான படைப்பு’ என்றார்? பாண்டியனும் புனைப்பெயரில் என்போரும் ஏன் இவ்வளவு உணர்ச்சிகரமாக இங்கு எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? என்பதற்கெல்லாம் விளக்கம் இப்போது தெரிந்திருக்கும்.
ஒரு குறிப்பிட்ட கூட்டமட்டும் விரும்பும் படைப்பு பிரச்சாரமே. தலித்திலக்கியத்தில் மேலும் ஒரு தடம் என்பது வில்லவன் கோதை விட்ட உட்டான்ஸ். இலக்கியமென்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்புக்குத்தான்.
அண்ணாதுரை, கருநாநிதி, பாரதிதாசன் எழுதியவை இலக்கியமாகா ஏனெனில் அவர்கள் திராவிட இயக்கக்கொளகையை பரப்புரை செய்தார்கள் கலையென்ற போர்வைபோட்டுக்கொண்டு என்ற விமர்சனத்தை வைத்தவர் ஜயமோஹன். அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் பாரதிதாசன இல்லை. தன் சொந்தக்கருத்துக்களுக்கு ‘வரலாறு’ என்று பெயர். பாரதிதாசனுக்குக் கவிதை எழுதத்தெரியாது. அல்லது அக்கவிதையில் இலக்கிய இரசனை துளிகூட கிடையாது :-)
இன்று இதே விமர்சனம் இவர் இப்படைப்பின் மீதும் வைக்கபபட்டால் சரியே. ஒருவர் தன் மதம், அல்லது கட்சி அல்லது மற்ற கொள்கைகளைப் பிரச்சாரம் பண்ணுவதை எவரும் ஆட்சேபனை செய்யமாட்டார்கள். அதை நாவல், கதை, கவிதை என தமிழ் இலக்கியம் என்று செய்ய வேண்டும்? கட்டுரைகளாக எழுதியிருக்கலாமே? சிறந்த கட்டுரைகள் இலக்கியவகைகளுள் ஒன்றாக வரும்தானெனிலும், இப்படிப்பட்ட பிரச்சார கட்டுரைகள் தனியே pamphlets வகையில் வரும். இலக்கியமாகாது.
வெள்ளையானையில் சொல்லப்பட்டவைகளை கட்டுரைகளாக ஜயமோஹன் எழுதியிருக்கலாம்.
வெள்ளையானையை பார்த்த பரமார்த்தகுரு சீடர்கள் !
வெள்ளையானை நூல் சார்ந்த என்னுடைய அறிமுக கட்டுரை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
வழக்கமாக நம்மைச்சுற்றி நிகழுகின்ற நிகழ்வுகளில் எப்போதாவது என் கருத்துகளை என் வலைதளத்தில் ( verhal.blogspot.in ) பதிவு செய்வதுண்டு.
அவற்றில் பெரும்பாலும் புத்தகங்களை திறனாய்வு செய்வது மட்டுமே என் நோக்கமாக இருந்ததில்லை. தற்செயலாக படிக்க நேர்ந்த புத்தகங்களை ஒரு சாதாரண வாசகன் என்ற பார்வையில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதுதான் என் வழக்கம்.
இதற்குமுன் ஜெயமோகன் எழுதிய எந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை. என் எழுத்திலும் வாசிப்பிலும் இடையில் ஏற்பட்டுவிட்ட மிகப்பெரிய இடைவெளியே இதற்கான காரணம். அதனால் அவரையோ இன்றைய வேறு சில எழுத்தாளர்களையோ பிரபலமான எழுத்தாளர் என்று கொண்டாடிய தருணங்கள் எனக்கு ஏற்பட்டதில்லை.
அதே சமயம் அவரது ஒரு சில கட்டுரைகளை படித்திருக்கிறேன். அவருடைய பெரும்பாலான கருத்துகளுக்கு காட்டமாக என் வலை தளத்தில் பதிலளித்தவன். என் வலைதளத்தை வாசித்தவர்களுக்கு இது புரியும். சமீபத்தில் நான் எழுதிய பட்டி – விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் என்ற தமிழ் எழுத்துறு சார்ந்த கட்டுரை திண்ணையில் மறுக்கப்பட்டு வல்லமை இணயதளத்தில் பிரசுரிக்கப்பட்டது.
இந்த வெள்ளையானையைப் பொருத்தவரை அவர் பேசுகிற கருத்துக்கள் அத்தனையும் எனக்கு உடன்பாடானவைதான். ஒருசில இடங்களில் பிராமணர்களைப்பற்றி அவர் பேசுவது இங்கே சிலருக்கு ஆத்திரமூட்டியிருக்கக்கூடும். இருந்தபோதும் இது தவிற்க இயலாதது என்றே நினைக்கிறேன்.
அவர் எழுத்தில் மொழியை அவர் கையாண்டிருக்கும் நேர்த்தி என்னை ஈர்த்தது உண்மை. இதுவரை மதராசப்பட்டின வரலாற்றில் ஒடுக்கப்பட்ட தலித்துகளை முன்னிலைப்படுத்தி எந்த புதினமும் வந்ததில்லை. அதை அவர் செய்திருக்கிறார்.
ஜடாயு எழுதியது உண்மையென்றாலும் அதெல்லாம் தலித்துகள் சந்தித்த கொடுமைகளுக்கு முன்னால் விதிவிலக்கு என்றே கருதுகிறேன்.மேலும் ஒரு எழுத்தாளனின் எழுத்தைப்பார்த்து பேசுவதே நேர்மை என்று கருதுகிறவன் நான்.அவனது பின் புலத்தை ஆய்ந்தறிந்து கொண்டாடுவது என் வழக்கமில்லை. சத்திய சோதனையை எழுதிய மகாத்மாவாக எல்லாராலும் இருக்க முடியாது.
கண்ணதாசனை அறிந்தவர்கள் அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதத்தை தொடமுடியுமா.தலித்துகளுக்காக வாதாடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் எல்லாம் தலித்துகள் என்று சுட்டிக்காட்டுவது என்ன பண்பு.தலித் சமூகத்தின் எழுத்தை ஒரு தலித்துதான் எழுத வேண்டுமென்றால் இஸ்லாத்தையும் ஏசுவையும் கண்ணதாசன் எழுதியிருக்க முடியாது.
நண்பர் கணபதிராமனும் வேறு சிலரும் தங்கள் வருமானத்தில் இஸ்லாத்தைப்போல மூன்றில் ஒரு பங்கோ நாலில் ஒரு பங்கோ தலித்துகளுக்காக செலவழிப்பார்கள் என்று கருதுகிறேன். மகிழ்ச்சி.
வெள்ளையானை நூல் வெளிவந்து பலநாட்களாகிறது. எனக்கு கிடைத்த வாய்ப்பை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டேனே தவிற வேறொன்றுமில்லை.என் அறிமுகத்தை முழுதும் புறந்தள்ளி வாசகர் வசதிக்காக தரப்பட்ட விலை விபரங்களை ஒட்டியே பின்னூட்டங்கள் விளைந்தது வருந்தத்தக்கதே.
பகவத் கீதையையும் பைபிளையும் நண்பர் கணபதிராமன் பதிப்பித்தால்கூட மலிவு விலையில் அவர் கொடுத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.
இன்றைய புத்தக விற்பனை எவரும் அறியாத்தல்ல. நம்முடைய குடும்பங்களிலேயே எத்தனை பேர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். மாதத்துக்கு எவ்ளவு ரூபாய் புத்தகங்களுக்காக செலவிடுகிறோம் புதிதாக கட்டப்படும் வீடுகளில் புத்தகங்களுக்கான இடம் எத்தனை வீடுகளில் ஒதுக்கப்படுகிறது.
இந்த லட்சணத்தில் எந்த எழுத்தாளன் புத்தகம் எழுதி கோட்டை கட்டப்போகிறான்.
ஒரு புத்தகத்தின் விலை அதன் உள்ளடக்கத்தைவிட அதன் புறசெலவுகளே நிர்ணயிக்கிறது.அதை மனதிற் கொள்ளாமல் பரதேசியைப்பற்றி படம் எடுத்தால் பத்து பைசாவுக்கு காட்டவேண்டியதுதானே என்று வாதாடுவது என்ன ஞாயம்.
வில்லவன் கோதை
//வெள்ளையானையை பார்த்த பரமார்த்தகுரு சீடர்கள் !//
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே”
(திருமந்திரம் 1658)
// சுவரொட்டிகளில் இசுலாமிய உடைகளோடுதான் காணப்பட்டார். //
நல்லவேளை இவர் மகளிர் மாநாட்டுக்கு போகவில்லை.
//தமிழ் ஹிந்து தளத்தில் இரண்டு வ்யாசங்கள் ஸ்ரீமான் ஜடாயு மற்றும் ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.//
க்ருஷ்ணகுமாரின் அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்,
“கிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ், இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலாளரான கே.எம்.சரீப் ஆகியோர் இந்த நாவல் குறித்த பரப்புரையில் இணைகிறார்கள். தாது வருட பஞ்ச காலத்தின் தலித்துகளல்லாத இந்துக்களை அற உணர்வற்றவர்களாக இந்த நாவல் காட்டுவது இந்தக் கூட்டணிக்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழலில் நாவல் உருவாக்கும் மேற்கூறிய வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.”
“ இந்துத்துவ வெறுப்பைக் கக்கும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையில்…… வெள்ளையானைக்கு எழுதப்பட்ட கடுமையான எதிர்விமர்சனம் அது”. என்கிறார்,திரு. ஜெயமோகன்.
http://www.jeyamohan.in/?p=43047
திரு.ஜெயமோகன் அவர்களே அரவிந்தன் நீலகண்டனை இந்துத்துவ வெறுப்பை கக்குபவர் என்று விமர்சிக்கும்போது இவரை அறிமுகப்படுத்தும் க்ருஷ்ணகுமாரும் இந்துத்துவ வெறுப்பை கக்குபவர் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையா? முகமூடி இந்துத்துவா நுணல் தன் வாயால் கெட்டு விட்டது.
வில்லவன் கோதையின் பின்னூட்டத்திற்குப் பதில்:
//வெள்ளையானை நூல் வெளிவந்து பலநாட்களாகிறது. எனக்கு கிடைத்த வாய்ப்பை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டேனே தவிற வேறொன்றுமில்லை.என் அறிமுகத்தை முழுதும் புறந்தள்ளி வாசகர் வசதிக்காக தரப்பட்ட விலை விபரங்களை ஒட்டியே பின்னூட்டங்கள் விளைந்தது வருந்தத்தக்கதே.//
பல நாட்கள் மட்டுமே! இங்கு பின்னூட்டமிட்டோரில் ஒருவர் கூட இந்த நாவலைப் படிக்கவில்லை. எப்படி முடியும்? இஃதென்ன சினிமாவா? முதல் நாள் போய் பார்த்துவிட? நூலறிமுகத்தைப்பற்றி என்ன பேசமுடியும்? அதைப்படித்துவிட்டு நீங்கள் எழுதுகிறீர்கள்? மற்றவர்கள் படிக்கவில்லை. உங்களுக்கு தேங்க்ஸ் மட்டும்தானே சொல்லமுடியும்?
நூலறிமுகத்தில் உள்ளோக்கமிருந்தாலோ, அல்லது கருத்து அல்லது வரலாற்றுப்பிழைகள் இருந்தால் மடடுமேதானே சுட்டிக்காட்ட முடியும்? நீங்கள் என்ன பாரதியார் கவிதைகளுக்கா விமர்சனமோ அறிமுகமோ போட்டீர்கள்? அதாவது எல்லோரும் படித்த நூலுக்கு. எனவே என் அறிமுகத்தை உதாசீனம் பண்ணிவிட்டார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
விமர்சனம் கொஞ்சம் மாதங்கள் தள்ளியே போடப்பட்டிருக்க வேண்டும். எழுத்தாளர்கூட இப்போதுதான் அறிமுகப்படுத்துகிறார். அதாவது நாளை ஒரு கூட்டத்தில். நீங்கள் முந்திவிட்டீர்கள். இதனால் என்ன இலாபம்? எழுத்தாளருக்கும் பதிப்பகத்தாருக்கும் விளம்பரம் கொடுப்பதைத் தவிர.
//பகவத் கீதையையும் பைபிளையும் நண்பர் கணபதிராமன் பதிப்பித்தால்கூட மலிவு விலையில் அவர் கொடுத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.//
இரண்டுமே இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. பள்ளிகளி, கிருத்துவர்கள். கோயில்களில் இந்துத்வாவினர் திருமோஹீர் கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசியன்று சென்றால், பகவத் கீதை இலவச்மாகக் கொடுத்தார்கள். போன மாதம் கந்த சஸ்டி திருச்செந்தூருக்குச் சென்ற போது, பலர் கொடுத்தார்கள். கந்தசஷ்டி கவசம் நூலை ராம்கோ சிமென்ட் இலவசமாகக்கொடுத்தது.
பகவத் கீதை, விவிலியம் – இவைகளை அச்சடித்து வெளியிடுவது வியாபார நோக்கமன்று. அவர்கள் ஒரு சேவையாகத்தான் கருதி மிக மலிவாக விற்கிறார்கள். ஒப்பீடு செய்யும் போது கருத்துப்பிழை வராமல் பார்க்கோணும் சுவாமி!
//ஒருசில இடங்களில் பிராமணர்களைப்பற்றி அவர் பேசுவது இங்கே சிலருக்கு ஆத்திரமூட்டியிருக்கக்கூடும். இருந்தபோதும் இது தவிற்க இயலாதது என்றே நினைக்கிறேன்.//
இங்கெழுதும் இந்துத்வாவினர் கூட இந்த நாவலைப்படிக்கவில்லை. அப்படியிருக்கும்போது பிராமணர்களைப்பற்றி ஜயமோஹன் என்ன எழுதியிருக்கிறார் என்று எப்படித் தெரியும்?. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்: ஜயமோஹன் பிராமணர்களைப்பற்றி அங்காடித்தெருவில் காட்டியதற்கும் இன்னும் சில இடங்களில் எழுதியதற்கும் அஜ்ஜாதியினர் சிலர்கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். மற்றவர்கள் மனம் புழுங்கியிருக்கிறார்கள். அவர் எழுத்துக்களை கூர்ந்து படித்திருந்தால், உங்களுக்கு ஒன்று புரியும்: அவர் பிராமணர்களை பெரிதும் போற்றவில்லை. மாறாக ஒரு காட்டம் இருப்பதைப் பார்க்கலாம். பிராமணன் என்பவன் மனிதாபிமானமே அற்றவன் என்று அங்காடித்தெருவில் காட்டியது ஜயமோஹனின் சிற்றறிவு. மற்ற ஜாதியைப்பற்றி இப்படிக்காட்டியிருந்தால் தியேட்டர்கள் சூறையாடப்பட்டிருக்கும். இவர் வெளியில் தலைகாட்டியிருக்க முடியாது.
அன்பார்ந்த கணபதி ராமன் தாங்கட்கு ,
ஒருவரை முதன்முதலாக பார்க்கும்போதுதான் அறிமுகம் தேவைப்படுமே தவிற ஆறுமாதம் கழித்து பேசிப்பழகி அல்ல. நூல்களுக்கும் திரைப்படங்களுக்கும்கூட இவை பொருந்தும். நல்லதோ கெட்டதோ முதலில் நுகர்பவர் அவர் ரசனையை பேசுகிறார். பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் அவ்வப்போது இப்படித்தான் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. காலங்கடந்தால் எல்லாமே பழசுதான். அப்பறம் அறிமுகம் எதற்கு.
பிறகு திறனாய்வுதான் !
அதை செய்வதற்கு ஜம்பவான்கள்தாம் தேவைப்படும். க ந சு ,திகசி போன்றவர்கள் அதற்கு உதாரணம்.
வெள்ளையானை நூல்வந்து பலமாதங்களுக்குப்பிறகே வித்தியாசமாக வெளியீடு நடத்தினார்கள். காவல்கோட்டம் விழா ஒருவேளை அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடும் திண்ணையிலேயே அதற்கான அழைப்பிதழை பார்த்திருக்கக்கூடும். அதற்கு முன்னரே பெரும்பாலான விமர்சனங்கள் பத்திரக்கைகளிலும் இணையத்திலும் வந்து விட்டன. தமிழ் இந்து நாளிதழில் கூட சென்னைவிழாவுக்கு முன்னதாகவே நீங்கள் சொன்ன எழுத்தாளர் இமயம் எழுதிவிட்டார். இணையத்தில் பல்வேறுதளங்கள் அதை முன்னதாகவே செய்துவிட்டன.
உங்களுக்கும் எனக்கும் இப்போதுதான் விடிந்திருக்கிறது !
நல்ல படைப்புகள் நாலுபேர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் படைப்பாளிகள் பயனுறுவதிலும் பாவம் ஒன்றுமில்லை.
கீதையையும் பைபிளையும் அதை பரப்புரை செய்பவர்கள் இலவசமாக கொடுக்கலாம்.தொண்டாக தோன்றுகிறவர்களுக்கு அது ஒரு சந்தோஷம். தொழிலாக கொண்ட ஒரு தனி மனிதரை செய்யச்சொல்வது என்ன ஞாயம்.? அதுதான் என் வினா.
படைப்பாளியையோ பதிப்பாளரையோ நான் முன்பே அறிந்திருக்கவில்லை.பிராமணர்கள் குறித்த விமர்சனம் இணையத்தில் பேசப்படுவதால் நான் அப்படி எழுதினேன் மற்றபடி வேறில்லை.
வில்லவன் கோதை
பதில் தொடர்கிறது:
//இன்றைய புத்தக விற்பனை எவரும் அறியாத்தல்ல. நம்முடைய குடும்பங்களிலேயே எத்தனை பேர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். மாதத்துக்கு எவ்ளவு ரூபாய் புத்தகங்களுக்காக செலவிடுகிறோம் புதிதாக கட்டப்படும் வீடுகளில் புத்தகங்களுக்கான இடம் எத்தனை வீடுகளில் ஒதுக்கப்படுகிறது.
இந்த லட்சணத்தில் எந்த எழுத்தாளன் புத்தகம் எழுதி கோட்டை கட்டப்போகிறான்.//
எழுத்தாளர்களைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லை. பராரியான வாழ்க்கை நடாத்தி மடிந்தவர்கள் அக்காலம். பாரதியார். ஒரு எ.கா. இக்கால எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட சினிமாவுக்கு வருபவர்களைப்போல. முதலில் பெரும்கலைத்தாஹத்தோடு வருவார்கள். பின்னர் பணங்காட்டில் மசாலாப்படங்களோடு வீழ்ந்துகிடப்பார்கள்.
பதிப்பகத்தாரும் எழுத்தாளரும் சேரும்போது அங்கு இருப்பது வியாபார நோக்கம்.
பணக்கார எழுத்தாளர்கள்; ஏழை எழுத்தாள்ர்கள் என்று எப்போதுமுண்டு. நூல்கள் விற்பதற்காகத்தான் எழுதுகிறார்கள். விற்பனை என்பது நோக்கமானால், அங்கு இலக்கியம் என்பது போர்வை மட்டுமே. Sale of books is the concern of publishers only. It should never be in the mind of a writer. ஜனரஞ்சக புதினங்களை எழுதுவோர் விதிவிலக்கு.
பொரும்பாலான பதிப்பகங்கள் அரசின் நூலகங்களை நம்பியே நூல்களை பதிப்பிக்கின்றன.வைரமுத்து போன்ற ஒருசில பிரபலங்களின் புத்கங்கள்தாம் பல பதிப்புகள் விற்பனையாகின்றன. வருடாவருடம் புத்தக சந்தையில் திரளுகிற மக்கள் புத்தகங்களை புரட்டிப்புரட்டி சோலாப்பூரி சாப்பிடுவதுதான் நிகழ்கிறது.
வில்லவன் கோதை
//ஒரு புத்தகத்தின் விலை அதன் உள்ளடக்கத்தைவிட அதன் புறசெலவுகளே நிர்ணயிக்கிறது.அதை மனதிற் கொள்ளாமல் பரதேசியைப்பற்றி படம் எடுத்தால் பத்து பைசாவுக்கு காட்டவேண்டியதுதானே என்று வாதாடுவது என்ன ஞாயம்.//
குறும்படங்கள் இலவசமாகத்தான் காட்டப்படுகின்றன. திரைப்படங்கள் செல்ல 100 உருபா நுழைவுச்சீட்டு. பரதேசி குறும்படமன்று. வியாபாரம் பண்ண எடுக்கப்பட்டது.
குறும்படங்களில் நோக்கமும் திரைப்படங்களில் நோக்கமும் வெவ்வேறு. அதே போல, இலக்கியம் என்று வரும்போது, இலக்கியம் ப்ராப்பர்; ஜனரஞ்சக இலக்கியம் இருவகை.
பத்திரிக்கைகளிலும் உண்டு. சிறு இலக்கிய பத்திரிக்கை. ,மலிவு. குமுதம், ஆ.வி போன்ற பத்திரிக்கைகள் 24 உருபா
ஒரு நாவலாசிரியர் பிரபலம் என்றால் மட்டுமே விலை அதிகமாக வைக்கிறார்கள். அஜய், விஜய், கமல், ரஜனி, படங்கள் விநியோகஸ்தர்கள் பெரும் விலைகொடுத்துவாங்குவார்கள். சிறுநடிகருக்குத் தியேட்டரே கிடைக்காது.
இப்போது நீங்கள் மேலே எழுதியதைப் படியுங்கள். எப்படி அதே பக்கங்கள் உடைய இன்னொரு நாவல். ஆனால் பெயர் அறியப்படா ஆசிரியர் – 400 உருபா வைப்பார்களா பதிப்பகத்தார்? 400 உருபா வைத்தால் விற்கும் எனத்தெரிந்தே வைத்திருக்கிறார்கள். எழுததாளரும் பதிப்பகத்தாரும் இணந்து மார்க்கெட்டிங்கில் இறங்கிவிட்டார்கள். நாவலை காரைக்குடியில் அறிமுகம். உங்களைப்போன்றவர்கள் இணையதளங்களில் அறிமுகம். எழுத்தாளர் மார்க்கெட்டிங்கில் இறஙக் வேண்டிய அவசியமே இல்லை. எழுதுவதே அவர் செயல். மார்க்கெட்டிங் பண்ணக்காரணம்?
விமர்சனம் எவருமறியாத ஒரு எழுத்தாளரின் படைப்பை அறிமுகப்படுத்தும்போது மட்டுமே சிறப்பாகும். அப்படித்தேடிகண்டுபிடித்து எழுதுங்கள். உண்மையில் அதுதான் தமிழ் இலக்கியச்சேவை. உங்களைப்போன்றோர் அவர்களை அறிமுகப்படுத்தாவிட்டால், அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
திண்ணைப்பேச்சு வீரர்களிடம் . . .
இன்றைக்கு குறும்படங்களின் நோக்கமே கடை விரிப்பதற்கான முன் முயற்சிதான்.
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தனது கம்பரின் அம்புறாதூணி நூலைப்பற்றி பேசும்போது புத்தகத்தின் விற்பனை என் மூன்றுமாத உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் என்று கருதுவேன் என்கிறார். புத்தகத்தின் விலை எழுத்தாளனின் உழைப்பையும் உள்ளடக்கியது என்றே கருதுகிறேன். வெரும் பக்கங்கள் மட்டும் விலையை நிர்ணயிக்கமுடியாது.
புதிதாக எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் உள்ளடக்கத்தை விட்டு திண்ணையில் பேசப்படும் பின்னூட்டங்கள் திசை மாறி போவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.நீங்கள் இப்படி் பின்னூட்ம் இடுவதைவிட சிறப்புக்கட்டுரைகள் எழுதலாம்.வாய்ப்புக்கள் நிரம்ப இருக்கிறது.தங்கள் விரிந்த பார்வைக்கு நன்றி
வில்லவன் கோதை
எல்லாரும் கட்டுரை எழுதி அது ஒரு வேலை இலக்கிய அந்தஸ்து வந்தால் , இந்த உலகம் உங்களைத்தான் பழிக்கும். (சும்மா இருந்தவனை சொரிந்து விட்டாயா என்று). அந்த பழி உங்களுக்கு வரக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான் நாங்கள் இங்கு எழுதுவது. எங்களை இப்பொழுதாவது பாராட்டுங்கள். பாராட்டுவதர்க்கும் ஒரு மனம் வேண்டும்.
//நண்பர் கணபதிராமனும் வேறு சிலரும் தங்கள் வருமானத்தில் இஸ்லாத்தைப்போல மூன்றில் ஒரு பங்கோ நாலில் ஒரு பங்கோ தலித்துகளுக்காக செலவழிப்பார்கள் என்று கருதுகிறேன். மகிழ்ச்சி.//
என் வாழ்க்கையே அவர்களிடம்தான் கழிகிறது.
உங்கள் மேலான பணிக்கு தலை வணங்குகிறேன் !
வில்லவன் கோதை
//தலித் சமூகத்தின் எழுத்தை ஒரு தலித்துதான் எழுத வேண்டுமென்றால் இஸ்லாத்தையும் ஏசுவையும் கண்ணதாசன் எழுதியிருக்க முடியாது.//
என் கருத்தைச் சரியாக கிரஹிக்கவில்லை. தலித்துக்களைப்பற்றி தலித்துகள்தான் எழுதவேண்டுமென்று சொல்லவில்லை. இருசாராரும் எழுதலாம். நான் சொன்னது: தலித்துகளைப்பற்றி தலித்துகளே எழுதும்போது அதில் நல்ல உயிரோட்டமிருக்கும்.
இதே போல பெண்களைப்பற்றி பெண் எழுத்தாளரின் படைப்பும் ஆண் எழுத்தாளர் படைப்புக்கும் வேறுபாடிருக்கும். நேரடி அனுபவம். பார்த்த அனுபவம். Direct suffering. Vicarious suffering.
Vicarious sufferings ஐ நேரடி அனுபத்தைப்போல எழுதுவது மாபெரும் திறமை. அப்படி பெண்ணைப்பற்றி எழுதிய ஆங்கில எழுத்தாளர்கள் உண்டு. டிக்கன்ஸ். தமிழில் வில்லவன் கோதை எடுத்துக்காட்டலாம். என் தமிழறிவு குறுகியது.
தலித்துகளிடையே கல்வி அறிய சில பத்தாண்டுகளாகத்தான் வந்திருக்கிறது. அதற்கு முன்னர் சுப்பையா ஐ.ஏ.எஸ் மட்டுமே எழுதினார். ஆனால் அவர் பொது நாவலக்ளதான் எழுதினார். இப்போதுதான் தலித்திய எழுததாளர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் உள்ளிருந்து கொண்டே எழுதுகிறார்கள். அப்படியே மற்றவரும் எழதவேண்டுமானால், உள்ளிருக்க வேண்டும்.
ஒரு எ.கா: ராஜம் கிருஸ்ணன் ஒரு பார்ப்பனர். கணேசன் ஒரு தலித்து. இருவரும் தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப்பற்றி நாவல் எழுதியிருக்கிறார்கள்.
கண்ணதாசன் இயேசுவைப்பற்றி எழுதலாம். ஆனால் அவருக்கு இயேசு காவியம் எழுத ஒரு பெருந்தோகை சர்ச் வழங்கியது. மஹமது நபிகளைப் ற்றி எழ்தலாம். ஆனால் உமறுப்புலவரின் உருக்கம் இருக்காது. கையறுந்த படலத்தைப் படித்தால் ஒரு இசுலாமியரால் மட்டுமே அதை எழத முடியும் எனத்தெரியவரும்.
அனைத்து உணர்வுகளும் கண்ணதாசன் எழுதினால் செயற்கை. அவை வெறும் இலக்கியம். பக்தி இலக்கியமாகாது. எந்த்வொரு கிருத்துவரும் எந்தவொரு இசுலாமியரும் கண்ணதாசன் எழுதியதில் பக்தி உணர்ந்தேன் என்று சொல்லவில்லை. பக்தியும், பணமும் பரம எதிரிகள் கண்ணதாசன் பணம்; உமறுப்புலவர் பக்தி. உமறுப்புலவர் பிச்சைக்காக ஊரூராக அலைந்தார். கண்ணதாசன் அமெரிக்கவில் மரணித்தார். அவர் உடல் விமானத்தில் சென்னைக்கொண்டுவரப்பட்டது. அண்ணாசாலையில் வெங்கலத்தில் சிலை. உமறுப்புலவரின் வீட்டையும் அவர் கல்லறையையும் பற்றி எட்டயபுரத்தில் கேட்ட போது பலர் தெரியாதென்றார்கள். இறுதியில் நானே கண்டுபிடித்தேன்.
திண்ணையில் பேரா பச்சை நிலா எழுதிய கட்டுரைக்கு என் பின்னூட்டமிங்கே: http://inthiya.com/?p=20014 இது என் கருத்தை விரிவாக விளக்கும்.
ஏன் திருமூலரின் இந்தப்பாடலையும்
இப்படி பாடப்படலாமே?
மதத்தை மறைத்தது இந்த வெள்ளையானை.
மதத்தில் மறைந்தது இந்த வெள்ளையானை.
வெள்ளைய ஆட்சி மீது எல்லோருக்கும் சீற்றம் உண்டு.அதைவிட கொடுமையான மனு சாஸ்திரத்தை வைத்து இந்திய மக்களையே குப்பைக்காட்டில் வீசிவிட்ட இந்துத்துவா மீதும் எல்லோருக்கும் அதை விட சீற்றம் உண்டு.ராமாயணத்தை ஒரு வேடன் எழுதினான்.கீதையை ஒரு யாதவன் எழுதினான்.மகாபாரதத்தை எழுதியவனும் வேதங்களை தொகுத்தவனும் ஒரு செம்படவ (பரதவ)இனத்தவன்.
அப்படி இருந்தும் இந்த இனங்கள் இன்னும் நசுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.இந்துத்வா என்பது ஒரு இன்விசிபிள் மார்ஃபியா போல் இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது.அதன் ஒரு உள்சக்தியாய் தன் பேனாவின் திறமையால் புண்ணுக்கு புனுகு தடவும் வேலையைத்தான் தலித்துகளுக்கு செய்திருக்கிறார்.தேர்தல் கண்ணோட்ட நாவல் தான் இது.
கிரேக்கத்து ட்ராயின் மரக்குதிரை போல் இந்த பனியானைக்குள் படுத்திருப்பது
வெள்ளையனை எதிர்த்த சீற்றம் அல்ல.வெள்ளைக்குருமாரின் விவிலிய வாடைக்கு டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருளே இந்த வெள்ளையானைப்புகை
மண்டலம்.மத மூட்டமே இந்த “பஞ்ச” தந்திரக்காட்சிகளில் படம் காட்டுகிறது.
இலக்கிய பாடம் நடத்தும்போது ஹிட்லரின் “மெய்ன் கேம்ப்”எப்படி இலக்கியத்தரம் வாய்ந்தது எனச் சொல்வார்களோ அது போல் இந்த வெள்ளையானையும் இலக்கிய வகுப்புகளுக்கு சிபாரிசு செய்யப்படலாம்.
அரிஜனங்களை ஆரிய மைந்தர்களாக கொஞ்சம் அரிதாரம் பூசியிருக்கிறார்.
சிலுவையின் பக்கம் சாய்ந்தால் சாயும் செம்மறி ஆடுகள் போல் போகும் மந்தையை கட்டுப்படுத்த சாணக்கிய எழுத்துகளில் கருஞ்சிறுத்தைகளுக்கு இந்துப்புல்லை தீனியாக்க முனைந்த நாவல் இது.கேமவுஃப்ளேஜ்டு “ஆனந்த மடம்” போன்றது இது. இந்துத்துவாவின் இந்த “ஐராவதம்” நீட்டும் தும்பிக்கையில் நம்பிக்கை வைப்பவர்கள் துவம்சம் ஆகி விடக்கூடாது என்பதே
நம் கவலை.
========================================ருத்ரா
நாங்க ஏதோ பின்னூட்டம் போட்டு விலையாடூரோம் இங்கு. பின்நூட்ட இலக்கியம் என்று ஒன்று இதுவரை இல்லை அய்யா . நீங்கள் வழக்ககம் போல் கவிதை எழுதுங்கள்
வில்லவன் கோதை
//ஒருசில இடங்களில் பிராமணர்களைப்பற்றி அவர் பேசுவது இங்கே சிலருக்கு ஆத்திரமூட்டியிருக்கக்கூடும். இருந்தபோதும் இது தவிற்க இயலாதது என்றே நினைக்கிறேன்.
//
ஜெயமோகன் விசயம் எல்லாம் இங்கே எந்த பிராமீன் கண்டுகொள்ளுகின்றான் என்பது புரியாத புதிர். விஷ்ணுபுரத்தில் சுஜாதா என்னை கேட்டார் என்று அவர் கொளுத்தியது பற்ரவில்லை. மற்ரபடி கருணாநிதி விசயம், தமிழ் எழுத்து விசயம் நன்றாக கொழுந்து விட்டு எறிந்த விசயங்கள். இது எல்லாம் தவிர இத தளத்தில் தளையசிங்க விசயம் அவரை ஓட ஓட விரட்டிய விசயம். சர்ச்சை வைத்து சரக்கை விற்பது அவருக்கு புதிது இல்லை என்பதை சொல்லவே இந்த பின்னூட்டம்.
\ திரு.ஜெயமோகன் அவர்களே அரவிந்தன் நீலகண்டனை இந்துத்துவ வெறுப்பை கக்குபவர் என்று விமர்சிக்கும்போது இவரை அறிமுகப்படுத்தும் க்ருஷ்ணகுமாரும் இந்துத்துவ வெறுப்பை கக்குபவர் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையா? முகமூடி இந்துத்துவா நுணல் தன் வாயால் கெட்டு விட்டது. \
சுவிசேஷ சேவகரான அன்பர் ஷாலி க்றைஸ்தவத்தில் க்றைஸ்தவர்கள் போதிக்கும் அன்பு என்ற விஷயத்தை எப்போது உள்வாங்க ஆரம்பிப்பார்?
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
என்பது அன்பர் அவர்களுக்குத் தெரியாததோ?
ஸ்ரீமான் ஜெயபாரதனை நீங்கள் பேராசியரே பெருந்தகையே என ஸ்துதி செய்வதும் அவர் உங்களுக்குப் பட்டமளிப்பதும் பரஸ்பர ரசிகர் சங்கம் அருமை.
அறுபதுகளில் நாங்கள் புரட்சித்தலைவர் எம்ஜியாரையும் அவரது ரசிகர்களையும் பார்த்திருக்கிறோம்.
ஸ்ரீமான் ஜெயமோகனை நான் மதிப்பது என்றால் அன்பர் ஷாலி அவர்கள் ஸ்ரீ ஜெயபாரதனுக்கு பாலபிஷேகம் செய்வது போல் இல்லை. ஜெயமோகன் சொல்ல வரும் விஷயங்களில் சரித்ரத்திற்கு ஒத்து வரும் விஷயங்களை நான் முற்றிலும் ஏற்பேன். சரித்ரத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஸ்ரீமான் ஜெயமோகன் முழுமையாக தன் புனைவில் கொணரவில்லை என்று கருத்து தெரிந்தால் அதை நிச்சயம் அவதானிப்பேன்.
எழுத்தாளரான ஜெயமோகன் இன்னது தான் எழுத வேண்டும் என்பது அவர் ஸ்வதந்த்ரம் சார்ந்த உரிமை. அறிவு பூர்வமாக அவர் படைப்பை அணுகுகையில் நிறைகள் மட்டிலும் தென்பட வேண்டும் என எதிர்பார்க்க இயலாது. ரசிகர் கூட்டம் வாசித்தால் மட்டிலும் நிறைகளை மட்டும் போற்றி துதி பாடி நிறைவு பெறுவர்.
ஸ்ரீ அ.நீ அவர்கள் எழுதியது சரித்ர தரவுகள். எந்தெந்த ஆவணங்களில் இருந்து அவர் தன் தரவுகளைக் கட்டமைத்துள்ளார் என்பதற்கு முறையான பட்டியல் தந்துள்ளார்.
அறிவு பூர்வமான உரையாடலில் அன்பர் ஷாலி அவர்களுக்கு நாட்டம் இருக்குமானால் ஸ்ரீ அ.நீ அவர்களது வரலாற்றுத் தரவுகளை பரிசீலனை செய்ய வேண்டும். அவரது தரவுகள் தவறு என்றால் துணிவுடன் சுட்டிக்காட்ட வேண்டும். மாற்றுக்கருத்துகளுக்கு மாற்றுத் தரவுகள் இருந்தால் மாற்றுத் தரவுகளை முன்வைக்க வேண்டும்.
ஹிந்துத்வம் – வெறுப்பு – கக்குதல் – இத்யாதிகள் நீங்கள் அ.நீ அவர்கள் பால் கொண்ட த்வேஷத்தை வெளிப்படுத்துகிறது என்று மட்டிலும் சொல்லலாம். ஜெயமோகன் அவர்கள் ஸ்ரீ அ.நீ அவர்களது மித்ரர் என அறிவேன். ஆனால் ஸ்ரீ அ.நீ அவர்களது தரவுகளை வெறுப்புக் கக்கல் என்பதனை தன் படைப்புடைய எதிர்மறை விமர்சனத்தை உக்ரமாகக் கையாள்வது என்று மட்டிலும் அவதானிப்பேன். அது உணர்வு பூர்வமானது. அறிவு பூர்வமானது அல்ல.
வெற்று உச்சாடனங்கள் கோஷங்கள் இவற்றால் காதுகளை செவிடாக்கலாம். புத்தியைக் கூர்மையாக்க முடியாது.
இதற்குப் பதிலாக தாங்கள் இன்னமும் அதிக வெறுப்பைக் கக்க விழைந்தாலும் என் தரப்பிலிருந்து ஜவாபாக அன்பு மட்டிலும் பகிரப்படும்.
உங்கள் வசம் இருப்பதை நீங்கள் பகிருங்கள். என் வசம் இருப்பதை நான் பகிருகிறேன்.
அண்ணே! க்ருஷ்ணாஜி எதற்கும் அசர மாட்டார்.எல்லாத்துக்கும் அவரிடம் ரெடிமேடு பதில் உண்டு.இரும்பு உலக்கையை….மன்னிக்கணும் இரும்புத்தூனை முழுங்கி விட்டு சுக்குத்தண்ணீ அல்ல வெறும் சுடு தண்ணியில் ஜீரணிப்பவர்.
கிருஷ்ண விளையாட்டில் இதெல்லாம் ஜுஜுபி.
ஜெயமோஹன் அவர்கள் இருபுறமும் கூர்மையாக உள்ள கத்தி.ஒரு பக்கம் இந்துத்துவாவின் வெறி கிளப்பும் கத்தி.இதை “நெறி பரப்பும்”முனையாக அவர் பாவனை செய்தாலும் வெறி கிளப்பலே அங்கு எஞ்சியிருக்கும்.
இன்னொரு முனை அழகு மிக்க தமிழ் இலக்கியத்தின் அற்புத முனை.தமிழுக்காக
பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் அவர் குவித்த எத்தனை படைப்புகள் சான்று பகரும்.ஆனால் இந்த முனை மாறி மாறி எழுத்துகளில் பயணிக்கும்போது தான் அந்த “குமரிமுனை”க்காரர் எந்த முனையில் குமுறிக்கொண்டிருக்கிறார் என்பதை ஒரு குழப்ப முனையாக்கி எல்லோரையும் கலங்கடிக்கிறார்.எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஜெயகாந்தனைப்போல் ஒரு “சிந்தனைச் சீற்றம்”உள்ள..தமிழ் இலக்கிய சிற்பி தான்.ஆனால் தமிழ் என்றால் அவர் எழுதுவதே தமிழ் என்று நினைக்கிறார்.இந்த எழுத்துக்கர்வம் கொள்ள அவர் எழுத்துக்களுக்கு உரிமை உண்டு.ஆனால் அவர் நாஞ்சில்
நாட்டுக்கு அப்பால் உள்ள தமிழர் உணர்வுகளை அவர் புரிந்து கொள்ளவே இல்லை.மலையாளம் தான் தமிழ் என்று கூட அவர் ஒரு
சார்புநிலையில் இருக்கிறார்.மலையாளம் நம் சேரத்தமிழ் தான்.அதிலும் நமக்கு பெருமிதமே.ஆனாலும் சிறந்த தமிழ் படைப்பாளிகளை தமிழ்த்தலைவர்களை அவர் ஏதோ குழாயடிச்சண்டை விகிதத்தில் தரக்குறைவாக எழுதுவதே அவரிடம் உள்ள மைனஸ் பாய்ண்ட்.அவர் கொண்டிருக்கும் இந்துத்துவா கருத்துக்கு ஒரு கூட்டம் சேர்த்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்.தமிழை தமிழாலேயே குத்திக்கொல்வது போன்ற ஒரு உருவகமான ஒரு ஊமைப்பகை மூட்டத்தை தன் எழுத்துக்களில் தெளிக்கிறார்.அதையும் மீறி அவர் எழுத்துக்களின் நேர்த்தி எல்லோராலும் போற்றப்படுகிறது.அவரது சில கதைகள் அற்புதமானவை.உதாரணம் “யானை டாக்டர்.”இருப்பினும் அரசியலுக்குள் அரசியலாக தமிழ்த்தலைவர்களை காழ்ப்பு கொண்டு தாக்குவது அவரது தமிழுக்கு கொஞ்சமும் பொறுத்தம் அல்ல.காலச்சுவடு கணையாழி சுந்தரராமசாமி மனுஷ்யபுத்திரன்…இந்த சொற்றொடர்களில் உள்ள இழைக்குள் அவர் காட்டிய உட்பகை வெளிப்பகை எல்லாம் அருவறுக்கத்தக்கது.மோசிகீரனார் முரசுக்கட்டிலில் அமர்ந்தபோதும் சோழஅரசன் அவரது தமிழ் கண்டு அவருக்கு கவரி வீசியதாய் சங்கத்தமிழ் நிகழ்வு ஒன்று உண்டு.கத்தியால் தமிழைக் குத்த வந்தபோதும் அந்த கத்தி “தமிழ்” எனும் மிகச்சிறப்பான கலை வேலைப்பாடு கொண்டு செய்யப்பட்டதால் அதைக்கண்டு விக்கித்து நிற்பது போல் இந்த விமர்சனங்கள் எல்லாம் அவர் மீது ஏற்படும் வியப்புக்குள் அடங்கியது தான்.
சென்ற விமரிசனத்தில் மாஃபியா என்பதை “மார்பியா” என்று குறிப்பிட்டுவிட்டேன்.மார்பியா என்னும் உருமாற்றத்திறன் கொண்டு இந்துத்துவா சுரண்டலும் காலத்திற்கேறற (இணய தள சேனைத்தளவாடங்களுடன்) முறைகளுடன் இளைஞர்களை சீரழிப்பதில் முனைந்து நிற்கிறது.எனவே மார்ஃபியாவும் தவறு இல்லை.
=================================================ருத்ரா
//தமிழுக்காக
பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் அவர் குவித்த எத்தனை படைப்புகள் சான்று பகரும்.//
அய்யா சமூகதிர்க்கு ஒரு விண்ணப்பம். இப்படி தெளிவா சொல்ல எங்களுக்கு இங்கு யாரும் இல்லை அய்யா. அய்யா இங்க வந்து அப்போ அப்போ பல நல்ல கருத்த்துக்களை சொல்லி எங்களை பக்குவப்படுத்த வேண்டும். இது வேண்டுகோள் இல்லை அய்யா. ஒடுக்கப்பட்ட பின்னோட்டத்தின் பாவ குரல் அய்யா.