ஷ்யாமளா கோபு   அவர்கள்  எழுதி திண்ணை ஆகஸ்ட் 29 வெளிவந்த சிறுகதை “ஊமைச்சாமி”  ஆகஸ்ட் 2022 மாத சிறுகதையாகத் தேர்வு

 

வணக்கம்
குவிகம்  என்னும் எங்கள் இலக்கிய அமைப்பு நவம்பர் 2013 முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த வருடம் ஜூலை மாதம்  முதல்  அச்சு மற்றும் ஊடக பருவ இதழ்களில்  வெளியாகும்  ஒரு சிறுகதையினை அம்மாதச் சிறுகதையாகத தேர்வு செய்து பரிசளித்து வருகிறோம்.
சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு என்று பெயரிட்டுள்ளோம்
 
ஆகஸ்ட் மாதம் வெளிவந்த கதைகளில் எழுத்தாளர் ஷ்யாமளா கோபு   அவர்கள்  எழுதி திண்ணை ஆகஸ்ட் 29 வெளிவந்த சிறுகதை “ஊமைச்சாமி”  ஆகஸ்ட் 2022 மாத சிறுகதையாகத் தேர்வு செய்திருக்கிறோம்.
 
மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com)  
 
நன்றி
 
கிருபானந்தன்
அமைப்பாளர்
– குவிகம் இலக்கிய வாசல்
 
குவிகம் இதர செயல்பாடுகள் குறித்து
• நவம்பர் 2013  முதல் மாதம்தோறும் மின்னிதழ்
• ஏப்ரல் 2015 முதல் மாதாந்திர ‘இலக்கியவாசல்’ கூட்டங்கள் (பெருந்தொற்று காலம் தவிர)
• ஜூலை 2017 முதல் குவிகம் பதிப்பகம்
• மார்ச் 2020 முதல் வாரந்தோறும் ஞாயிறன்று இணையம் வழியாக அளவளாவல் நிகழ்வு
• ஏப்ரல் 2021  முதல் மாதந்தோறும் ‘குவிகம் குறும்புதினம்’ அச்சு இதழ். தற்போது இரண்டாம் ஆண்டில்  
• மே 2021 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் முனைவர் வ வே சு அவர்கள் வழங்கும் “மாககவியின் மந்திரச்சொற்கள்’ தொடர் சொற்பொழிவு (இணையம் மூலம்)
. மே 2022  முதல் வாரந்தோறும் குவிகம் ஒலிச்சித்திரம் (PODCAST)     வெளியீடு 
 
 
 
 
 
 
 
 
Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ்இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்