ஹைக்கூ தெறிப்புகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 13 in the series 10 அக்டோபர் 2021

          

             ஜனநேசன்

 

  • குளமும் இல்லை

தவளையும்  இல்லை

தாவி  அலைவுறும்  மனது.

  • நீ வந்ததும் எழுச்சி

மறைவதும்  நெகிழ்ச்சி

சூரியனே …

  • மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்

சுரையும், பூசணியுமாக

குடிசையைக் காத்த நன்றி…!

  • பூத்தது அழகு

உதிர்ந்து கிடப்பதும்  அழகு !

மஞ்சள் கொன்றையே …!

  • மாறின இறக்கைகள்

இரு கைகளாக ….

மாறவில்லை பறக்கும் மனம் !

  • வளைந்து நெளிந்து நின்று

உயிர் வாழும் …..

மரமும் ….!

  • தாயிழந்தவருக்கு தாய் !

காலமறிந்து ஊட்டும்

கனிமரங்கள் !

   *  புழுங்கும்  மீன்களுக்கு

      விசிறிடும்…..

     பனையோலை நிழல் !

   *வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும்

    ஓவியங்களாக ….

     காங்கிரீட் பூங்கா !

   *கலைத்திடாதே காலைக்காற்றே …

    இலைகளில் ,பூக்களில்

    விளைந்த முத்துக்களை ….!

 

             **************    

 

Series Navigationபாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !அவரவர் நியாயங்கள் 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *