“ சில்லறைகள் ”

– தினேசுவரி மலேசியா

 

பழகிப்போன

பழைய முகத்தை

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்

ஒப்பனைச் செய்து கொள்வது

கண்ணாடியை உள்வாங்கி…

 

முகமூடிகள்

தடைவிதிக்கப்பட்டுள்ளன…

ஒப்பனைகளே அக்குறையை

நித்தம் நித்தம் நிவர்த்தி செய்வதால்….

 

இங்கு

கண்களால் பேசி

சிரிப்பால் கொலை செய்து

மௌனத்தால் மட்டுமே கதறமுடிகிறது

சிலரால்….

 

வாடகைக்கு

வீடெடுத்து

வாழ்ந்துப் பார்க்க சிலருக்கு

குறைந்தப்பட்சம்

ஒரு மணி நேரம்…

 

கொப்பளித்து

துப்பிவிடுவதில்

இங்கு யாரும்

சளைத்தவர்கள் அல்ல…

துப்பி கொப்பளிப்பதிலும் கூட…

 

உள்ளங்களைக்

குப்பையில் நிறைத்து

விளக்குகளை சிவப்பாக்கி விடும்

சில்லறைகள் உள்ளவரை

இங்கு வாடகைக்கு வீடுகள்

நிரந்தரமானவையே……….

 

 

 

 

Series Navigationசரதல்பம்வலையில்லை உனக்கு !