ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்

This entry is part 10 of 13 in the series 10 அக்டோபர் 2021

 

Posted on October 9, 2021

 

Aviation: Germany Opens World’s First Plant for Clean Jet Fuel on October 4, 2021

S. Jayabarathan B.E. (Hons), P. Eng (Nuclear) Canada

 

 
An airplane taking off in Germany.

 

 

2050 ஆண்டுக்குள் ஜெர்மனி பூஜிய கரிவாயு வெளியேற்றத் திட்டம்

 

அகில நாட்டு விமானப் பயணக் குழுவகம் [ International Air Transport Association] (IATA) 2021 அக்டோபர் 4 இல் அறிவித்த “2050 ஆண்டுக்குள் பூஜிய கரிவாயு குறிக்கோள்” தகவல் லாபமில்லா அட்மாஸ்ஃபர் தொழிற்துறை [Nonprofit Organization Atmosfair] தனது உலக முதற்பாடு செயற்கைக் கரி நடுமை ஈ-கெரோசின் ஜெட் எஞ்சின் எரித் திரவ ஆலையைத் [Synthetic Carbon-neutral eKerosene Aviation Fuel Plant] திறந்தது. குழுவகம் ஜெர்மனி எம்ஸ்லாந்து [Emsland ] நிலப் பகுதியைத் தேர்வு செய்து 2022 ஆண்டில் எட்டுக் பாரல்கள் [Eight Barrels] ஒரு டன் செயற்கை ஈ-கெரோசின் எரித் திரவம் தயாரிக்கும் என்று அறிவித்தது. விமானப் போக்குவரத்துப் பயணம் பூகோளக் கரிவாயு வெளியேற்றத்தில் 2%-3% பங்களவு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். தற்போதுள்ள ஏவியேசன் எரித்திரவத்தில் ஈ-கிரேசினைக் கலந்தால். பேரளவு கரிவாயு வெளிவீச்சைக் குறைக்கும். அதற்கு மீள்புதிப்பு மின்சக்தி பரிமாற காற்றாடி சுழலிகள் [ Electricity from Reusable Wind Turbine] தேவைப்படும். அவ்விதம் தயாராகும் கலப்பு எரித் திரவம், ஜெர்மனியின் லுஃப்தான்ஸா விமானங்களில் நிரப்பப்படும்.

ஜெர்மனியின் விமானங்களுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் டன் ஈ-கெரோசின் எரித் திரவம் தேவைப்படும். காலநிலைப் பாதுகாப்புக்கு பச்சை நீரக வாயு [Green Hydrogen] பயன்படுகிறது. பச்சை நீரக வாயு தயாரிக்க பேரளவு மீள்புதிப்பு மின்சக்தி [காற்றாடிச் சுழலிகள்] மின்சாரம் கிடைக்க வேண்டும். செயற்கை ஈ-கெரோசின், ஏவியேசன் எரித்திரம் போல் 4 முதல் 5 மடங்கு விலை மிக்கது. பேரளவு ஆலைகள் தயாரித்தால் விலை குறையலாம். அத்துடன் ஏராளமான காற்றாடிச் சுழலிகள் மின்சாரம் அருகில் கிடைக்க வேண்டும்.

 

தகவல்;

 

1.https://kleanindustries.com/resources/environmental-industry-market-analysis-research/germany-opens-world-s-first-plant-for-clean-jet-fuel/

2https://www.euronews.com/2021/10/04/world-s-first-commercial-plant-making-clean-jet-fuel-has-opened-in-germany-says-ngo

3. https://www.ecowatch.com/clean-jet-fuel-germany-2655220447.html

===========================

இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில்நுணுக்கம்.

Posted on October 8, 2021


Indian Railways Will Run Trains on Hydrogen Fuel-Based Technology

Under the flagship programs of the Government, ‘Advanced Chemistry Cell (ACC) Batteries’ and ‘National Hydrogen Mission’, to cut down on the Green House Gas (GHG) emission under Paris Climate Agreement .

A new dawn ushers on Indian Railways as it endeavors to be self-reliant for its energy needs as directed by the Prime Minister and solarise railway stations by utilizing its vacant lands for Renewable Energy (RE) projects. Railway is committed to utilize solar energy for meeting its traction power requirements and become a complete ‘Green mode of transportation’.

The Ministry of Railways has decided to install solar power plants on its vacant unused lands on mega scale.

The use of solar power will accelerate the Minister of Railways, Piyush Goyal’s mission to achieve conversion of Indian Railways to ‘Net Zero’ Carbon Emission Railway.

Indian Railways present demand would be fulfilled by the solar projects being deployed, making it the first transport organisation to be energy self-sufficient. This would help in making Indian Railways green as well as ‘Atma Nirbhar’.

இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் மீள்புதிப்பு எரிசக்தியில் இயங்கத் திட்டங்கள்

இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் முற்போக்கு இரசாயன மின்கலன் நிறுவகம் & தேசீய நீரக வாயு நிறுவகம் [Advanced Chemistry Cell Batteries & National Hydrogen Mission] இரண்டும் இணைந்து, 2015 ஆண்டு பாரிஸ் காலநிலை உடன்படிக்கைப்படி, 2030 ஆண்டுக்குள், இந்திய இருப்புப் பாதை வண்டிகள் நீரக வாயு மூல எரிசக்தியில் [Hydrogen Fuell-Based Technology] இயங்கி பூஜிய கரித்தூள் வெளியேற்ற விதியைக் கடைப் பிடிக்கும் என்றோர் திட்டம் உள்ளது. [indian Railway Organization of Alternate Fuel (IROAF)] & [Green Fuel of Indian Railways] நிறுவகங்கள் திட்டத்தை,54 மைல் தூரத்தில் [90 கி.மீ.] உள்ள, வட இரயில்வே சோனிபட்- சிந்து பகுதியில் கட்ட ஆரம்பித்துள்ளன.

திட்ட வேலைகள் டிசைன், வடிவாக்கம், தயாரிப்பு, அனுப்புதல். நிறுவுதல், சோதனை, நீரக வாயு & மின்கல மின்னியல் சாதனம், நீரக வாயு சேமிப்பு, [For 1600 HP Engine DEMUS] .முதலில் 2 டீமஸ் எஞ்சின்கள் மாற்றப்படும். பிறகு 2 ஹைபிரிட் எஞ்சின் மாற்றப்படும். அத்திட்டம் இந்தியாவுக்கு 2.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு மிஞ்சும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அந்த புதிய இரயில் தொடர் ஹரியானாவில் சோனிபட்-சிந்து பகுதியில் முதலில் இயங்கும்.

அடுத்து பரந்த வெளியில் நிறுவி சூரியக் கதிர்ச்சக்தி மின்கலன் ஆற்றலில் இரயில் எஞ்சின்கள் இயங்க ஏற்பாடுகள் தயாராகுகின்றன.

Indian Railways has acted as a pioneer in green energy procurement. It has started energy procurement from various solar projects like 3 MWp solar plant set up at MCF Raebareilly (UP). About 100 MWp rooftop solar systems have already been commissioned on various stations and buildings of Indian Railways.

Besides, one project of 1.7 MWp at Bina (Madhya Pradesh) which shall be connected directly to the Overhead Traction System has already been installed and is presently under extensive testing. It is likely to be commissioned within 15 days. This is the first of its kind project in the world commissioned by Indian Railways in collaboration with Bharat Heavy Electricals Limited (BHEL). It involves adoption of innovative technology for converting Direct Current (DC) to single phase Alternating Current (AC) for feeding directly to Railway’s overhead traction system. The solar power plant has been established near the Bina Traction SubStation (TSS). It can produce approximately 25 lakh units of energy annually and will save around INR 1.37 Crore for Railway every year.

======================

தகவல்;

 

1.https://kleanindustries.com/resources/environmental-industry-market-analysis-research/germany-opens-world-s-first-plant-for-clean-jet-fuel/

2https://www.euronews.com/2021/10/04/world-s-first-commercial-plant-making-clean-jet-fuel-has-opened-in-germany-says-ngo

3. https://www.ecowatch.com/clean-jet-fuel-germany-2655220447.html

 

https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgzGkZkWGHQFcvVglfbBmrsXqScXthttps://solarquarter.com/2020/07/07/solar-energy-to-make-indian-railways-a-complete-green-mode-of-transportation/https://solarquarter.com/2020/07/06/rites-tenders-for-1-gw-land-based-solar-pv-projects-on-railways-land-across-india-2/

S. Jayabarathan  October 8, 2021 [R-1]

Series Navigationசுவர்கடலும் கரையும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *