ஆட்கொல்லும் பேய்

This entry is part 5 of 47 in the series 31 ஜூலை 2011

எங்கோ ஒரு கங்காய் தென்பட்டது
இன்று பரவிப்பரவி
பெரும் நெருப்பாய் எ¡¢கிறது
தொலைவில் சிறு துளியாய் கண்டது
இன்று பெருகிபெருகி
பெரும் சாக்கடையாய் நாறுகிறது
நமக்குப் பின்னால் தொடர்ந்திருந்த
நிழல் ஒன்று இன்று
நம்மையே விழுங்க வருகிறது
இலட்சத்தில் ஒருவருக்குப் பிடித்த
வியாதி படையெடுத்து
எல்லாரையும் தொற்றுகிறது
கண்ணுக்குத் தொ¢யாது உழன்ற
ஒரு அணு வெடித்து
சமுதாயத்தையே அழிக்கிறது.

கேவலமாக கருதப்பட்டவை இன்று
தம்பட்டம் அடித்து
கௌரவமாய் கோலோச்சுகிறது
சீரழிவது நாமென்று தொ¢ந்தும்
வாயில்லாப் பூச்சியாக
வாழப்பழகியதால் பொம்மையாகிறோம்
சமுதாயத்தை உறிஞ்சும் அட்டைகளை
அடைக்கலம் காப்பதுவே
ஆள்வோ¡¢ன் கடமையாகிறது
ஆட்சியிலிருந்தால் தண்டனையின்றி
தவறுகள் செய்யலாம்
இது எழுதாச் சட்டமாகிறது
ம்…
ஊழலைப் பாதுகாக்க
சட்டமியற்றாமலிருந்தால் சா¢ !

Series Navigationகுங்குமச்சிமிழ்எனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)
author

ரத்தினமூர்த்தி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *