நாளை ?

This entry is part 22 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011
காத்திருக்கும் 
இறுதி கொண்ட 
வாழ்வை
மற்றவர்கள் 
தீர்மானிக்க 
என் பிறப்பின் 
உறுதி 
இருள் கொண்ட 
ஒளியினை
கொண்டது .

அதன் அசைவுகள் 
கட்டளை இடும் 
முன்னரே 
மறுத்துவிடுகிறது 
சுய ஒளி.
அதன் 
நிறப்பிரிகை 
கவன சிதறலாகிறது.

கணமேற்றும் நாட்களை 
என் பருவங்கள் 
கூட 
அறிந்திருக்கவில்லை .

குற்றசாட்டின் உண்மை 
குற்றங்களில் 
ஒருபோதும் 
இருந்ததில்லை 
சட்டங்கள் இயற்றும் 
மேதமையில் 
இருக்கபோவதில்லை 
மனிதம் மறக்க 
செய்யும் 
மனித நேயத்தில் 
மலிந்து கிடக்கிறது .

மக்களின் பெருங்கூட்டம்
இரைச்சலின் மிகுதி 
வருத்தம் கொள்ளும் 
அன்பின் பரிதவிப்பு
யாவும்   என்னை 
சேர்வதற்கு முன்பாக 
நாளை 
ஒன்று 
இருக்க வேண்டுமே ?

உன்னை போல 

பகை கொண்ட 

வன்மம் 
இருந்ததில்லை .
உடல்  மீது 
அமர்ந்திருக்கும் 
கொசுவை 
விரட்டுவதில் 
அமைந்துள்ளது 
என் 
இப்பொழுதைய 
சுதந்திரம் .
             வளத்தூர் தி .ராஜேஷ் .

Series Navigationமொழிபெயர்ப்புஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *