புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது

This entry is part 15 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை, ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள 1200 கோடி கட்டிடம் என்ன ஆகும் என்ற கேள்வி. இந்த விவகாரம் முதலில் தொடங்கியது தற்போதைய முதல்வரிடமிருந்து தான். ஏழு வருடங்களுக்கு முன்னால், 96 ஆண்டுகால பழமை வாய்ந்த குவீன் மேரிஸ் கல்லூரி இருந்த இடத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட ஜெயலலிதா முயன்ற பொது, பாரம்பரியம் மிக்க ஒரு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்ற பொதுவான கருத்தால் அந்த முயற்சி தடைபட்டது.

 

பின், திமுக ஆட்சிக்கு வந்ததும் பெரும் பொருட்செலவில் புதிய தலைமைச் செயலகம், ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டப்படும் என்று அறிவித்தது. அதற்கு கலைஞர் அவர்களின் பெயரை சூட்டப் போவதாக அறிவிக்கப் பட்டது.

 

இந்நிலையில், கட்டுமானம் முடிவதற்கு முன்னாலேயே திமுக, பிரதமர் தலைமையில் திறப்பு விழா கொண்டாடியது. முடிக்கப் பெறாத மாடிகளை திரை வைத்து மறைத்து சட்டசபையும் கூடியது. முன்னதாக தலைமைச் செயலகம் இருந்த இடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டை செம்மொழி நூலகமாக மாறியது.

 

இந்த வருடம் நடந்த தேர்தலின் முடிவால் ஆதிமுக மறுபடியும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரத்தில், தலைமைச் செயலகம் மறுபடியும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாறும் என்று எதிர்பார்க்கப் பட்டது. அது போலவே முதல்வர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் புதுப்பிக்கப் பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைச் செயலகம் மாறியது. உடனே தி.மு.க, ம.தி.மு.க முதலான பல கட்சிகள் ‘ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை’ என்ற தலைப்பில் கண்டனத்தை தெரிவித்தனர். பலர், “மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது சரியில்லை; அந்த கட்டிடத்தை சரியான முறையில் உபயோகிக்கவேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.

 

இந்த கருத்துக்களும், விமர்சனங்களும் முதல்வரை பதில் கூற நிர்பந்தித்தன. தலைமைச் செயலகம் ஏன் மாற்றப்பட்டது என்பதற்கான காரணத்தை கூறி, இந்த முடிவு காழ்ப்புணர்ச்சியின் காரணத்தால் எடுத்தது அல்ல என்றும், அந்த கட்டிடம் உரிய முறையில் உபயோகப்படுத்தப் பட்டு, செலவிட்ட பணத்திற்கு மதிப்பு கொடுக்கப் படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். அவர் கூறிய காரணங்கள் இவையாவன:

 

௧. கட்டிடம் இன்னும் கட்டிமுடிக்கப் படவில்லை. சினிமா செட் போல திரையை போட்டு சமரசத்துடன் சபை கூடியது.

 

௨. அரசின் 36 துறைகளுள் 30 துறைகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து தான் இயங்கின; ஆறு துறைகள் மட்டும் பெயருக்கு அங்கு இயங்கிக் கொண்டிருந்தன. இது சரியான அரசியக்கத்திற்கு சான்று அல்ல.

 

௩. கட்டுமானத்தில் ஊழல் நடந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய குழு நியமிக்கப் பட்டிருக்கிறது. கட்டப்பட்ட கட்டிடம் செயலகத்திற்கு தகுதியற்றது.

 

இந்த காரணங்களில், முதல் இரண்டு காரணங்களுக்கு ஆவணங்களும் அரசு சார்பில் அளிக்கப் பட்டன. கட்டிடத்தில் திரை போட்டு சபை கூடியதற்கும் புகைப்பட ஆவணங்களும் இணையதளத்தில் உலாவின.உடனே தற்காலிகமாக   செயலகம் மாறியது குறித்து ‘மௌனத்தின்’ மூலம் கட்சிகள் பதிலளித்தன. ஆனாலும், பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையை செம்மொழி நூலகமாக மாற்றிய திமுகவைப் போல், இந்த கட்டிடமும் ஒப்புக்கு உபயோகிக்கப் பட்டால், கொடி தூக்கத் தயாராய் இருக்க கட்சிகள் முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், மேலும் முக்கிய பிரச்சனையான சமச்சீர் கல்வி, அவர்கள் கவனத்தை குத்தகை எடுத்திருந்தது.

 

சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஒரு முடிவு கிடைத்துவிட்டது. எதிர்ப்புகளும் அடங்கிவிட்டன. அடுத்து புதிய செயலகக் கட்டிடம் என்ன ஆகும் என்ற பிரச்சனையைப் பற்றி பிறர் யோசிக்கத் தொடங்குவதற்குள், முதல்வரிடமிருந்து அரசாணை வெளிவந்துவிட்டது. அவர் ஆணையில் கூறப்படுவதாவது,

 

“புதிய கட்டிடத்தின் A பிரிவில் AIIMS இற்கு இணையான ஒரு மருத்துவமனை நிறுவப்படும். முக்கியமாக ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படும்;  B பிரிவில் ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் படும் ”

 

இந்த அரசாணையால், கட்டிடம் ஒப்புக்கு உபயோகபடுத்தப் படுகிறதென்று எந்த கட்சியும் வாதமிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், செம்மொழி நூலகத்தை செயலகமாக மாற்றி அமைத்ததற்கே பெரிய சர்ச்சை எழுந்தது.

 

பிற்காலத்தில் திமுக ஆட்சிப் பீடத்தில் ஏறினால், அரசு மருத்துவமணை மற்றும் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க பெரிய இடம் தேவைப் படும். இதே போன்ற இடம் கிடைக்குமா என்பது சந்தேகம். இடம் கிடைக்காமல் மூட முடிவு செய்தால், அது மேலும் சிக்கலில் கொண்டு பொய் விடும். இது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலை.

இனி செயலகம் வேறு இடத்திற்கு மாறுவதும், அதை திரும்பவும் தான் முதல்வர் ஆனதும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதும் நடக்கக் கூடாது என்ற தந்திரத்தோடு இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்பது புரிகிறது.

 

மக்கள் நலனின் பார்வையில் கூறவேண்டுமானால்,இந்த முடிவு சரியான முறையில் பயனளித்தால் பாராட்டப் படவேண்டிய முடிவு. அப்படி அல்லாமல், அரசியல் தந்திரமாக மட்டும் செயல்பட்டால், திமுக சாலை மறியல் செய்து பலத்தை நிரூபிக்க இடமளிக்கும் மற்றொரு அவசர முடிவாக தான் கருதப்படும்.

 

Series Navigationஉரையாடல்.”-தீர்ந்துபோகும் உலகம்:
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

7 Comments

  1. Avatar
    Paramasivam says:

    Mr.Kannan Ramasamy again touched a controversial subject without deep study.Let us leave the party politics for a while.The new secretariat building is built only to house Secretariat and Assembly. It is not all suitable for a hospital,that too super-speciality hospital.It is better if Mr.Kannan read articles in Times of India and Hindu about the feasibility of converting the building into an hospital.The building has three big halls to house Assembly,Council and Library.They are circular shaped.While converting them into patients” wards,lot of space will be wasted.Entire wiring have to be changed to provide increased load of electricity and oxygen pipes.Ramps and bigger lifts to carry patients in stretchers should be provided.Residential accommodation to be provided to doctors and paramedical staff.All these will involve additional expenditure of Rs100 crores.This building is the First Green Assembly building in the world.Its design won the first prize in an international competition.The German architects GMP and their Indian counterparts were not consulted regarding the modifications.More than all these things,for PG courses,one Faculty for every 2 students are stipulated by MCI.Already,there is severe shortage of Faculty as well as doctors in the existing Medical Colleges and Hospitals.Talent hunt to be done on global level.Already GH is going to be expanded in the land where Central Jail was functioning.Inspite of all these hurdles if the Govt sticks to its decision,we will lose one of the 20 Landmarks in the modern architectural wonders of the world..

  2. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    நீங்கள் சொல்வதை நான் படிக்கவில்லை என்று எப்படி முடிவு செய்தீர்கள்?. //அப்படி அல்லாமல், அரசியல் தந்திரமாக மட்டும் செயல்பட்டால்,// உங்கள் பதில் முழுவதும் இந்த ஒரே வரியில் அடக்கம்.மருத்துவ மணையாக மாற்ற முடியாது; கலை வேலைப் பாடு வீணாகும் என்று கூறுவதெல்லாம் உங்கள் கற்பனை. இப்படிப் பட்ட ஒரு மருத்துவ மனைக்கு மேலும் செலவு செய்வதில் தவறில்லை. முயற்சிக்கு பின் பேசுவது தான் சரி. இப்போது, சரியாக உபயோகப் படுகிறதா இல்லையா என்பது தான் கேள்வி. முடிவை இப்போதே எடுத்து விடுகிறீர்கள். திமுக ஆதரவால் PREJUDICIOUS ஆகிறீர்கள். மருத்துவமணை சரியாக இயங்கவில்லை என்றால் குறை கூற வாருங்கள். உங்களுடன் நானும் இணைகிறேன்.

  3. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    உங்கள் கருத்தை பதிவு செய்யும் முன், கட்டுரை கூறும் செய்தியை தெளிவுவாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த கட்டிடம் சரியாக கட்டி முடிக்கப் பட்டிருந்தாலோ, அரசியக்கம் முறையாக நடந்திருந்தாலோ எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சியில் முடிவெடுக்க முக்கிய காரணம் திமுகவின் முறையின்மைத் தனம் தான். இந்த கட்டிடம் கலை வேலைப்பாடுடன் கட்டப் பட்டுள்ளது என்ற உண்மையில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம், பல நூறு கோடிகளை கொட்டிவிட்டு ஆறு துறைகளை மட்டும் அங்கிருந்து இயக்கிக் கொண்டிருந்த திமுகவின் முறையின்மையை சகித்துக் கொள்பவர்கள், மருத்துவமணையாக மாற்றுவதற்கு நூறு கோடி செலவு செய்வதை ஏன் சகித்துக் கொள்ள மறுக்கிறீர்கள்? அரசியலை தள்ளி வைத்துவிட்டு பேசுவதாய் தெரியவில்லை எனக்கு. மருத்துவமணையாக மாறும் போது கட்டிடத்தின் கலைத் தன்மைக்கு கேடு விளையலாம் என்று கூறுவது தான் நடுநிலைமை. கேடு விளையும் என்று கூறுவது முன்கூட்டி மனங்கெடு.

  4. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    ஆறு துறையானாலும் அது நாங்கள் கட்டிய இடத்திலிருந்து தான் இயங்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு என்ன சொல்வது?

    மக்கள் வரிப்பணத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக, இந்த உலகப் பிரசித்தி பெற்ற கட்டிடம்,அம்மா நாமம்,அப்பா நாமம் பாடும் ஜால்ராக்களுக்கு(தவறான வார்த்தைக்கு மன்னிக்கவும்) கூடாரமாக செயல்படுவதை விட, நோயாளிகளை குணப்படுத்தும் மருத்துவமணையாக செய்லபடுவதில் தான் முழு உபயோகம் பெரும் என்று நான் நினைப்பதில் என்ன தவறு?

    இந்த கட்டிடம் கட்டி முடிக்கப் பெறவில்லை; டிசைன் தான் பரிசு வாங்கியிருக்கிறது. டிசைன் போட்டது வல்லுனர்கள்; நம் பணத்தை வீணடித்தது திமுக.ஜெயலலிதா அப்போது புதிய கட்டிடம் உருவாக்க ஒரு கல்லூரியை விழுங்க நினைத்ததும் தவறு என்று தான் எனக்கு தோன்றுகிறது; செயின்ட் ஜார்ஜ் கொட்டையிலிருந்தே இயங்கக் கூடிய சட்டசபைக்கும், அரசியக்கத்திற்கும், இவ்வளவு பெரிய கட்டிடமும், மக்கள் பணம் கொட்டப் பட்டதும் தவறாக தான் தோன்றுகிறது.அரசியக்கம் ஒழுங்காக நடந்திருந்தாலாவது ஒப்புக் கொண்டிருக்கலாம். அதுவும் சரியில்லை. இந்த நிலையில் மருத்துவமணை என்று திமுகவே அறிவித்திருந்தாலும் நான் கண்டிப்பாக ஆதரித்திருப்பேன்.எனது கடைசி பதில் இது தான். இருவரின் குறைகளையும் இந்த பதிவில் நான் ‘குறிப்பிட்டுள்ளேன்’. கட்டிடம் மருத்துவமணையாக மாறும்போது தான் சிக்கல்கள் குறைகள் ஆகின்றனவா இல்லை நல்ல முறையில் தீர்க்கப் படுகின்றனவா என்று புரியும். இந்த நிலையில் அவை குறைகள் அல்ல! சிக்கல்கள் தான்! திமுக இந்த கட்டிடத்தை கட்ட ஆரம்பித்த பொது இருந்த சிக்கல்களை நான் குறிப்பிடாததைப் போல, இப்போதுள்ள சிக்கலகளையும் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை!

    இன்று இந்த முடிவை எதிர்ப்போர், நோய்க்கு மருந்திடும் ஆரம்ப கட்ட முயற்சியை எதிர்க்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, பின் கருத்துக்களை பதிவு செய்தால் நன்று. நோய்க்கு சரியாக மருந்து கொடுக்கப் படாவிட்டால், அப்போது அரசின் முடிவை குறையாக அறிவிப்பதில் எந்த தடையும் எனக்கு இருக்கப் போவதில்லை என்றும் கூறிக் கொள்கிறேன்.

  5. Avatar
    கண்ணன் ராமசாமி says:

    கருத்துக்களை பகிருந்து கொண்டமைக்கு பரமசிவன் அவர்களுக்கு நன்றி. சரியோ தவறோ, என் அடுத்த பதிவுகளிலும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

  6. Avatar
    Paramasivam says:

    I am not inclined to appreciate any one”s political strategy in this issue.Some years back, banks used to function in big buildings with 1000 sq.ft area.But after computerisation,now banks are functioning in 400 sq,ft area.Yesterday there was a news item stating that all TN Govt departments are being computerised by ELCOT.If all departments are computerised,all the 36 deptts can be accomodated in 700 rooms.If there is a will,there is certainly a way.The distance between the old secretariat and the new secretariat is hardly 3 KM.Even if all deptts are not moved,all Secretaries can move.If you have a pro Govt stand, I cannot help it.So you will comment only after the efforts for conversion resulting in failure.Good stand indeed.The need for new Secretariat was felt long back.Even before completion, unfortunately,the regime has gone.According to the winning design only the building was constructed.Have you ever visited the building?Infact, I had occasion to go over to a deptt functioning there. that is why I am vehement in my argument.Anyhow, atleast after everything is over,you will realise what I am saying.Thanks for taking so much pains to provide reply to me.Still I am not convinced.

  7. Avatar
    Samy says:

    The world is moving towards virtual offices. Many companies are now asking their staffs to work from homes. The reason that departments functioning from different locations will be ineffective is not acceptable. This lady will never change her style. Except the political, i dont think any other reason for dumping the secretariat buildings. God only should save TN,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *