Articles Posted by the Author:

 • விவசாயிகள் போராட்டமா?

  விவசாயிகள் போராட்டமா?

  “விவசாயிகள் போராட்டமா? வளர்ச்சிக்கு எதிரானதது”, என்றொரு கண்ணோட்டம் திறந்த வீட்டிற்குள் சுண்டெலி புகுதல் போல மெதுவாக நம் மனதுகளில் ஏற்படத் துவங்கியுள்ளது. அவ்வெண்ணம், ‘எது வளர்ச்சி?’ என்ற புரிதலுக்குள் நம் சிந்தனை செல்லாதிருப்பதன் விளைவாக ஏற்படுவது. நாகரிகம் உருவானதற்கு முன்பு உருவானது மனித இனம். அவ்வினம், வெற்றிகரமாக அடுத்த நூற்றாண்டிற்குள் ஆரோக்கியமாக காலடி எடுத்து வைக்க மிகவும் தேவையான ஒன்று விவசாயமும், உணவும். நாகரிகம் என்பது, மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்தவே. ஒருவனுக்கு உணவே இல்லை என்ற நிலை […]


 • இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்

  சில வாரங்கள் முன்பு உன்னை போல் ஒருவன்-முசுலிம்களுக்கு எதிரான படம் இல்லை என்ற நான்கு பகுதிக் கட்டுரையை இங்கு வெளியிட்டேன். அதில், விஸ்வரூபம் படத்திலும் இது போன்ற சர்ச்சைகள் உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது எதிர் பார்த்ததை போலவே, மிக மிகத் தீவிரமான ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் வியப்புக்கு இடம் தரும் ஒரு நிகழ்வு என்னவென்றால், மத்திய தணிக்கைத் துறையால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு சட்டவிரோதமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதற்குப் […]


 • உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4

  விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளை மேலும் ஆராயலாம். கோவை குண்டு வெடிப்பிற்காக(1998) கைது செய்யப்பட ஒரு தீவிரவாதி, அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி(2002) தான் என்று காலத்திற்கு பிந்தைய ஒரு சம்பவத்தை கூறுகிறாராம்! இது படத்தில் உள்ள ஒட்டையாம். இப்படி ஒரு கண்மூடித் தனமாக கருத்தை எப்படி வெட்கமே இல்லாமல் வெளியே சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை! இதை சொல்லும் தீவிரவாதி அப்துல்லாவிடம் ‘நீ ஏன் கோவையில் குண்டு வைத்தாய்?’ என்று கேட்கப் படவில்லை. அவன், கோவையில் குண்டு […]


 • உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3

  உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3

  கண்ணன் ராமசாமி விமர்சகர்களின் முக்கிய குற்றச் சாட்டு பாசிசத்தை பற்றியது. இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள வெறுப்பில், இவர் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் அழிக்க முடியும் என்று அடிக்கடி சொல்கிறார் என்ற ஒரு குற்றச் சாட்டு நாயகன், இந்தியன், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களை பார்த்த பிறகு பலரது மனங்களில் எழுகின்றது. இதே விமர்சனத்தை கமலின் முன்பு உன்னை போல் ஒருவன் டாக்        ஷோவில் ஒரு பெரியவர் முன்வைத்தார். மும்பை சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப் பட்ட […]


 • நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவரா

  நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவரா

  பொதுவாகவே இப்படிப் பட்ட தலைப்புடன் எழுதப் படும் கட்டுரைகள், “உங்கள் கணக்கு ஹாக் செய்யப் படலாம்!”, “பெண்களே! உங்கள் விவரங்களை கொடுக்காதீர்கள்”, என்பன போன்ற எச்சரிக்கைகளோடு வெளியாகும். அக்கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும். ஆனால், இந்த சமூக இணைப்புத் தளங்களின் முக்கிய தொல்லைகளும், நன்மைகளும், பொதுவான ஆபத்துக்களைத் தாண்டி ஆராய்ந்தால் தான் புரியும். அதைப் பற்றி எவரும் எழுதுவதில்லை என்று கூற முடியாது. எழுதுவோரின் எண்ணிக்கை குறைவு. அவர்களின் இடுவை பிரபலம் அடைவதும் கடினம். பல வருடங்களாக […]


 • ஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்

  அக்டோபர் 6, 2011 ஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு சோகமான நாள். 27 ஆண்டுகளாக ஒரு ஆப்பிள்-ஐ அழுகாமல் வைத்துக் கொண்ட புதுமை கடவுள் மறைந்த நாள். தன்னுடைய வித்யாசமான யோசனைகளால் கணினி மற்றும் செல்பேசி தொழில் நுட்பத்தை அழகுபடுத்தியவர் என்ற முறையில், உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ரசிகர்கள், அவருக்காக பிராத்தனை செய்கின்றனர். அவர் உருவாக்கிய பல பொருட்களைப் பற்றித் தான் சில நாட்களாக அதிகம் கூகுள் செய்யப் படுகிறது. அவர் இறந்தது எப்படி? அவர் சாதனைகள் என்ன? அவருடைய […]


 • நியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்

  நியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்

  இன்றைய ஹாட் நியூஸ்: தமிழகத்தில் இடைத் தேர்தல்; டெல்லியில் சிதம்பரம்; உலகத்தில், நியுட்ரினோ (Neutrino)! என்ன அது? இயற்பியல் பயில்வோருக்கு முதல் பாடமே, ஒளியின் வேகம் குறித்து ஐன்ஸ்டீன் உருவாக்கிய சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special relativity theory) தான். இன்று வரை, ஒளியின் வேகத்தை காட்டிலும் வேகமாக எதுவும் பயணிக்க முடியாது என்று அந்த கோட்பாடு கொண்ட கருத்தை கற்பிதம் என்று நிரூபிக்கும் கண்டுபிடிப்பாய் அமையப் போகிறது நியுட்ரினோவின் வேகம். அதைப் பற்றி சில செய்திகளை பார்ப்போம். நியுட்ரினோ […]


 • இறப்பு முதல், இறப்பு வரை

  இறப்பு முதல், இறப்பு வரை

  இது ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட படைப்பு! காலை ஆறு மணி.. “பாலக் கறந்துட்டியா? கிளம்பவா?”, குளித்து முடித்து வெளியே வந்த மணி, தன் மகன் இளவரசனிடம் கேட்டது. குளியல் அறை என்று கூற முடியாத ஒரு ஓலைக் கூடு. அதன் மறைப்புத் தடுப்பை (கதவு என்றும் கூற முடியாது) தூக்கி, வெளிப் பக்கமாகத் தள்ளி வைத்து, வெளியே வருவதற்கு வழி செய்தார் மணி. அவர் குளித்து முடித்துவிட்டு உடம்பை ஒரு சொட்டு நீர் கூட […]


 • இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்!

  இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்!

  “எல்லாம் ரெடியா? வா சீக்கிரம். ஏழு மணி ஆயிடுச்சு”, ஜிதாமித்ரனின் ஜாதகம் இனிமேல் அவனைத் தவிர வேறு எவருக்கும் தேவைப் படாது. அந்த அழைப்பு, அவன் மாமா ஸ்ரீவத்சவாவின் திருவாயிலிருந்து, வெற்றிலை தெளிக்க வெளிவந்தது. ஆம், மித்துவுக்கு திருமணம்! ஜிதாமித்ரனுக்கு வீட்டில் செல்லப் பெயர், மித்து. ஜிதாமித்திரன், மித்ரனாகி, மித்ரன், மித்துவாகியதற்கான முழு பொறுப்பு அவன் அக்கா அர்ச்சனாவையே சாரும். சிறுவயது முதல் படிப்பையே குறியாக வைத்து வளர்ந்த மித்து, CA முடித்து சில வருடங்கள் ஆகிவிட்டது. […]


 • மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி

  மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி

  “அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் வெற்றியாமே?!” டீ கடை பெஞ்சு முதல் பீசா கார்னர் வரை எல்லா இடங்களிலும் விவாதிக்கப் படும் முக்கிய விஷையங்களில் இது தலையாயது. ஊழலுக்கு எதிராக யாரேனும் போர் புரிய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தது, இந்த ஊழல் ஒழிப்பு போராட்டத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளது. முதலாம் சுதந்திரப் போர், இன்றைய தலைமுறைக்கு மறக்க முடியாத, பார்க்கத் தவறிய ஒரு த்ரில்லர் படம் போன்றது. இன்றைய இளைஞர்கள், பெரும்பாலும் பழைய படங்களை கிண்டல் […]