(2011 – 2016)
“பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும். விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”
ஸ்காட் போல்டன், ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி
(ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :
1. பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது ?
2. வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா ?
காலிலியோ (1564-1642)
நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை. நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை. புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.
2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்
ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது. அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது. ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.
பூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது. அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள். வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார். ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள், முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும். மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும். சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும். எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்.. அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும். வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும். பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும். ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.
நாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது ! தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ!
வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!
தகவல் :
Picture Credit : NASA, ESA,
1. Galileo Project Information www.nssdc.gsfc.nasa.gov/
2. Exploration of the Planets By: Brian Jones [1991]
3. Jupiter By: Garry Hunt & Patrick Moore
4. Galileo Orbiter & Probe By: Michael Wilcox [Nov 16, 1995]
5. Solar System Exploration: Mission Jupiter, Galileo
6. Astronomy By: Reader ‘s Digest [1998]
7. Galileo Project: www.jpl.nasa.gov/galileo NASA/JPL Press Release [Feb 26, 2003]
8. National Geographic News : On August 5th NASA Spacecraft is Slated to Launch on a Five-year Journey to Jupiter (August 4, 2011)
9. Space Daily : NASA Launches Juno to Jupiter (August 5, 2011)
10. BBC News : Juno Probe Heads for Jupiter from Cape Canaveral (August 5, 2011)
11. NASA Report : NASA’s Juno SpacecraftLaunches to Jupiter (August 5, 2011)
++++++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (August 18, 2011)
http://jayabarathan.wordpress.
- என் பாதையில் இல்லாத பயணம்
- புணர்ச்சி
- ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்
- சின்னஞ்சிறிய இலைகள்..
- குற்றமுள்ள குக்கீகள் (cookies)
- 10 Day Solo Art Exhibition at Vinnyasa Premier Art Gallery, Chennai on September 1, 2011
- இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி
- புத்தன் பிணமாக கிடைத்தான்
- மாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா
- எங்கிலும் அவன் …
- முன்னறிவிப்பு
- (75) – நினைவுகளின் சுவட்டில்
- சிப்பியின் ரேகைகள்
- உரையாடல்.”-
- புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது
- தீர்ந்துபோகும் உலகம்:
- எங்கே போகிறோம்
- வாக்கிங்
- ஆர்வம்
- கதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- மொழிபெயர்ப்பு
- நாளை ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4
- கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்
- நேயம்
- ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?
- மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ
- உடைப்பு
- ஜென் ஒரு புரிதல் பகுதி 7
- வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்
- யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்
- காகிதத்தின் மீது கடல்
- இருப்பு!
- கூடியிருந்து குளிர்ந்தேலோ …
- நிலவின் வருத்தம்
- பொன்மாலைப்போழுதிலான
- தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !
- தமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு
- இந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….
- பேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)
- இயற்கை வாதிக்கிறது இப்படி……
- முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
- பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்
- சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)