Posted inகவிதைகள்
கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
9 குறுங்கவிதைகள் மரக்கிளைகளின் வழி வெளிச்ச விழுதாய்த் தொங்குகிறது சூரியன்... **************************************** வெளிச்ச விழுதுகளில் குருவிகளாய் ஊஞ்சலாடியபடி இறங்குகின்றன இலைகள் ******************************************** மழையும் எப்போதாவது நீர்விழுதாய் ஊஞ்சலாடுகிறது மரக்கிளையைக் கட்டியபடி.. ******************************************* வெய்யில் புள்ளி வைத்து நாள் முழுக்கக் கோலமிட்டபடி…