எது சிரிப்பு? என் சிரிப்பா ?

This entry is part 11 of 54 in the series 4 செப்டம்பர் 2011

என்னோடு சிரிக்க வருகிறாயா
ஏ மலையே ……….
கல்குவாரியாக சிதறிவிடாமல்
என்னோடு சிரிக்க வருகிறாயா
ஏ நதியே ………..
அணைபோட்ட நாணத்தை உடைத்து
என்னோடு சிரிக்க வருகிறாயா
ஏ காற்றே ……….
மூச்சிலிருந்து பிரிந்து விடாமல்
என்னோடு சிரிக்க வருகிறாயா
ஏ ஆகயாமே ……………
எப்போது கரும்புகை கலைத்து
என்னோடு சிரிக்க வருகின்றீர்களா
ஏ பறவைகளே …………
இரைகள் தொலைந்ததை மறந்து
என்னோடு சிரிக்க வருகின்றீர்களா
ஏ மலர்களே ………

ஓ எப்போது சிரித்து கொண்டுதான்
இருக்கின்றீர்களோ

எனக்கேது உன் போல் ஆறறிவு
இறந்த போதும் என் மேல்
சிரிக்கின்றீர்களே …….?

அ. இராஜ்திலக்

Series Navigationதிண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்
author

அ.இராஜ்திலக்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *