மன்னிப்பதற்கான கனவு

This entry is part 41 of 54 in the series 4 செப்டம்பர் 2011

இப்படியாக தான்
வாழ்வியல் கனவு
அமைக்கப்படும் என்று
போதிக்கப்பட்டது .
இதில் இன்னும் நீ
வந்திருக்கவில்லை .

கலைந்து போன
கனவை என்றேனும்
சந்திக்க இருப்பாய்
வன்மம் கொண்ட
காலம் எச்சரித்து
கொண்டிருக்கிறது
அப்பொழுதும் நீ
கண்டிப்பாக
வந்திருக்கவில்லை .

காத்திருக்கும்
அடுத்த நொடி
அனைத்துமாக
நீயாக இருப்பதற்கு
இன்னும் ஒரு வாரம்
கடக்க வேண்டிருக்கிறது ..
ஆதலால் நீ இன்னும்
வந்திருக்கவில்லை .

நம்மை காலம்
இணைத்திருக்குமாயின்
இதையே என் அன்பாக
எற்றுகொள்
இல்லையெனில்
இருக்கவே இருக்கிறது
என் வழக்கமான காலம்
தன் பழியை சுமக்க .
தீர்மானத்தின் தயக்கம்
இருப்பதினால்
நீ இன்னும் இங்கு
வந்திருக்கவில்லை .

தேடும் விழி கொண்டு
உருவாக்குகிறேன்
பல கனவுகளை
மீதமிருப்பது
நினையாமல் விட்ட
சில விழிப்பு மட்டுமே .

இன்னும் விருப்பங்கள்
உறுதியாகவில்லை
அதற்குள்ளாக மெல்ல
படரும் கனவுகளுக்கு
நான் மட்டுமே
பொறுப்பாகிறேன் .
வேறுவழி எனக்கு
தெரியாததால்
இதில் உன் பங்கும்
பாதி இருக்கிறது
மன்னிப்பாயாக .
-வளத்தூர் தி. ராஜேஷ் .

Series Navigationஅந்த ஒரு விநாடிசில்ல‌ரை
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *