மாலை சூட

This entry is part 13 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஒளிகளாய் நிரம்பியுள்ளது
எந்தன் அறைகள்
சிந்தனை சிதறல்களில் .
மேலும் மேலும் ஒளி பெறுகிறது
உந்தன் வருகையை நோக்கி .

வாசல்களில் என் மனதின்
மிச்சத்தை உளவு வைத்தேன்
அவை சிறு சிறு ஒலிகளாக
கோர்க்கப்படுகிறது மாலை சூட.

நெருங்குதலில் தயக்கம்
கூடுகிறது தவிப்புகள்
அனைத்தும் மவுனமாகியது
நம்மின் புரிதலில் .

என்று ஆட்கொண்டேன்
உன் சுகமானநினைவுகளை .
நினைத்து பார்கையில்
பல நிலைகளில்
உன் பாதிப்புகளின் மிச்சம்
எராளமாக நிறைந்துள்ளது .

நான் அதை அகற்றமுற்படும்
பொழுதுஎல்லாம்
இன்னும் அதிகமானவிளைவுகளை
என் நினைவலைகளில்
ஏற்பட வைக்கிறாய் .

நான் மிக்க நெருங்கி
உன் நினைவுகளை
நேரெதிர் பார்க்கும்பொழுது
அங்கே கண்டது
என் ஆசைகளின்
பிரதிபலிப்பு மட்டுமே.

நான் விருப்பம்கொண்டது
எல்லாம் உன் செயல்களின்
நினைவாக என்னை சேர்கிறது.

அரவணைப்பில் காத்திருக்கும்
நேசங்களில் நொடிகளாய்
நீள்கிறது உன் பரிதவிப்புகள் .

காலம் முன்னெப்போதும்
இல்லாத நெருக்கத்தில்
உறைந்து போகிறது
நம் புரிதல் மவுனங்களில்.

நீடித்து இருக்கும் நம்
தன்மைகளை வெறும்
வார்தைக்குள்
அடங்கிவிடுவதில்லை .

வளத்தூர் .தி .ராஜேஷ்

Series Navigationதொலைந்த ஒன்று.:-வைகையிலிருந்து காவிரி வரை
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

2 Comments

  1. Avatar
    சின்னப்பயல் says:

    மாலையிடக்காத்து அல்லியிருக்கு,,:-))

    //அரவணைப்பில் காத்திருக்கும்
    நேசங்களில் நொடிகளாய்
    நீள்கிறது உன் பரிதவிப்புகள்//

    //நான் விருப்பம்கொண்டது
    எல்லாம் உன் செயல்களின்
    நினைவாக என்னை சேர்கிறது//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *