இதுவும் ஒரு சாபம்

செல்வாக்கால் வெளுக்கப்பட்ட மடிப்புக் கலையாத வெண்மை ஆடைக்குள் புகுந்த தலைவர்களால் நிரம்பியது குளிரூட்டப்பட்ட அரங்கு ரத்தக் கறை படிந்த பற்களும் அரிவாளாய் முறுக்கிய மீசைகளும் தங்களது அதிகாரத்தின் எல்லைகளை அளந்து கொண்டிருந்தன தங்களை குபேரன்கலாக்கிய குடிமகன்கள் இருக்கும்வரை பதவிக்குப் பங்கம் இல்லை…

பிரபஞ்ச ரகசியம்

மனம் தோன்றா காலத்தில் என்னிடம் பறிக்கப்பட்டுவிட்டது பிரபஞ்ச ரகசியம் . அதன் பிறகே பரிணாமம் அடைய விட்டிருக்கிறது காலம் . காண்கின்ற யாவற்றிலும் ரகசியங்களாக மாறுகிறது சுய தேடல்கள் . இந்த உயிரின் இறுதியும் இவ்வாறே இருக்க உலவ விட்டிருக்கிறது அந்த…
தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா  – ஒரு வாசக வர்ணனை.

தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.

BABUJI அவர்கள் இறைத்திருப்பொருத்தம் பெற்றவர்கள். அவர்கள் நடந்தார்கள். வரலாறு தன் பாதையை வகுத்துக்கொண்டது. அப்படியிருந்தும் வரலாற்றின் பக்கங்களில் அவர்களின் முகங்கள் அதிகம் தென்பட்டதில்லை. ஏனெனில், அவர்கள் இறைப் பொருத்தத்திற்காகவே வாழ்ந்திருந்தார்கள். அப்படிப்பட்ட தியாகச்சீலர்களான நபித்தோழர்களைப் பற்றி அமெரிக்காவாழ் கணினி தொழில்நுட்ப வல்லுநர்…

எனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)

'கணையாழி' தொடங்கிய 1965ஆம் ஆண்டின் இறுதியில், திரு. அசோமித்திரன் அவர்களை சென்னை பெல்ஸ் ரோடில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தான் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர் கணையாழியின் சென்னை பொறுப்பாளராக இருந்தார். கணையாழியின் முதல் இதழ் முதல் பெற விரும்பி, என்னிடம்…

காலம் கடந்தவை

பின்பு ஒரு நாளில் உன்னிடம் கூடுத்து விடலாம் என்று முன்பு ஒரு நாளில் உன்னக்காக வாங்கப்பட்ட பரிசு ஒன்றை காலம் கடந்து காத்து வருகிறது என் பெட்டகத்தின் உள் அறை.... பின்பு ஒரு நாளில் சொல்லி விடலாம் என்று முன்பு ஒரு…

ஒரு கடலோடியின் வாழ்வு

திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள்  உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு  வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்...  கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் ... அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் ... எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு?  கர்விக்கும் மனம்...  மறுநொடி சென்றமரும்  மனைவி, குழந்தைகள் பக்கத்தில் .... கண்கள் இங்கும் மனமங்குமாய்   விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும் நாளை மீண்டுமோர் விடியல்..  

தேடல்

             -  பத்மநாபபுரம் அரவிந்தன் - பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில்  தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து கசிந்துருகும் காதல் ...   என்  காய்த்த கைதனில் பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை... சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள் வானோக்கி எம்ப எத்தனிக்கும் ... விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள்  அவள் மேல் வீசும் சோழ தேசத்து பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்.... மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும் அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு மனக் கண்ணில் மறையாது எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது மனைவி, மகன் மேலிருந்த தேடல் மெல்ல மகளின் மேல் நகரும் காலம் தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும் ... கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள் சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் பல…

அடைமழை!

அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது!   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காய் சாலையோரமாய் நடந்தேன்!   என் கைகுலுக்கிவிட்டு தேநீர் அருந்தச் சொன்னது தென்றல்!   ஸ்ட்ராங்காய் ஒரு டீ குடித்தவுடனே மீண்டும் கிளம்பினேன் சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த நடராஜா சர்வீசில்...!   பூக்கடைப்…
அகஒட்டு( நாவல்)விமர்சனம்

அகஒட்டு( நாவல்)விமர்சனம்

அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140. கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம்,…

ஜென் ஒரு புரிதல் 11

மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு வீட்டில் அழுகிறவர்கள் எல்லோருமே தமது மரணத்தை எண்ணியே அழுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சென்னையில் மின்சார மயானத்தில் ஒரு உறவினரின் ஈமைக் கிரியைகளுக்கெனச் சென்றிருந்த போது எரிக்கும் மின் எந்திரத்தின் முன் உடல்கள்…