குடை ரிப்பேரும் அரசியல் கைதும்

This entry is part 15 of 44 in the series 16 அக்டோபர் 2011

சமீபத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலையாக வெளியே செல்வதற்கு வர நேர்ந்தது. ஒரு குடை ரிப்பேர் செய்பவர் குடைகளை சரி செய்து கொண்டிருந்தார். சரி. மழை காலம் வந்து விட்டது, வீட்டிலிருந்த பழுது பட்ட குடைகளை எடுத்து வந்து சரி செய்து கொள்ளலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு சென்று குடைகளை எடுத்து வந்து கொடுத்தேன்.

பழுதான குடைகளை ஆராய்ந்து கொண்டே என்னுடன் பேச ஆரம்பித்தார். சார், எங்க வேலை பாக்குறீங்க என்று ஆரம்பித்தார். சொன்னேன். பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தார். நான் கூட போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தேன் சார் என்றார். எனக்கு ஆச்சர்யமாகவும் என்னவோ போலும் இருந்தது. சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு, அவரே தன்னுடைய கதையை ஆரம்பித்தார்.

1970-களில் பிரபலமாக இருந்த ஒரு அரசியல் பிரமுகரை கைது செய்ய போன போலீஸ் குழுவில் கூட போனேன் சார் என்றார். சரி என்றேன். பிறகு, ஆட்சி மாறியது. நான் கைது செய்ய சென்ற பிரமுகர் கட்சி ஆட்சியை பிடித்தது என்றார். யார் அந்த பிரமுகர் என்று கேட்டேன்? பதில் சொல்லாமல் உரையாடலை தொடர்ந்தார்.

என்னை சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றினார்கள். அடப்பாவமே என்றேன். இரு பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு அங்கே பணிக்காக சென்றேன் என்றார். துறைரீதியாக வெவ்வேறு நடவடிக்கை எடுத்தார்கள். கடைசியாக ஒரு நாள் வேலையை விட்டு போக சொல்லிவிட்டார்கள் என்றார். துயரமாக இருந்தது.

என்னங்க “கோர்ட், டிரிபுயனல், மனித உரிமை ஆணையம்” எல்லாம் இருக்கே என்றேன். அதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எதிரா ஒன்றும் செய்ய முடியாது சார் என்றார். சரிங்க ஏதாவது செக்யூரிட்டி வேலைக்கு போய் இருக்கலாமே என்றேன்.

அட போங்க சார். போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆனவங்களுக்கு யாரு சார் செக்யூரிட்டி வேலை தருவா? என்றார். அட கடவுளே என்றேன். சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.

உரையாடலை அவரே தொடர்ந்தார்.

எனக்கு ரெண்டு பொண்ணுங்க சார். பெரிய பொண்ணு கல்யாணத்தை கஸ்டப்பட்டு முடிச்சிட்டேன் சார். சின்ன பொண்ணு இப்ப வேலைக்கு போறா எதோ குடும்பம் ஓடுது சார் என்றார்.

என்னோட செர்வீசுக்கு நான் டி.எஸ்.பி ஆகி இருக்கனும் சார். இப்படி தெரு தெருவா குடை தைக்கிறேன் என்றார். டி.எஸ்.பி் குடை தைப்பது வருத்தமாகத்தான் இருந்தது.

சமீபத்தில் ஒரு முன்னாள் அமைச்சரை கைது செய்ய சென்ற போது பெரிய போலிஸ் அதிகாரிகள் எல்லாம் மரத்தடியில் நின்றதாகவும் ஒரு இன்ஸ்பெக்டர் தான் கைது செய்ததாகவும் ஒரு வார இதழில் படிக்க நேர்ந்தது. ஒப்பிட்டு பார்க்கவும் முடிந்தது.

ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது மிக உயர்வான பதவிகளில் இருப்போர் எல்லாம் வேறு கட்சி ஆட்சிக்கு வரும்போது முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு போவதையும் பார்க்க முடிகிறது.

அவர் குடையை தைத்து முடித்தார். நான் அவரிடம் யாரு அந்த பிரமுகர் என்று திரும்பவும் கேட்டேன். அவர் முகத்தில் கலவர ரேகைகள் படிவதை பார்க்க முடிந்தது. வேண்டாம் விட்டுருங்க சார் என்றார்.

எவ்வளவு பணம் தரவேண்டும் என்றேன்? சொன்னார். குறைந்த வருமானம் உள்ளவர்களிடம் பேரம் பேச வேண்டியதில்லை என்ற என் கருத்தின்படி கேட்ட தொகையை கொடுத்து விட்டு நடையை கட்டினேன்.

பிறிதொரு நாள் மழை வந்தது குடையை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினேன். குடைக்காரர் நினைவில் வந்தார். அவர் குடை ரிப்பேரை எப்படி கற்றுக் கொண்டார் என்று கேட்காமல் விட்டு விட்டோமே என்று தோன்றியது.

இப்பொழுதெல்லாம் மழை வந்து குடையை விரித்தால் குடை கனமாகி இருப்பது போல் படுகிறது.

Series Navigationஇங்கே..(80) – நினைவுகளின் சுவட்டில்
author

அ.லெட்சுமணன்

Similar Posts

21 Comments

 1. Avatar
  sathyanandhan says:

  Lakshmanan Sir, Sympathy for a police official (ex or working) is rare. If he was really not one among typical corrupted police officials I feel he must only feel happy for starting life of self respect. Sathyanandhan

 2. Avatar
  GovindGocha says:

  இது உண்மைக்கதையா …? எப்படியோ இன்று கல்வித் தந்தையாக இருக்கும் ஒருவரை சாராய கேஸில் அடித்து இழுத்துப் போன ஒரு போலீஸ்காரரை, ரிட்டயர் ஆனாவர், பார்க்க நேர்ந்தது… சாதாராண சைக்கிள் கூட இல்லாத வாழ்க்கை.. ஆனா பெருமையாய் அந்த சம்பவத்தை தினமும் யாரிடமாவது நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொண்டிருப்பார்….

 3. Avatar
  penamanoharan says:

  கௌரவர்கள் பக்கம் நின்ற கர்ணன் போல் சிலர் காக்கிக்கவசம் அணிந்து கடமையாற்றத்தான் செய்கிறார்கள்.

 4. Avatar
  காவ்யா says:

  //அவர் குடையை தைத்து முடித்தார். நான் அவரிடம் யாரு அந்த பிரமுகர் என்று திரும்பவும் கேட்டேன். அவர் முகத்தில் கலவர ரேகைகள் படிவதை பார்க்க முடிந்தது. வேண்டாம் விட்டுருங்க சார் என்றார்.//

  இந்த ‘உண்மைச்சம்பவத்தின் நம்பகத்தன்மையை மேலே உள்ள வரிகள் கெடுக்கின்றன. 77களில் நடந்ததற்காக வேலையை விட்டு நீக்கப்பட்டது நடந்து பலவருடங்கள் ஆகியிருக்கும். எவரோ ஒருவரிடம் அப்பிரமுகர் யார் என்பதைச் சொல்லக்கூட பயப்படுகிறாரென்றால், நம்ப முடிகிறதா ?

  இப்படிப்பட்ட கதைகளை நானும் கேட்டிருக்கிறேன். ரோட்டோரத்தில் ஜோசியம் பார்ப்பவன், தெருவோரம் நின்று பிச்சை எடுப்பவன், இப்படிப்பலர் தங்களை பெரும்சாதனையாளர்களாகவும், பெரும்தலைகளோடு மோதியவர்களாகவும், அதனால் கீழ் நிலைகளுக்கு வந்ததாகவும் பேசி தங்களுக்குப் பிச்சையிடுவோர், மற்றும் தங்களிடன் வருவோர் போவோரிடமெல்லாம் சொல்வது ஒரு மனவியாதி (மனச்சிதைவு நோய்) என்கிறது மனோதத்துவம். Schizophrenia. It has many sub-kinds or symptoms one of which is megalomania which makes the victim imagine himself as a VIP or connected with a VVIP. In some cases, the victim imagines himself as an avatar of God like Krishna avatar and blesses the passers-by. In some cases, the victim imagines himself as living in an ancient past and a king. Here, the roadside umbrella repairer imagines himself as a person who was connected in a negative way the VVIP. To get victimised by a VVIP gives him an extraordinary aura, which he enjoys retelling in the hope that the listener will be bewitched and will think the repairer as an extraordinary human being. Our essayist has fallen into the trap and wants all of us to fall along with him !

  இந்த மனவியல் கூற்றை வைத்து தமிழ்ச்சினிமா தனது நகைச்சுவைக் காட்சிகளையமைக்கிறது எனப்பல படங்களில் காணலாம். விவேக், செந்தில் போன்றவர்கள் செய்திருக்கிறார்கள்.

 5. Avatar
  காவ்யா says:

  I know two cases personally. One boy from AP. He imagines himself as a Krishna avtar and believes it. In office, he misbehaved and was charge-sheeted. He enters the room of the officer who issued the charge sheet, tore it into pieces, poured the confetti upon the officer’s head. The officer wd have taken it seriously but for the next act of my friend. My friend sat on the sofa in a yoga muthra and said, I am blessing you. I am a Krishna avtar. The officer understood it, and gently went near him to receive the blessings and told him that he was fortunate to receive them. Thereafter, my friend quit the room. The officer did not take any action upon him but the earlier charge sheet remained and my friend was suspended. Later when an occasion came, he was transferred to AP and my friend boasted that the transfer was effected by his own divine powers.

  In another case, who is also my friend, I used to meet him standing near the front gate. When asked, my friend told me: The morning he received a call from the Minister who wanted him desperately to solve a problem. He is waiting for the Minister.

  In yet another case, who is not my friend, but an acquaintance only, he used to tell me that he is waiting for his wife to pick her up to go home. Both of them were working in different offices. Who is your wife? He named an IAS officer. How comes ? She loved me and begged me to marry her. I took pity on her and married her. He was just 23 at the time, and got a job six months back, and was unmarried.

  Detect the symptoms early and get cured. Cure is possible.

 6. Avatar
  லெட்சுமணன் says:

  குடைக்காரர் என்னிடம் சொன்னது முற்றிலும் உண்மை கோச்சா சார். அவர் சொன்னவிதத்தில் எனக்கு அவர் சொன்ன விசயம் உண்மயாத்தான் பட்டது.

  குடைக்காரர் சொன்ன பிரமுகர் இன்றும் பிரமுகராக இருக்கலாம் அல்லவா? மேலும் குடைக்காரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த பிரமுகரை சொல்ல பயந்தும் இருக்கலாம்.

  காவ்யா கூற்றின் படி, நான் சொல்லி இருக்கும் குடைக்காரர் பொய்.
  ஆனால், காவ்யா கூறியிருப்பவர்கள் முற்றிலும் உண்மை என்று வாசகர்களே நம்புங்கள்.

  1. Avatar
   காவ்யா says:

   ஆனால், காவ்யா கூறியிருப்பவர்கள் …//

   If u don’t want to take those cases seriously, find out from a psychiatrist about such cases. He knows many.

   இந்த மாதிரி மனச்சிதைவு நோய் பெண்களில் அனேகம். ஒரு சமயம் அரசு மணிமேகலை என்ற எழுத்தாளர் எழுதியது நினைவுக்கு வருகிறது. அரசு மணிமேகலை, சென்னை அரசு பெண்கள் கலைக்கல்லூரி (எத்திராஜ் கல்லூரிக்கருகில், மவுண்டு ரோடு திருப்பத்தில் உள்ளது) முன்னாள் தமிழ்ப்பேராசிரியர். இவர் மாணவி ஒருத்தி சிவ பெருமானைத் தன்கணவனாக நினைத்து வழிபட்டுவந்தார். மணம் செய்யும் காலம் வந்தவுடன், தன் பெற்றோரிடமும் தன் கணவன் சிவனே என்று சொல்லி. ஆண்டாளைப்போல, மானிடருக்கெனில் வாழ்க்கைப்படேன் என்று இருந்து விட்டார்.. பின் சிலவாண்டுகளாக அவருக்கு மனநல மருத்துவரிடம் கொண்டு சென்று சரி செய்ய்ப்பட்டார்.

   மன் நோய் விபரீதமானது. நம்ப முடியாமல் நிறைய உண்டு. பக்தியால் பைத்தியமானவர்கள் அனேகர்.

   ஒரு வாழ்க்கை சீராகப்போய்க்கொண்டிருந்தால், வாழ்பவர் தமக்கு எதுவும் நேராது என்று முழக்கமுழுக்க நம்பி விடுவார். ஒரு நாள், அவ்வாழ்க்கை திசை திரும்பும் போது அவர்களால் தாங்க முடியாது. பைத்தியமாகி விடுவர்.

   பெரிய பதவியிலிருந்து கீழ் நிலைக்கு வருபவர்கள் பல காரணங்களைச் சொல்வார்கள். உற்றுணரும் போது – மனவியல் மூலமாக – அவர்களிடம் மன நோய் இருப்பது தெரிய வரும். அதை காலாகாலத்தில் அறிந்து அவரை மனநல மருத்துவரிடம் கொண்டு சென்றிருந்தால், அவர் ஒருவேளை குணமடையக்கூடும். முற்றியவுடன் பெரும்பாடு.

   இப்படிப்பட்டவர்களை சாலையோரங்களில் காணலாம். சிலர் மனு எழுதிக்கொண்டேயிருப்பார்கள் முதலமைச்சருக்கு, பிரதமருக்கு என்று. அவர்களை ஆராயும் போது என்ன தெரியும் என்றால் அவர்கள் அரசில் பதவியில் எதுவே தமக்கு நேரா என்ற உணர்வில் மகிழ்ச்சியாக வாழும்போது தீடீரென ஒரு விடயத்தில் மாட்டப்பட்டு அனியாயமாக பதவியை இழப்பார். அந்த அதிர்ச்சி அவர்களின் மனத்தைச் சிதைத்து விடும். அவர்கள் இப்படியாவார்கள். சில்லாண்டுகளுக்கு முன் தில்லி பிளானிங்கமிசன் முன்பு ஒருவர் இப்படித்தான் அமர்ந்திருந்தார். அவர் அடவைஸராக இருந்தாராம். ஒரு நாள் வேலையில் பிழைபண்ண கேள்விகள் கேட்கப்ப்ட்டடதால், தன்னை நிரூபிக்க முடியாததால் மனச்சிதைவாகி விட்டார்.

   போன மாதச்செய்தியில், புதுச்சேரி ரோட்டோரம் ஒரு ஐபிஎஸ் அதிகாரி வாழ்கிறார். மனனோயால வேலையிலிருந்து நீக்கப்பட்டவர். அவரிடன் கேட்டால் அவர் காரணங்கள் சொல்வார். ஆராயின் அவரின் நோய் புலனாகும்.

   லட்சுமணன், வாழ்க்கையை உற்றுப்பாருங்கள். விபரீதங்களைக்காணும் போது அது விபரீதம் என்று புரியும். குடைக்காரர் என்னைப்பொருத்தவரை மனனோய் உடையவரே. ஆனால் அது முற்றிவிடாமல் அவர் கைத்தொழில் அவரைக்காப்பாற்றிக்கொண்டு வருகிறது.

 7. Avatar
  GovindGocha says:

  காவ்யா ஒருவருக்கு தான் அனைத்தும் இந்த உலகில் சரியாக தெரியும்… நல்ல வேளை இவர் நீதிபதியாக இல்லை… இருந்திருந்தால் எல்லா கேஸ்களிலும், குற்றவாளி, குற்றம் சாட்டப்பட்டவர் இருவருமே மனவியாதி என்று தீர்ப்பளித்து விடுவார்…

  1. Avatar
   காவ்யா says:

   I like this comment much.

   It is indeed one of the crucial points of criminal justice system in English law or Roman law which we follow in India, namely, the accused should be mentally sound. If he is not, he cant be put on trial; nor kept in jail as an undertrail. The Judge will order he be sent to an lunatic asylum for treatment.

   In the event the accused is convicted and sentenced to death, like in the case of the Rajiv killers, even then it should be ensured that they are right not mentally sound. On the day of hanging, an hour before, the psychiatrist should certify that the man to hang is sound in mind. If he traces an iota of unsoundness, the convicted person should not be hanged. The sentence should be immediately withheld. He should be sent for treatment. The sentence will be held in abyance till the doctor finds him cured of the unsoundness – and, what an irony to say this – HE IS FIT TO BE KILLED so far as his mind is concerned.

   Strange are the way of the law of the civilized society ! We are not even able to hang a man who was the proved killer beyond all reasonable doubt !

   Thanks Govind, a fine point of law is the kernel of your comment!

   1. Avatar
    GovindGocha says:

    என்ன சந்தடி சாக்கில் ராஜீவ் கொலையாளிகளுக்கு ஐடியா கொடுக்கிறீர்களா..? :)

    1. Avatar
     காவ்யா says:

     Not like that.

     Don’t worry such an event wont happen in the Rajiv assassination case coz the hanging is not without political element mixed. It s like a police encounter i.e even if the renegade is defenceless, he will b shot dead and the police wd explain he had attempted to kill them. Similarly, if the convict facing the noose really falls sick, or shows symptoms of madness, yet the doctor will certify positively. The doctor is the paid government servant and so, wont like to embroil himself in controversies.

     In normal circumstances, i.e hanging in an average murder case, such an event s possible. If any one falls sick on the D-day, hanging will be withheld till he is cured and medically fit to be hanged.

     In all cases, either well publicised political assassination or an obscure murder of a common citizen, the cases of hanging postponed on the grounds of unsoundness of the mind of the convict, r very very rare.

     U r comparing me to a Judge. That is nice inasmuch as it may elicit the following elucidation.

     A Judge, during a hearing, suspects a witness, or the accused to be talking incoherently, and is convinced that the incoherence is not voluntary but an indication of unsoundness of mind, he will at once adjourn the hearing till such time the doctor says that the accused is medically fit to be listened to; or interrogated.

     This s how our system functions.

  1. Avatar
   காவ்யா says:

   Who has not laughed at lunatics ? I, too, as a street urchin did throw stones at the semi naked lunatics. Looking back, I feel ashamed.

 8. Avatar
  லெட்சுமணன் says:

  Schizophrenia என்பது எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் உடல் கோளாறு. இது முற்றிலும் உடல்(மூளை) சார்ந்த பிரச்சினை. எதார்த்தத்துக்கும், கற்பனைக்குமான வித்தியாசம் தெரியாமல் குழம்பி தவிப்பார்கள். உதாரணமாக கானல் நீரை பார்ப்பார்கள். அந்த இடத்திற்கு சென்றவுடன் நீரை காணாமல் கோபப்படுவார்கள்.
  தற்கொலைக்கு கூட முயல்வார்கள்.

  இந்த நிலையில் இருப்பவர்கள் யாரையும், எதையும் நம்ப மாட்டார்கள். மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை கூட நம்ப மறுப்பார்கள். தன்னை சுற்றி ஏதோ சூழ்ச்சி நடப்பதாகவும், தன்னுடன் சம்பந்தபட்டவர்கள் எல்லாம் ஏதோ சதி செய்வதாகவும் நினைப்பார்கள். இந்த மனப்பிறழ்ச்சி நிலை மூளையில் உள்ள ”டோபமைன்” என்ற வேதியல் பொருளின் அளவு மாறுபாட்டால்(Chemical Imbalance) நிகழ்கிறது. அவர்களால் எந்த வேலையையும் உருப்படியாக செய்யமுடியாது. இல்லாத உண்மையை தேடி அலைவார்கள். சம்பந்தம் இல்லாத விசயங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி குழம்புவார்கள். அவர்கள் நினைத்த விசயம் உண்மை இல்லையே என்று மிகுந்த கோபம் அடைவார்கள். தான் சொல்வது மட்டுமே உண்மை என்று நம்புவார்கள். இதற்கு ZISPER FORTE,TOPAZ MD & ICLOSURE போன்ற மருந்துகள் மருத்துவர்களால் தரப்படுகிறது.

  மருத்துவரிடம் செல்ல வேண்டியது காவ்யாவா அல்லது குடைக்காரரா என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

 9. Avatar
  காவ்யா says:

  நானறிந்த வரையில் கிசோப்ரீனியா (schizophrenia) என்பதை தமிழில் மனச்சிதைவு நோய் என்றுதான் சொல்வார்கள். இன்னோய் பலவகைகளில் தாக்கும் அவற்றுள் சில லட்சுமணன் சொன்னவை. சொல்லாமல் விட்ட ஒன்றுதான் மெகலனோமேனியா. பாதிக்கப்பட்டவர் தன்னை ஒரு பிறருக்கு ஆச்சரியத்தை உருவாக்கும் தன்மைகொண்ட ஆளுமையாகக் கருதி பின்னர் அந்த ஆளுமையை உண்மையென்று நினைக்கும் கட்டத்தை அவர் அடையும் போது அன்னோயில் முழுத்தாக்கத்துக்கும் ஆளாகிறார். நான் மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் இவவகையைச்சாரும்.

  The victim initially starts imagining himself another personality which he wanted to become but could not. Most probably, he wanted to be the kind of personality he sees and wants to be, (because imagination requires some hinterland) like an actor, a CEO, a Minister and the like. The assumption may initially be by fits and starts. But as he gets more and more pleasure out of the fantasy, he begins to assume the fantasy as real; and at one point of time, he completely believes fantasy. In the case of the fictitious character in the feature film Anniyan, it is called multiple personality disorder, but in other cases, it is not. There, the real personality gets killed for ever, and in its place, the false personality takes over tenaciously. He becomes fully mad acting and behaving the fantasy personality only.

  குடை ரிப்பேர்க்காரன் பிளாட்பாரப்பேர்வழிகளில் ஒருவன். நேர்மையான கைத்தொழில் ஒன்றை வைத்துப் பிழைப்பவானையிருந்தாலும், அவனுள் இருக்கும் தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை இவை அவனை தன்னை ஒரு பெரும் புள்ளியாக அல்லது புள்ளியோடு சம்பந்தப்பட்டவனாக கற்பனை பண்ணி சுய இன்பம் காணத் தூண்டும். அதைப்பிறரிடம் பரிமாறிக்கொண்டு அதை அவர்கள் நம்புவதுபோலத் தெரிந்தால் அவனுக்கு இருக்கும் கற்பனை அதிகமாகி ஒரு கட்டத்தில் தன் பொய்யான கற்பனை ஆளுமையை நம்பிவிடுவான். Our umbrella repairer, as I have said already, is saved from completely falling into the fantastic madness by his profession i.e mending umbrellas.

  பொதுவாக வாழ்வின் கீழ்த்தட்டு மனிதர்களிடம், அல்லது சிறுவேலைகளைப் பார்த்துக்கொள்பவர்களும், பெண்களில் அழகிருந்தும் உயர்னிலையை அடையாமல் தவிப்பர்களும், தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என முடிவு கட்டியவர்களுக்கும் இது தாக்கும். ஆயினும், மூளையின் ரசாயன மாற்றங்கள், மற்றும் மரபணுக்கள் இவையும் காரணமாகும்.

  என்னால் குடை ரிப்பேர்க்காரனைக்கண்டு பரிதாபபடாமல் இருக்க முடியவில்லை.

  All personality disorders in the case of creative writers are helpful as it helps them create master pieces or great literary work. Neurosis and Art, more often that not, go together.

 10. Avatar
  லெட்சுமணன் says:

  *//Our umbrella repairer,//* – குடைக்காரரை நம்மில் ஒருவராக்கி, அவரும் சமூகத்தின் அங்கம் என்பதை உணர்த்தும் இந்த வரிகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

  *//குடை ரிப்பேர்க்காரன் பிளாட்பாரப்பேர்வழிகளில் ஒருவன்.//*, *//என்னால் குடை ரிப்பேர்க்காரனைக்கண்டு //*

  ஆரம்பத்தில் ”குடைக்காரர்” என்று மரியாதையாக ஆரம்பித்த உங்களின் கருத்துக்கள், போக போக மரியாதைக் குறைவாகவும், தரக்குறைவாகவும் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

 11. Avatar
  காவ்யா says:

  The repairers of umbrellas in my mges is a ‘subject BEING” for psychological examination. Therefore, he can be referred to in singular. Doctors or scientists don’t even refer to them as beings, instead they just say, the subject.

 12. Avatar
  லெட்சுமணன் says:

  ஜெய்குமார் – 70-களில் சம்பவம் நடந்ததாக குடைக்காரர் சொன்னார். தற்போதைய அரசியல் கைதுகளில் கூட போலீஸ் அதிகாரிகள் ஒதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது.

  காவ்யா –

  “Schizophrenia people can be made whole. Mental illness is like any other illness. Response to treatment should not be sidelined from the mainstream of medicine….. When we can tolerate a drunkard, why not a schizophrenic? Give affection. Be Considerate”——
  By Dr.Sarada Menon – Winner of the Padma Bhusan in 1992 and 4 lifetime achievement awards among many others in the ensuring years, 88 – year old in the field of psychiatry is an indelible mark of commitment, excellence and love for humanity.

  She founded Schizophrenia Research Foundation(SCARF) in Chennai.

  – The Hindu Magazine Dated – 30/10/2011

  நான் காவ்யா மரியாதைக் குறைவாக schizophrenic patient-ஐ அழைப்பதையும், அதற்கு டாக்டர்களை துணைக்கு அழைத்ததையுமே மறுத்திருக்கிறேன்.

  குடைக்காரர் schizophrenic என்பதை ஒத்துக்கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *