பளீர் என்ற ஒளிபரப்பு…
எரிச்சல் படுத்தாத வணக்கம்ம்ம்ம்ம்ம்ம் என்று நம்மளை கொல்லாத, இனிய புத்தும் புதிதான செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள்….
எண்ணத் துணிவு, வண்ணத் தெளிவாக, செய்திகளை பாரபட்சமின்றி உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை டிவிக்கு ஒரு சபாஷ்.
ஹிந்தியில் இருக்கும் சில செய்தி சேனல்கள் பார்த்து பெருமூச்சு மட்டும் விட்டு வந்த தமிழர்களுக்கு நிம்மதியான ஒரு சேனல்.
இதில் விசேஷம் என்னவென்றால் இதை இணையம் மூலமாகவும் அதே நேரத்தில் – அதாவது டிவியில் பார்க்கும் அதே ஒளிபரப்பு நேரத்தில் எந்த காலதாமதமும் இன்றி உலகின் எம்மூலையில் இருப்பினும் பார்க்கலாம்…
இணைய ஒளிபரப்பு முகவரி http://www.puthiyathalaimurai.tv/
உலகத் தமிழர்கள் வரலாற்றில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் மானிட்டரில் வந்துள்ளது…
இதில் பெரும்பங்காற்றும் வல்லுநராக இருக்கும் திரு.மாலன், அவர்களுக்கு… வாழ்த்துக்கள்…
இதை கொணர்ந்த எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் திரு.பச்சைமுத்து, திரு.சத்யநாராயணா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்
ஒரு கோரிக்கை.: தயவு செய்து பிற சேனல்களில் இருந்து பிரபலமானவர்கள் என்று நினைத்து செய்தி மற்றும் பிற தொகுப்பாளர்களை நிகழ்ச்சியில் காண்பித்து விடாதீர்கள்… ரொம்ப நொந்து போயிருக்கோம்… உங்க டிவி ஆறுதலாய் மலர்ச்சியாய் இருக்கிறது … தொடரட்டும் அப்படியே…
அது சரி , குறைகளே இல்லையா என்றால் சில இருக்கின்றன……
– ஒரு செய்தி கலந்துரையாடலில் – அதிமுகவின் சி.கே.சரஸ்வதியும், திமுகவின் ஒரு வக்கீலும் பங்கேற்ற நிகழ்ச்சி… – நிகழ்ச்சி நடத்துபவர், கலைஞர் என்று சொல்லி விட்டு பின், ”… பாருங்க கட்சிகாரருடன் பேசி விட்டு நானும் கலைஞர் என்று சொல்லி விட்டேன்…. அது சரி பெரியவர் தானே…. “ என்று ஏதோ செய்யக்கூடாத தவறைச் செய்து விட்டது போல் , “கருணாநிதி…. “ என்று தொடர்ந்தார்.
– மேலும், கள செய்தி சேகரிப்பவர் வேட்பாளரிடம் பேசும் போது வெறும் பெயர் சொல்லி பேசினார்கள்…
இது எந்த வகையில் சேர்த்தி. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கலாச்சார முறை இருக்கிறது. அமெரிக்காவில் ‘’’ ஹலோ ஒபாமா…” என்று சொல்வார்களாயிருக்கும்…
அதற்காக நம்து பண்பான திரு, திருமதி, அய்யா , அம்மா , செல்வி என்று முகமனுடன் சொன்னால் என்ன…?
ஏன் அதே செய்தியாளர்கள், இந்த டிவியை நடத்துபவரைக் குறிப்பிடும் போது திரு.பச்சைமுத்து என்று தானே சொல்வார்கள்…?
23 வயது தாண்டது பொடிசுகளெல்லாம், வயதில் முதிர்ந்தவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவது நெருடுகிறது.
அவர்களின் அப்பா அம்மாவை இது மாதிரி வெறும் பெயர் சொல்லி அடுத்த சிறுவன் கூப்பிடுவது போல் நினைத்துப் பார்த்தல் நன்று…
திரு.மாலன் காட்டும் திசை இது தானா…?
நாகரீகத்திற்கு ஒரு அடையாளாம் போல் நான் பார்த்த திரு.மாலன் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
திரு.மாலனை கடுமையாக விமர்சனம் செய்தவர்களே அங்கு மேலான்மை குழுவில் இருப்பதால் அவரால் இது முடியவில்லையா என்றும் தெரியவில்லை….
அதே மாதிரி, செய்தி சேகரிப்பில் மறைமுகமாக திமுக/ அதிமுக விற்கான எதிர் பிரச்சாரமும் இருக்கிறது.
நீண்ட நோக்கில் அது சறுக்கலாக கூட அமையலாம்.
ஐ.ஜே.கே கட்சியின் அதிகார மையத்தால் நடத்தப்படும் தொலைக்காட்சியாக இருப்பினும் இதைத் தவிர்ப்பது நன்று…
மற்றபடி தேர்தல் கள நிகழ்வுக்ளை நன்றாக ஒளிபரப்பினார்கள்…
செய்தி :கோவிந்த் கோச்சா…
- மந்திரப்பூனை. நூல் பார்வை.
- வரவேற்போம் தீபாவளியை!
- Murugan Temple Maryland Upcoming Events
- கூடங்குளம் மின்சக்தி ஆலையம்
- மிம்பர்படியில் தோழர்
- ஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து
- விருந்து
- வீட்டுக்குள்ளும் வானம்
- அவசரமாய் ஒரு காதலி தேவை
- ஒரு வழியாய் தமிழில் உருப்படியாய் ஒர் செய்தி சேனல்….
- ஆபிஸ் கைடு : புத்தக விமர்சனம்
- சொல்லி விடாதீர்கள்
- முத்து டிராகன் – சீன நாடோடிக் கதை
- சுடர் மறந்த அகல்
- The Hindu Temple, Happy Valley. Hong Kong `Skandha Sashti’
- விவாகரத்தின் பின்னர்
- ஃப்ரெஷ்
- ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)
- கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?
- காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்
- தகுதியுள்ளது..
- ஓய்வும் பயணமும்.
- அமுத பாரதியும் நானும் சிறகு இரவிச்சந்திரன்
- உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய்,
- மென் இலக்குகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -1)
- அந்த நொடி
- பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…
- நெஞ்சிற்கு நீதி
- ஜென் ஒரு புரிதல் – பகுதி -16
- சாத்துக்குடிப் பழம்
- திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்
- நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவரா
- பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி
- முன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 12
அவசரப்படாதீர்கள். மக்கள் டி.வி. வந்த புதிதில் இப்படித்தான் ஆகா..ஓகோ என்று புகழ்ந்தார்கள். விரைவிலேயே அது தன் வன்னிய ஜாதி வெறியை வெளிப்படுத்தியது. இப்போது புதியதலைமுறை. இதுவும் விரைவிலேயே தன் உடையார் ஜாதி வெறியை வெளிப்படுத்தும். கருணாநிதியைக் கலைஞர் என்றெல்லாம் விளிக்காமல் கருணாநிதி என்றே சொல்வதை மட்டும் இப்போதைக்குப் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
ஒத்துக்கொள்கிறேன்… ஆனால்… அவசரமில்லை… நன்றாக தொடர்வது அவர்கள் இஷ்டம்… கட்சிகளின் ஓட்டு விஜய்காந்த் சரிவு என்றவர்கள் இந்த தொலைக்காட்சி ஓனரின் கட்சி ஐஜேகே…. 100 ஓட்டு 15ஒ ஓட்டு வாங்கியது பற்றி எந்த பேச்சு மூச்சும் காணோம்… தகரடப்பா குரலில் ஒரு செய்தியாளர் பேசுவது என்று இருக்கிறது சரி செய்ய நிறைய…
தன் உடையார் ஜாதி வெறியை ……? ஏன் அப்படி எதை வைத்து சொல்கிறீர்கள்…?
பச்சைமுத்து வேறு எந்த ஜாதிக்காரர் என்று நினைக்கிறீர்கள்?
வெளிநாட்டில் வாழும் என் போன்றோர்க்கு பயன் தரும் வகையில் இணையம் மூலமும் பார்க்கலாம் என ஒரு நல்ல விசயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரரே!
வடிவமைப்பு, செய்தி சொல்லும் முறை அனைத்தும் போரடிக்கும் தன்மையானது. செய்திகள் தொகுப்பில் சாரமில்லை. கத்துக்குட்டிகள் நடத்தும் லோக்கல் சானல் போல இருக்கிறது.
Full of leftist views. They are not neutral.
ஆனால், அங்கு மேலான்மை குழுவில் பெரும்பாலோர் அய்யர்களே :) . சீரியல் எல்லாம் வரப் போகிறதாம்… வெறும் கவிதாலயா பாணி காமெடி என்ற பெயரில் படுத்தாமல் சரி… உடையார் என்பதால் அந்த ஜாதியை அவர் சப்போர்ட் செய்வார் என்று நினைக்க வேண்டாம். அவர் கட்சி ஆரம்பித்தது தன் நிறுவனத்திற்கு வரவிருந்த ஒரு ஆபத்திலிருந்து தப்பிக்க… அது வேறு டாபிக்… டிவியில் எனக்கு பிடித்த ஒரே விஷயம் சன், ஜெயா தயங்கிய இணைய மூல உடனடி ஒளிபரப்பைக் கொணர்ந்தது…
ஊடகவியலைப் பொறுத்தவரை – குறிப்பாக செய்திகளில் எந்தவொரு நபரையும் அவரைக் கௌரவப்படுத்தும் அடைமொழிகளைப் பயன்படுத்திக் குறிப்பிடக் கூடாது என்பது விதிமுறை!
உதாரணமாக, ஜனாதிபதி – பிரதமரைப் பேட்டி காணும் போது கூட, அவருடைய பெயரைச் சொல்லி அழைத்தலே பொருத்தமாகும்.
நமது நாகரீகம், கலாசாரம் என்பதையெல்லாம் ஊடகவியலின் பொது விதிகளில் போட்டுக் குழப்பி விடக் கூடாது!
மேலாண்மைக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று குறிப்பாகச் சொல்ல முடியுமா?
ஊடகவியல் பொதுவிதி என்று சட்டம் ஏதும் இருக்கா தெரியவில்லை…. வெள்ளைக்காரன் பேர் சொல்லி கூப்பிடுவான் என்று வயதில் மூத்தோரை பெயர் சொல்லி கூப்பிடுதல் சரியென்றால், வெள்ளைத் தோலான் கொள்ளையடித்தது போல் நாமும் செய்வது தவறல்ல என்ற வாதமும் வந்து விடும்….
நான்கு மாதங்கள் அமெரிக்காவில் இருந்துவிட்டு சென்ற வாரம் தான் வந்தேன். புதிய தலைமுறை டி.வி. சானலைத் தினமும் பார்த்து வருகிறேன். மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. நான் காணும் சில குறைகள்:
1. தொழில்பயிலும் கத்துக்குட்டிகள் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். போகப்போகச் சரியாகிவிடும் என்று நம்பலாம்.
2. Format படிமம் இன்னும் சரியாக அமையவில்லை.
3. உள்ளூர்ச் செய்திகள் தேவைக்கு அதிகமான அளவில் இடம்பெறுகின்றன.
4. Human angle செய்தித் தொகுப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
5. வல்லுநர்களின் வாய்ப்பேச்சைவிட செய்தி ஆசிரியரின் அரசியல் அலசல்கள் மிகமிகத் தேவை.
வழிப்போக்கன்
dear mr.Govinda kochar!
good coverage .makkal tv is also presenting good proggrammae
nothing wrong if it is pro vudaiyar unless it hurts other sect sendiments.the magazine and tv is presented in attractive way
narayanan
Makkal tv never betrays that it belonged to vanniyar caste.It is forerunner in making pure Tamil speaking possible in tv media.When you are running a tv channel in TN,you should follow Tamil culture of calling elders with due respect whether you admire their political views or not.Unfortunately ADMK only started calling names of opponents without respect.The bad example is followed by DMDK.Even though Periyar and Rajaji differed in their ideologies,they maintained good friendship.In Delhi also,you can see Soniya Gandhi and Advani exchanging pleasantries when they meet in common functions.As told by Govind Kocha,Mr.Maalan,who is respected for his decent politics should show a new path of running the channel in a decent manner.